தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில திமுக தலைவரும் தமிழக் முதல்வருமான மு கருணாநிதி வெளியிடும் விரிவான பிரச்சார அறிக்கைகள், குறிப்பாக ஆளும் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கைகள், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறுபவையாக உள்ளன.
இவை செய்தியாகுமா? இவற்றை விளம்பரமாக வெளியிடுவது தானே முறை ? அரசின் சாதனைகளை விரிவான அறிக்கையாகத் தரும்போது அவற்றை அப்படியே வெளியிடும்போது, அது செய்தியைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து விவாதங்கள் நடத்த்ப் பட வேண்டும்.
மாதிரிக்காக, தினத்த்ந்தியிலும், தினகரனிலும் இன்று (06 03 2011) வெளியாகியுள்ள விரிவான பிரச்சார அறிக்கையினை கீழே தருகிறோம்:
மாதிரிக்காக, தினத்த்ந்தியிலும், தினகரனிலும் இன்று (06 03 2011) வெளியாகியுள்ள விரிவான பிரச்சார அறிக்கையினை கீழே தருகிறோம்:
அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுகூட தொடங்கப்படவில்லை
தி.மு.க. ஆட்சியில்தான் புதிதாக 12 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன
முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கை
சென்னை, மார்ச் 6-
தி.மு.க. ஆட்சியில்தான் புதிதாக 12 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுகூட தொடங்கப்படவில்லை என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வித்துறை பிரிப்பு
கல்வித் துறை ஒரே துறையாகவும், ஒரே அமைச்சரின் கீழும் செயலாற்றியதை மாற்றி, அதனை இரண்டு துறையாக அமைத்ததும் தி.மு.க. அரசுதான்; கல்விக்காக இரண்டு அமைச்சர்களை நியமித்ததும் தி.மு.க. அரசுதான். இது ஒன்றிலிருந்தே இந்தத் துறைக்காக தி.மு.க. அரசு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
2006-ம் ஆண்டுக்கு முன்னர் ஒரே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கல்வித்துறை என்பது 2006-ல் பள்ளிக் கல்வித்துறை எனவும், உயர்கல்வித்துறை எனவும் தனித்தனித் துறைகளாகப் பிரிக்கப்பட்டு; உயர்கல்விக் கெனத் தனி அமைச்சகமும் புதிதாக ஏற்படுத்தப்பட்டது.
பொது நுழைவுத் தேர்வு ரத்து
கிராமப்புற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவு மிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 5-3-2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது.
நுழைவுத் தேர்வு இருந்தபோது, 2006-ல் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையின் மூலம் சேர்ந்த கிராமப்புற மாணவர் எண்ணிக்கை 24,670 மட்டுமே. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டபின், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2007-ல் 34 ஆயிரத்து 69 எனவும், 2008-ல் 50 ஆயிரத்து 589 எனவும், 2009-ல் 54 ஆயிரத்து 73 எனவும், 2010-ல் 76 ஆயிரத்து 73 எனவும் அதிகரித்தது.
தமிழ் வழி கல்வி
2006-ல் நுழைவுத் தேர்வு இருந்தபோது, தமிழ்வழியில் பிளஸ்-2 பயின்ற 11 ஆயிரத்து 799 மாணவர்கள் மட்டுமே ஒற்றைச் சாளர முறையின் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர்; நுழைவுத்தேர்வு ரத்து செய்த பிறகு, இந்த மாணவர்கள் எண்ணிக்கை 2007-ல் 19 ஆயிரத்து 966 எனவும், 2008-ல் 34 ஆயிரத்து 39 எனவும், 2009-ல் 35 ஆயிரத்து 434 எனவும், 2010-ல் 54 ஆயிரத்து 460 எனவும் அதிகரித்து; தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் பயன்பெற்றனர்.
2010-2011-ம் கல்வியாண்டு முதல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு; அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் 12 ஆயிரத்து 784 பட்டமேற்படிப்பு மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
2007-ம் ஆண்டு வரையில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் செலுத்தி வந்த 2,500 ரூபாய் கல்விக்கட்டணம் 2008-2009-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு; 2010-2011-ம் ஆண்டு வரையில் 63 ஆயிரத்து 192 மாணவ மாணவியர் பயனடைந்தனர்.
கல்வி கட்டணம் விலக்கு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களிக்கப் பட்டுள்ளது.
அரசுக் கல்லூரி மாணவர்களின் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுத்திட அகல்கற்றையுடன் கூடிய இணையதள வசதிகள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் அரசுக் கல்லூரிகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 2 கோடியே 98 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்ச் செலவில் 27 அரசுக் கல்லூரிகளுக்கு 681 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னோடி திட்டம்
சென்னை மாநிலக் கல்லூரியின் மாலை நேரப் பகுதிப் பிரிவில் 2007-2008 கல்வியாண்டு முதல் இந்தியாவிலேயே ஒரு முன்னோடித் திட்டமாக செவித்திறன் குறைந்தோர்க்கு தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பி.காம். (பொது), பி.சி.ஏ. (கணினி பயன்பாடு) ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன.
அரசு பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுயநிதி பாடப்பிரிவுகள் அனைத்தும் பொதுவகை பாடப்பிரிவுகளாக மாற்றப்பட்டு, கல்விக் கட்டணம் குறைந்து, ஏழை மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிவகுக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் குறைப்பு
2006-ம் ஆண்டு வரையில் அரசு பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர் செலுத்தி வந்த கல்விக் கட்டணம் 12,550 ரூபாய் 2006-2007-ம் ஆண்டு முதல் 7,550 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை இந்தியாவிலேயே முதன்முறையாக 2010-2011-ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு; அரசுக்கு 168 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் சேர்ந்து பயிலும் 67,405 மாணவ மாணவியரும்; இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயிலும் 10,750 மாணவ மாணவியரும் பயனடைந்தனர்.
பொறியியல் கல்லூரிகளில் மேலும் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு உதவும் வகையில் 2008-2009-ம் ஆண்டு முதல், பொறியியற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கானக் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் குறைத்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.
சலுகை கட்டணம்
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகம் 2007-2008-ம் ஆண்டு முதல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; 2010-2011-ம் ஆண்டு வரை 33,250 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
2006-ம் ஆண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில்தான் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன.
இலவச பயண அட்டை
ஆனால், 2007-2008-ம் ஆண்டு முதல் தி.மு.க. அரசினால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பயணப் பேருந்து அட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; 2009-2010-ம் ஆண்டு வரையில், 4,35,356 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
2006-ம் ஆண்டு வரை ஒரு கல்லூரியில் சேர்க்கைபெற ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. 2007-2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கல்லூரியையும் தனி அலகாகக் கொண்டு ஒரு மாணவன் தான் விரும்பும் பாடப்பிரிவுகளைக் குறிப்பிட்டு ஒரேயொரு விண்ணப்பம் அளித்தால் போதுமானது என ஆணையிடப்பட்டு; அதன்படி, மாணவர்களின் தகுதி அடிப்படையில் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவு கலந்தாய்வு முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெற்றோரும் மாணவரும் பெரும் பயன் எய்தி வருகின்றனர்.
ஒற்றைச்சாளர முÛ
2007-2008-ம் ஆண்டு முதல் அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டு; கலந்தாய்வு மூலம் மாணவ மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். 2006-2007-ம் ஆண்டு முதல் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாற்று முறை நடைமுறைப்படுத்தப்பட்டு; ஆண்டுதோறும் ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
2009-2010-ம் ஆண்டு முதல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் மாற்றுமுறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; ஆண்டுதோறும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து பயனடைகின்றனர்.
அரசு ஒதுக்கீடு
2006-க்கு முன்னர் சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளில் 30 விழுக்காடு இடங்களும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இருந்தன. சுயநிதி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினருடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக 2006-2007-ம் ஆண்டு முதல் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்கள் எனவும், சிறுபான்மையல்லாத கல்லூரிகளில் 65 விழுக்காடு இடங்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டு; ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுகின்றனர்.
அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு நிதியுதவியுடன் நடைபெறும் பல்கலைக் கழக உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் 2005-2006-ம் கல்வியாண்டில் 4,917 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, தி.மு.க. அரசு தொடங்கிய பொறியியல் கல்லூரிகளால் 2010-2011-ம் கல்வியாண்டில் 12,142 ஆக அதிகரித்தது.
செம்மொழி மாநாடு
2010-ம் ஆண்டு ஜ×ன் மாதத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த தருணத்தில், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தாய்மொழியில் கற்க - தமிழ்மொழி மூலமாகக் கற்க வகைசெய்து இந்த அரசு ஆணையிட்டு; இந்த ஆண்டில் இப்பாடப் பிரிவுகளில் 2010-2011-ல் நிர்ணயிக்கப்பட்ட 1,400 இடங்களில் 1,378 மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.
2009-2010-ம் கல்வியாண்டுவரை, பொறியியல் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு; விடைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, 2010-2011-ம் ஆண்டு முதல், ஆங்கிலம் அல்லது தமிழில் வினாத் தாள்கள் வழங்கவும், விடைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் முறையை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் 12-ம் வகுப்பினை தமிழ்வழியில் படித்து, பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு நல்ல பயனை அளிப்பதாக அமைந்துள்ளது.
செம்மொழி பாடத்திட்டம்
இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளில் தமிழை ஒரு பாடப் பிரிவாகப் படிக்காமலேயே இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டங்களைப்பெற முடியும் என இதுவரை இருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2008-2009-ம் ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாக எடுத்து அதில் தேர்ச்சி பெறவேண்டும் என ஆணையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
"தமிழகத்தின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில், தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெறுவதற்கு ஆவன செய்யப்படும்'' எனக் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கேற்ப; செம்மொழிப் பாடத் திட்டம் பல்கலைக் கழகங்களின் வரம்புக்குட்பட்ட கல்லூரிகளில் 2010-2011 (இரண்டாம் பருவம்) முதல் பி.காம். பி.சி.ஏ, பாடப்பிரிவுகள் நீங்கலாக அனைத்துப் பாடப் பிரிவுகளிலும்; 2011-2012 முதல் பி.காம். பாடப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
புதிதாக பொறியியல் கல்லூரிகள்
நாடு சுதந்திரம் அடைவதற்குமுன் அரசு சார்பில் 2 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன; 2005-2006-ம் ஆண்டுவரை 6 பொறியியற் கல்லூரிகள்தான் செயல்பட்டன. 2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றுகூட தொடங்கப்பட வில்லை.
ஆனால், 2006-ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின், ஐந்தாண்டுகளில் திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், அரியலூர், ஆரணி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்டு தற்போது 18 அரசு பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
சட்ட திருத்தம்
அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாக முந்தைய அரசால் மாற்றப்பட்டன. இத்திட்டத்தில் எதிர்பார்த்த பயன்களை அடைய முடியவில்லை. இதனால் நிலவிவந்த குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்யும் முகத்தான் அரசு கல்லூரிகளுக்கு முன்னர் இருந்த தகுதியினை மீளவும் அளிப்பதென இந்த அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில், அனைத்து உறுப்புக் கல்லூரிகளும் இனிமேல் மீண்டும் முழு அளவிலான அரசு கல்லூரிகளாக செயல்படுவதற்காக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்கள் திருத்தப்பட்டன.
இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னதாக விவசாயிகளுக்கு திமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி முதல்வர் மு கருணாநிதி வெளியிட்டு, தினகரனில் முழுமையாக வெளியிடப் பட்ட அறிக்கையினை இங்கே அப்படியே தருகின்றோம்:
விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள்
சென்னை : விவசாயிகளுக்காக திமுக அரசு செய்துள்ள திட்டங்களையும்
சலுகைகளையும் முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தெரிவித்தபடி ஏற்காட்டில் 75 ஏக்கரில் குறிஞ்சிப் பூங்கா, திண்டுக்கல் சிறுமலைப் பகுதியில் 25 ஏக்கரில் முல்லைப் பூங்கா, தஞ்சை சாக்கோட்டையில் 21.47 ஏக்கரில் மருதம் பூங்கா, நாகை திருக்கடையூரில் 14.61 ஏக்கரில் நெய்தல் பூங்கா, ராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு கிராமத்தில் 25 ஏக்கரில் பாலைப் பூங்கா என ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரூ. 37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெறுகிறது.
