Sunday, 20 March 2011

விதிமீறல்கள் குறித்து வாக்களர்களை எச்சரிக்கும் தமிழ் நாளிதழ்கள்

தேர்தல் விதிமீறல்கள் குறித்த ஆணையத்தின் எச்சரிக்கைகள், நடவடிக்கைகளைத் தமிழ் நாளிதழ்கள் தத்தமது போக்கிலே பதிவு செய்து கொண்டு வருகின்றன. இன்று 20 03 2011 ஞாயிறு அன்று வெளியான மூன்று தமிழ் நாளிதழ்களில் மூன்று வித செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஒன்றில் இடம் பெற்ற செய்தியை மற்றொரு நாளிதழில் காண இயலவில்லை.
1. தினகரனில் புதுச்சேரிப் பதிப்பில் 4ஆம் பக்கத்தில் இன்று இடம்பெற்றுள்ள ஒரு செய்தி :
தேர்தல் குற்றங்களுக்கு
எந்தெந்த பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்யலாம் ?
தேர்தல் ஆணையம் விள்க்கம்.

Source : Dinakaran.com
 
2. அரசியல்வாதியை பார்த்து
அதிகாரி நிற்க கூடாது
தேர்தல் கமிஷன் உத்தரவு
தினமலர் புதுச்சேரிப் பதிப்பு 2003 2011 ப். 5


அரசியல்வாதியை பார்த்துஅதிகாரி நிற்க கூடாது:தேர்தல் கமிஷன் உத்தரவு
திண்டுக்கல்: "அரசியல்வாதிகளிடம் எழுந்து நின்று வேட்பு மனு வாங்கக் கூடாது' என, அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரி, துணை தேர்தல் அதிகாரிகள் யாரிடமும் விருப்பு, வெறுப்பற்ற நிலையில் நடந்து கொள்ள வேண்டும். மனு தாக்கல் செய்யும் அனைவரும் ஒன்றே. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அவர்களை, "வேட்பாளராக' தான் பார்க்க வேண்டும். மனு செய்ய வருபவர் அரசியல் கட்சியின் மிக முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவரிடம் மரியாதை நிமித்தம் எனக் கூறி, தனிப்பட்ட முறையில் பேசக் கூடாது. எழுந்து நின்று வரவேற்க கூடாது. அமர்ந்த நிலையில் தான், அவரிடம் வேட்பு மனுவை பெற வேண்டும், என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source : Dinamalar.com


3. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக‌
14 உள்ளூர் கேபிள் டி வி
சேனல்களின் செயல்பாடு முடக்கம்
தர்மபுரி கலெக்டர் நடவடிக்கை


தர்மபுரி, மார்ச்.20-

தர்மபுரியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 14 உள்ளூர் கேபிள் டி.வி சேனல்களின் செயல்பாடுகளை முடக்கி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் விதிகள் மீறல்

கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை, சுங்கவரி மற்றும் ஆயத்துறை மூலமும் தக்க அனுமதி பெற்றிருப்பதுடன் முறையான சேவை வரியும் கட்ட வேண்டும். அதோடு மட்டுமின்றி ஒளிபரப்பும் திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு தக்க பட உரிமை பெற்றிருக்க வேண்டும்.

தர்மபுரியில் உள்ள 14 உள்ளூர் கேபிள் டி.வி. நிறுவனங்கள் எந்தவிதமான முறையான ஆவணங்களும் இன்றி செயல்பட்டதுடன் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதை தேர்தல் ஆணையம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கண்டுபிடித்தது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து முறைகேடாக செயல்பட்ட 14 தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்களின் செயல்பாடு முடக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள பிற பகுதிகளிலும் அனுமதியின்றி இயங்கி வரும் கேபிள் டி.வி.க்களையும் முடக்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Daily Thanthi

No comments: