முந்தைய முயற்சி

Tuesday, 15 March 2011

தேர்தல் விதிமுறை மீறல்களை அம்பலப் படுத்துவதில் முன்னணியில் உள்ள நாளிதழ்

தேர்தல் ஆணைய்ம் வெளியிடும் தேர்தல் ந்னனடத்தை விதிகள், அவ்வ்ப்பொழுது வெளியிடும்  வழிகாட்டு நெறிகள்  போன்றவற்றை வெளியிட்டு, விதிகள் மீறப்படும்போது அவற்றை அம்பலப் படுத்தி வருவதில் தினமலரும் தினத்தந்தியும் முன்னணியில் உள்ளன. தினகரன் மூன்றாவது இடத்திலும் தினமணி ஆகக் கடைசி இடத்திலும் உள்ளன். 14 03 2011 அன்று வெளிவந்த சில செய்திகளைக் கவனிப்போம்:
New Indian Express Story on pending Criminal charges against sitting MLAs of Puducherry

அனுமதியின்றி ஊர்வலம் நடத்தினால்
வாகன்ங்கள் பறிமுதல்
கலெக்டர் ராகேஷ் சந்திரா எச்சரிக்கை
Daily thanthi 14 03 2011 p.`1

 ______________

அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளுக்கு ஆதரவாக‌
40 நடிகர், நடிகைகள் பிரசாரம்
விமானத்தில் செல்லவும் அனுமதி
தினகரன் புதுச்சேரி 14 03 2011 ப்.6

_________
வீட்டு உரிமையாளர்கள் அனும்தி அளித்தாலும்
பொது இடங்களில், சுவர் விளம்பரம்
சுவரொட்டிகளுக்கு தடை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தினத்தந்தி புதுச்சேரி 14 03 2011
ப். 4
__________

சுவர் விளம்பரங்கள் : தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

சென்னை : "விளம்பரங்களை உடனே அகற்றாவிட்டால், அதை அகற்ற ஏற்படும் செலவுத் தொகை சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து வசூலிக்கப்படும். இதுதவிர, சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் இது சேர்த்துக் கொள்ளப்படும்' என, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்தவெளிகள் (அழகைச் சீர்குலைத்தல்) சட்டப்படி, அரசு வளாகங்களில் உள்ள கட்டடங்களில், சுவரில் எழுதுதல், சுவரொட்டிகள் அல்லது காகிதங்களை ஒட்டுதல் அல்லது பிற வடிவில் அழகை சீர்குலைத்தல், கட் - அவுட்கள், விளம்பர பலகைகள், கொடிகள் வைக்க அனுமதியில்லை.

மாநகராட்சிகளில், போலீஸ் கமிஷனரின் அனுமதியோடு, குறிப்பிட்ட இடங்களில் நிபந்தனைக்குட்பட்டு, குறிப்பிட்ட கால அளவிற்கு உட்பட்டு, தட்டிகள் மற்றும் கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதி வழங்கப்படும். பொது நலனுக்கு குந்தகமில்லாத நிபந்தனைகளை குறிப்பிட்டு அனுமதி வழங்கலாம். எனினும், சுவரில் எழுதுவது அனுமதிக்கப்படாது.

தனியார் மற்றும் பொது இடங்களை பொறுத்தவரை, பொதுமக்களின் பார்வையில் படும் இடங்கள் எனப்படும், தனியாருக்கு சொந்தமான இடங்கள், கட்டடங்கள், ஒரு நபர் கடந்து செல்லும் பாதைகள் ஆகியவற்றில் சுவர்களில் வரைதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்றவற்றுக்கு, வீட்டு உரிமையாளரின் சம்மதத்துடன் கூட அனுமதியில்லை.

உள்ளூர் சட்டப்படி, வெளிப்படையாக அனுமதி வழங்காத போது, எந்தவொரு சூழ்நிலையிலும் சொத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு கூட, அனுமதிக்கப்படாத செயல்களை செய்யக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுவர்களில் வரைதல், போஸ்டர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஒட்டுதல், தனியார் இடங்களிலும் அனுமதிக்கப்படாது.

எனினும், கிராமப் பகுதிகளை பொறுத்தவரை, உரிமையாளரின் எழுத்து மூலமான அனுமதியோடு சுவர்களில் எழுதுதல், வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கட் அவுட் வைத்தல், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றுக்கு, உள்ளூர் விதிகளின்படி குறிப்பிட்ட காலத்துக்கு, பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் அனுமதிக்கப்படும். எந்தவொரு அரசியல் கட்சியோ, குழுவோ, வேட்பாளரோ, தனியாரோ, உடைமைகளை சீர்குலைக்கும் செயலில் சட்டவிரோதமாக ஈடுபட்டால், தவறு செய்பவர் மீது தேர்தல் அதிகாரி, சுவர் விளம்பரங்களை நீக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.