சென்னை கதிட்ரல் சாலையில் ரூ.8 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாதவரத்தில் 28.16 ஏக்கர் பரப்பில் ரூ.5 கோடியே 93 லட்சம் செலவில் அலங்காரத் தோட்டம் மற்றும் செயல்விளக்கப் பூங்கா,
குற்றாலத்தில் 36.78 ஏக்கர் பரப்பில் ரூ.5.92 கோடியில் சுற்றுச்சூழல்
பூங்கா, ஏற்காட்டில் 47.25 ஏக்கரில் 11.26 கோடி செலவில் தாவரவியல் பூங்கா ஆகியவை அமைக்கப்படுகின்றன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, அண்ணா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை <br>ஸீ 1.59 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன.
5 ஆண்டுகளில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், அறுவடை இயந்திரங்கள் முதலிய வேளாண் இயந்திரங்கள் வாங்க 36813 விவசாயிகளுக்கு ஸீ86 கோடியே 71 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வாடகையில் விடுவதற்காக 25 கதிர் அறுவடை இயந்திரம், 50 டிராக்டர்கள் ரூ.6 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளன. தானிய விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் இழப்பினைக் குறைக்க ரூ.4.80 கோடி
செலவில் 200 உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முந்திரிக்கென
பண்ருட்டியில் ரூ.16.54 கோடி மதிப்பீட்டில் வேளாண் ஏற்றுமதி மண்டலம்
ஏற்படுத்தப் பட்டு, 1.53 கோடிக்கு முந்திரி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, காவல் கிணற்றில் ஸீ1.63 கோடி செலவில் மலர் ஏல
மையம்; அமைக்கப்பட்டுள்ளது. 2009;2010ல் நாளொன்றுக்கு 85756
மதிப்புள்ள 1500 கிலோ மலர்கள் 124 விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கலூரில் வெங்காயத்திற்கு, கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கு, பாலக்கோட்டில் தக்காளி, தேனி ஓடைப்பட்டியில் திராட்சைக்கென குளிர்பதன வசதியுடன் வணிக வளாகம் தலா ஒரு கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 4 கோடி செலவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை
மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டைக்கு அருகில் பொன்னவராயன்கோட்டை, உக்கடை கிராமத்தில் தென்னை வணிக வளாகம்
அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை நாவலூர், மதுரை முக்கம்பட்டி,
பெருந்துறையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர விளைபொருளுக்கு நவீன உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி பகுதியில் சேகரிப்பு மைய வசதிகளுடன் கூடிய விற்பனை முனையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சேலம் மேச்சேரியில் தக்காளி
குளிர்பதனக் கிட்டங்கி, திருப்பூர் பெதப்பம்பட்டியில் தேங்காய் வணிக வளாகம் ஆகியவற்றுடன் 1.50 கோடி செலவில் 10 இடங்களில் ஊரக வணிக மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி, நாமக்கல் மோகனூர், தூத்துக்குடி திருவைகுண்டம், தேனி சின்னமனூர் ஆகிய இடங்களில் தலா 50 லட்சம் ரூபாய் செலவில் வாழை பழுக்க வைக்கும் நான்கு கூடங்கள், கோவை காரமடையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மலைக் காய்கறிகளுக்கென விற்பனை வளாகம், மதுரையில்
36 லட்சம் ரூபாய் செலவில் நெல் வணிக வளாகத்தில் கூடுதல் கடைகள்
ஆகியவற்றுடன் ரூ.7.81 கோடி செலவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் காய்கறி வணிக வளாகம் ரூ.85 கோடி ரூபாய் செலவில் அமைக்க 30 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.132.63 கோடி முதலீட்டில் 31 வேளாண் வணிக நிறுவனங்களுக்கு தொழில் தொடங்குவதற்காக 12.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2008;2009ம் ஆண்டு 2025 குழுக்களுக்கு, குழுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் தொழில் தொடங்க 2.19 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 10116 குழுக்களை சார்ந்த 1.50 லட்சம் பண்ணை மகளிர் பயன்பெற்றனர். மேலும் 223 பண்ணை மகளிர் குழுக்களுக்கு 25% மானியத்தில் பண்ணைக் கருவிகள் ஒரு கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது. ;தனியார்த்
துறையில் 9 புதிய சர்க்கரை வளாகங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதில் 8 சர்க்கரை ஆலைகள், உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. ;வயலிலிருந்து ஆலை வரையான தூரத்திற்கு வாகனக் கட்டணத்தை ஆலைகளே ஏற்கின்றன. ஆலைகளில்,
இணைமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தமிழகம் முன்னோடி யாகவுள்ளது. 19 ஆலைகளில் 404.19 மெகாவாட் திறனுடைய இணைமின் உற்பத்தி நிலையங்களும், 3 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் சிறிய இணை மின் நிலையங்களும் உள்ளன. ரூ.1125.63 கோடி செலவில் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் 183 மெகாவாட் திறன்
கொண்ட இணைமின் உற்பத்தி நிலையங்கள் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் அமைக்கப்படுகின்றன. <br><br>ஓராண்டிற்கு 960 லட்சம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யக்கூடிய 9 உற்பத்தி நிலையங்கள் நிறுவப் பட்டுள்ளது. எரிசாராய உற்பத்தி பற்றாக்குறையினால் 5%; எத்தனால் கலந்த
பெட்ரோல் வழங்க இயலாத நிலை உள்ளது. புதிய நிலையங்கள், உற்பத்தியைத் தொடங்கும்போது 5% எத்தனால் கலந்த பெட்ரோல் மாநிலத்தில் முழு அளவில் கிடைக்கும். எரிசாராயம் மற்றும் எத்தனால் ஆலைகள், செய்யாறு மற்றும் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் தலா 36 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படுகின்றன. சேலம் மற்றும் அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் 30 கிலோ லிட்டர் எரிசாராய உற்பத்தித் திட்டம் ஆகஸ்ட் 2008ல் தொடங்கப்பட்டது. மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
15.10.2010ல் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த அரவைப் பருவம் முதல்
செயல்படும். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு 2009;2010 சர்க்கரைப் பருவத்திற்கு சிறந்த தொழில்நுட்பச் செயல் திறனுக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியசிவா ஆலை, கரும்பு மேம்பாட்டிற்காக சேலம்; ஆலை, நிதி மேலாண்மைக்காக செய்யாறு ஆலைக்கு முதல் பரிசு வழங்கியுள்ளது. விவசாயிகள் நிறைந்த நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட மாணவர்கள் பயன்பெற, நாகை கீவளூரில் வேளாண்மைக் கல்லுரியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
ஐந்தாண்டுகளில் 56 புதிய பயிர் ரகங்கள், 20 பண்ணைக் கருவிகள், 20
மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, வேளாண்மை உற்பத்தி பெருகியுள்ளது.;இதைப்போலவே, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வேளாண்மை அலுவலர்களுக்கும் அடுக்கடுக்கான பல உதவிகளை செய்துள்ளது. 1972ல் திமுக ஆட்சியில்தான் வேளாண் மை அலுவலர்களுக்கு கெஜட்டட் தகுதி வழங்கப்பட்டது. 1989ல் கால்நடை உதவி மருத்துவர், உதவிப் பொறியாளர்களுக்கு இணையாக வேளாண்மை அலுவலர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த 131 உதவி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியமளித்து உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டது.;2007ல் துறை மறுசீரமைப்பில் 509 வேளாண்மை அலுவலர்கள் பணி இடங்களை உதவி வேளாண்மை இயக்குனர்களாகவும் 512 உதவி விதை அலுவலர் பணி இடங்களை துணை வேளாண்மை அலுவலர்களாகவும், 514 உதவி வேளாண்மை அலுவலர் பணி இடங்களை உதவி விதை அலுவலர்களாகவும், அதே போல 399 உதவி மண்வளப்
பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை இளநிலைப் பொறியாளர்களாகவும், பொறியியல் பட்டம் பெற்ற 54 உதவி மண்வளப் பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை உதவிப் பொறியாளர்களாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ;பணி நியமனத் தடைச்
சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 2632 பணி இடங்களுக்கு நேரடி நியமனமும், வேளாண் துறையில் 3544 அலுவலர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் <br>கருணாநிதி கூறியுள்ளார்.
http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=30826&id1=4

No comments:
Post a Comment