முந்தைய முயற்சி

Thursday, 10 March 2011

செய்தியை வெளியிட்ட் பின் மவுனம் காக்கும் தமிழ் பத்திரிகைகள்

மு க அழகிரி தேர்தல் நன்னடத்தை விதியை மீறினார் என்று அநேகமாக எல்லா தமிழ் நாளிதழ்களுமே செய்தி வெளியிட்டன.  அந்தச் செய்தியின் படி, மு க அழகிரி மார்ச் 7ஆம் தேதிக்குள் விதியை மீறியதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் , பதில் வராவிட்டால், தேர்தல் ஆணைய்ம் தன்னிச்சையாக இது குறித்து முடிவெடுக்கும் என்றும்
தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், 7,8,9,10 என்று நாட்க்ள் கடந்து விட்டன. அழகிரி என்னதான் பதில் கொடுத்தார், ஆணையம் அதை ஏற்றுக் கொண்டதா என்பது குறித்து இதுவரை எந்த நாளிதழிலும் தகவல் தென்படவில்லையே ஏன்?

No comments:

Post a Comment