இது ஒரு அபாண்டமான குற்றச் சாட்டு போலத்தான் தோன்றும்.
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறோம் கவனியுங்கள்:
"தேர்தல் களம்" என்றொரு தொடர். மாணவர்களுக்கும், எங்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்தே தேர்தல் செய்திகளைத் தொகுத்துத் தரும் பகுதிக்கு, தினமலர் சூட்டியுள்ள பெயர்.
தினமணி "தேர்தல் 2011" என்று பெயரிட்டு அப்பகுதியில் தமிழ் நாட்டுத் தேர்தல் செய்திகளையும், புதுச்சேரி தேர்தல் செய்திகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
தினத்தந்தி வெறுமனே "தேர்தல் செய்திகள்" என்று மட்டும் மொன்னையாகப் பெயரிட்டு, அப்பகுதியில் இந்தவகைச் செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
தினகரனில் பிரச்னையே இல்லை. எந்தப் பெயரிடலும் இல்லை. எல்லாச் செய்திகளுடனும், தேர்தல் செய்திகளும் இடம் பெறுகின்றன.
ஒரு ஒப்பீட்டிற்காக, ஆங்கில நாளேடுகள் ஒன்றிரண்டைப் பார்வையிட்டோம்:
தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், தேர்தல்கள் குறித்த செய்திகளைத் தொகுத்துத் தரும் பகுதிக்கு
DANCE OF DEMOCRACY என்று நையாண்டியாகவும் கவித்துவமாகவும் பெயரிட்டிருந்தது.
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், DEMOCRACY REBOOT என்று தேர்தல்கள் தொடர்பான பகுதிகளுக்குப் பெயரிட்டிருந்தது.
தி இந்து நாளிதழில் எந்தப் பதற்றமும் தெரியவில்லை. எந்தப் பெயரிடலும் இல்லை. ஆனாலும், சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்து கணிசமான செய்திகளை அளித்து வருவது மட்டும் இயல்பாகப் புரிந்தது.
தமிழ்ப் பத்திரிகைகளின் முயற்சிகளையும், ஆங்கிலப் பத்திரிகைகளின் முயற்சிகளையும் ஒப்பிட்ட பின்புதான், தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குக் கற்பனை வறட்சியும், படைப்பாக்க்த் திறன் குறைவும் உள்ளதோ என்ற ஐயம் எழத் தொடங்கியது.

1 comment:
நன்று...
Post a Comment