முந்தைய முயற்சி

Friday, 18 March 2011

தமிழக எம் எல் ஏக்களின் குற்றப் பின்னணி

நடைபெறவுள்ள 5 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசிய்லவாதிகள் குறித்து அவர்கள் தாக்கல் செய்யும்
தகவல்களைக் கொண்டே ஆய்வு செய்து அவர்களின் குற்றப் பின்னணி குறித்தும்  குவித்துள்ள சொத்துக்கள் குறித்தும் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது    
அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்    என்ற அமைப்பு.
இது குறித்து கல்கி வார இதழ் மட்டுமே விரிவான செய்தியினை, அதன் பத்தி ஒன்றில் (ஓ பக்கங்கள்) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய சில பகுதிகளை கீழே கொடுத்துள்ளோம்.
கல்கி ஆன்லைனில் இந்த வாரப் பதிப்பைச் சொடுக்கி, ஓ பக்கங்களில் விரிவான கட்டுரையை வாசிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் 
அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்   வெப் சை ட் சென்று அதன் பத்திரிகை செய்தி அறிக்கைகளை விரிவாக வாசிக்கலாம். ஆனால், இவையெல்லாம், தமிழ் நாளிதழ்களில் செய்திக்குரிய அந்தஸ்தையே பெற மறுக்கின்றனவே ஏன் ?
 
ஏ டி ஆர் வெப்சைட்டில் ஒரு தகவல் எங்கள் எல்லோருக்குமே வியப்பைத் தந்தது.
ஒவ்வொரு மாநிலத்திலுமே அதிக பணக்கார எம் எல் ஏக்களின் பட்டியலைத் தொகுத்து, அதில் முதல் இருவரின் பெயர்களை மட்டும் இந்த நிறுவனம் தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.
தமிழ் நாட்டின் பண்க்கார எம் எல் ஏக்களில் டாப் 2 இடங்களைப் பெற்றவர்கள்:
1. வசந்தகுமார்
2. மு கருணாநிதி

அனேகமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் ஐந்து மாநில்ங்களில் பணக்கார எம் எல் ஏக்களில் முன்ன்ணியில் உள்ளவர்களில் முதலமைச்சரை இடம் பெறச் செய்த மாநிலம் தமிழ் நாடாகத்தான் இருக்கும்.
இனி கல்கியில் வெளிவந்துள்ள பகுதி :


"முந்தைய 2006-ஆம் வருட சட்ட மன்றத் தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கையை அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான செய்திகளில் ஒன்று நம் எம்.எல்.ஏ.க்களின் குற்றப் பின்னணி பற்றியதாகும். மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது மொத்தமாக 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 77ல் 39 பேர் தி.மு.க. 15 பேர் பா.ம.க. 9 பேர் காங்கிரஸ். ஒரு விடுதலைச் சிறுத்தை. அ.இ.அ.தி.மு.க. வினர் எட்டு பேர். ம.தி.முக - 2. கம்யூனிஸ்ட் - 2. மார்க்சிஸ்ட்- 1.
மொத்த 77 பேரிலும் மிகக் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் 25 பேர். அதில் தி.மு.க - 16. பா.ம.க. - 4. காங்கிரஸ் - 3. அ.இ.அ.தி.மு.க - 1 . கம்யூனிஸ்ட் - 1.
ஆள் கடத்தல், அடைத்து வைத்தல், மிரட்டல், பொய் வாக்குமூலம் அளித்தல், கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, கொடூர ஆயுதங்களால் தாக்குதல், ராஜ துரோகம் போன்ற இ.பி.கோ. பிரிவுகளில் 51 வழக்குகளில் 35 வழக்குகள் தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது உள்ளன. பா.ம. க.வினர் மீது 9, காங்கிரசார் மீது 5, அ.இ. அ.தி.மு.க.வினர் மீது ஒன்று, கம்யூனிஸ்ட் டுகள் மீது 2 வழக்குகள் உள்ளன.
கொடும் குற்றச்சாட்டுகளுக்கான கிரிமி னல் வழக்குகள் உள்ள 25 எம்.எல்.ஏ.க்கள் யார்? யார்? தி.மு.க: 1. வில்லிவாக்கம் ரங்கநாதன். 2. கண்டமங்கலம் புஷ்பராஜ் 3. திருவொற்றியூர் கே.பி.பி.சாமி 4. குறிஞ் சிப்பாடி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். 5. மொரப்பூர் முல்லைவேந்தன். 6. பெண்ண கரம் பெரியண்ணன். 7. ராதாபுரம் அப்பாவு. 8. விழுப்புரம் பொன்முடி. 9. ஆண்டிமடம் சிவசங்கர். 10. சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் . 11. புரசைவாக்கம் வி.எஸ்.பாபு. 12. சத்தியமங்கலம் ஏ. தர்மலிங்கம். 13. எழும்பூர் பரிதி இளம் வழுதி. 14. (மறைந்த) மதுரை மத்திய தொகுதி பழனிவேல்ராஜன். 15. ஆயிரம் விளக்கு மு.க ஸ்டாலின். 16. சேப்பாக்கம் மு.கருணாநிதி. பா.ம.க: 17. மேட்டூர் ஜி.கே மணி. 18.முகையூர் கலியவரதன். 19. பண்ருட்டி வேல்முருகன். 20. பவானி ராமநாதன். காங்கிரஸ்: 21. போளூர் விஜயகுமார். 22. தொட்டியம் ராஜசேகரன். 23. அரியலூர் அமரமூர்த்தி. அ.இ.அ.தி.மு.க. : 24. பர்கூர் தம்பிதுரை. கம்யூனிஸ்ட்: 25. சிவகங்கை குணசேகரன்.
ஒவ்வொரு சொத்துக்குப் பின்னாலும் ஒரு குற்றம் இருக்கிறது என்று ஒரு பழ மொழி உண்டு. குற்றத்துக்குப் பின்னால் சொத்து இருப்பது இயல்புதானே. தமிழ் நாட்டின் 234 எம்.எல்.ஏ.க்களில் அவர்களே அறிவித்த சொத்துக் கணக்கின்படி 57 பேர் கோடீஸ்வரர்கள். அதில் 31 பேர் தி.மு.க., 12 பேர் காங்கிரஸ், 9 பேர் அ.இ.அ.தி.மு.க., இருவர் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை கள், பா.ம.க., தே.மு.தி.க.வில் தலா ஒருவர். சொத்துக் கணக்கு காட்டியபோது பான் கார்டு எண்ணைக் குறிப்பிடாதவர்கள் 114 எம்.எல்.ஏ.க்கள்.
இட ஒதுக்கீடு இருந்தாலொழிய பெண்கள் வரும் வாய்ப்பே கிடையாது என்பதற்கு ஆதாரம்: சென்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் நிறுத்திய மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் வெறும் ஆறு சதவிகிதம்தான். ஜெயித்து வந்த எம்.எல்.ஏ.க்களில் பெண்கள் ஒன்பது சதவிகிதம் !......."

No comments:

Post a Comment