அறிவிப்பில் கண்ட விளம்பரங்களை உடனே நீக்கவில்லை என்றால், அந்த விளம்பரங்களை நீக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு ஏற்படும் செலவுத் தொகையை, சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து வசூலிக்க வேண்டும். மேலும், இத்தொகையை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும். சட்டத்தின் விதிமுறைகளை மீறியவர் மீது வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Dinamalar PDY 14 03 2011 p.7

6 PONDY MLAS HAVE
PENDING CRIMINAL
CASES AGAINST THEM
New Indian Express Pondicherry March 14 2011 p.5
 


Tirunelveli division TNSTC general manager transferred
Staff Reporter
Nagercoil: The Election Commission has ordered transfer of general manager of the Tamil Nadu State Transport Corporation, (Tirunelveli Division) Ravi Varma on the basis of a report submitted by the Collector and activists of the Barathiya Janatha Party.
It is said that over 40 buses had been operated from Nagercoil to Chennai to transport 4000 activists of the DMDK to facilitate them to join DMK in the presence of party leader M. Karunanidhi.
Based on the report given by the Collector, Rajendra Ratnoo, and the BJP leader, M.R. Gandhi, the Election Commission issued the transfer order to Ravi Varma.

The Hindu   14 03 2011 
http://www.hindu.com/2011/03/14/stories/2011031452390400.htm

இதில் எந்தச் செய்தியுமே தினமணியில் இடம்பெறவில்லை.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுச்சேரியின் தற்போதைய 6 எம் எல் ஏக்கள் மீதுள்ள கிரிமினல் குற்ற வழக்குகள் குறித்து படத்துடன் செய்தி வெளியிட்டுள்ள்து.
தி இந்து நாளிதழ், அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர், தேமுதிகவில் இருந்து திமுகவில் சேர முன்வந்தவர்களுக்கு அரசு பஸ்களை ஏற்பாடு செய்த்தால்,  உடனடி இடமாற்ற்ம் செய்யப் பட்டதை அமபலப் படுத்தி உள்ளது. இந்த 2 செய்திகளுமே எந்தத்  தமிழ் நாளிதழிலும் இடம்பெறவில்லை. 


புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம்
அரசியல் வாதிகளின் தேர்தல் விண்ணப்பங்களை ஆராய்ந்து கிரிமினல் பின்னணியுள்ளவர்கள் குறித்து தொடர்ந்து அம்பலப் படுத்தி வருகின்றது. அந்த நிறுவனம் வெளியிட்டு வரும் செய்திகளையும் தமிழ் நாளிதழ்களில் காணமுடியவில்லை. அந்தச் செய்தி கீழே தரபட்டுள்ளது.

கிரிமினல்களை தேர்தலில் நிறுத்தாதீர்: தேர்தல் கண்காணிப்பகம் கோரிக்கை

புதுச்சேரி, மர்ச் 13: கிரிமினல்களை தேர்தலில் நிறுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கிரிமினல் குற்ற வழக்குகளை சந்தித்துவரும் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என தேசிய தேர்தல் கண்காணிப்பகத்தின் புதுவை கிளையான, புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் கேட்டுக்கொள்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2006 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒருபகுதியினர் (20 சதவீதம் பேர்) குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். இந்த 6  பேரில் 5 பேர் கொலை வழக்கு உள்ளிட்ட மிகக்கடுமையான கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.
சட்டமன்ற உறுப்பினர்களில் 12 (40 சதவீதம்) பேர் தங்களின் வருமானவரி பான் அட்டை விவரங்களை தரவில்லை. தலைமை தேர்தல் ஆணையம் தற்போது கொண்டு வந்துள்ள படிவம் மூலம் வருமானவரி ஏய்ப்பு செய்பவர்களை எளிதில் கண்டறிய முடியும்.
புதுச்சேரியின் நடப்பு  சட்டமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறவில்லை என்றாலும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள கட்சிகள் தாங்களாகவே, பெண் வேட்பாளர்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க தடை ஒன்றுமில்லை.
இந்த பின்னணியில், அரசியல் கட்சிகளிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
1. கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு சீட் கொடுக்காதீர்கள்;
2. சீட்டுகளை விற்கவோ, ஏலம் விடவோ வேண்டாம்; பணம் இருந்தால் மட்டுமே சீட்டு பெற முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
3. தகுதி வாய்ந்த பெண்களுக்கு வாய்ப்பளியுங்கள்;
4. சொத்து, வருமான வரி குறித்து முழுமையான விபரம் அளிப்பவருக்கு மட்டுமே வாய்ப்பளியுங்கள்; இது பின்னர் வரும் சங்கடங்களை தவிர்க்கும்.
5. சீட்டுகளை, ஜனநாயக ரீதியிலும், வெளிப்படையாகவும் அளித்து, நேர்மையான, கண்ணியமான நபர்கள் தேர்தலில் நிற்க வாய்ப்பளியுங்கள்.
தங்கள் பகுதி வேட்பாளர் குறித்து விபரம் தெரிய விரும்பும் பொதுமக்கள் MYNETA 605001 (தங்கள் பகுதி பின் கோடு) என டைப் செய்து 56070 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள். நடப்பு சட்ட மன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் கிரிமினல் வழக்கு விபரங்கள் மார்ச் 14ஆம்  தேதியிலிருந்தும், புதிய வேட்பாளர்களின் விபரங்கள் மார்ச் 30ஆம் தேதியிலிருந்தும் கிடைக்கும். இந்த விபரங்களை www.adrindia.org என்ற இணைய தளத்திலும் காணலாம்.

Source : http://puducherrynews.com/?p=9141


No comments:

Post a Comment