முந்தைய முயற்சி

Tuesday, 22 March 2011

அழகிரியின் மீறல்: தமிழ் நாளிதழ்கள் (தினமணி தவிர) மீண்டும் மவுனம்

மு க அழகிரி, மீண்டும் ஒரு விதிமீறல் தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளால்  முயற்சிக்கப் பட்டும், வழக்கு எதுவும் பதியப் படாமல், விடப்பட்டுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மட்டும் செய்தி வெளியிட்டுள்ளது. இதே செய்தியின் கொஞ்சம் நாசூக்கான வடிவம் தினமணியில் வெளியாகியுள்ளது. மதுரை மண்டலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை இனங்காட்டுவதாக இந்தச் செய்தி அமைந்துள்ளது. ஆனால், தமிழ் நாளிதழ்கள் இந்தப் போக்குகளைப் பெருமளவில் மவுனம் காத்தும், அல்லது முழுமையாகப் பதிவு
செய்யாமலும் தேர்தல் செய்திகளை வெளியிட்டு வருகின்ற்ன.முதலில் தினமணி வெளியிட்டுள்ள செய்தியும், அதையடுத்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்தியும்  அடுததடுத்துத் தரப்பட்டுள்ளன:




மு.க.அழகிரியுடன் சென்ற தி.மு.க. வேட்பாளரின் கார் சோதனை
மேலூர், மார்ச் 20: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் சென்ற மேலூர் தி.மு.க. வேட்பாளர் காரை வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் காலமாகிவிட்டார். இவரது மனைவி ராணி. மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர். ஞாயிற்றுக்கிழமை பகலில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மேலூரில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை வேட்பாளர் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர். அங்கிருந்து கொட்டாம்பட்டிக்கு காரில் புறப்பட்டார் மு.க.அழகிரி. அவரது கார் முன்செல்ல, மேலூர் தொகுதி திமுக வேட்பாளர் ராணி உள்ளிட்டோர் தனித்தனி கார்களில் சென்றனர்.  அப்போது தி.மு.க. வேட்பாளர் காரில் பணம் கொண்டு செல்லப்படுவதாக, அப்பகுதியிலிருந்த சோதனைச் சாவடிக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருவாய்த் துறையினரும், போலீஸôரும் அந்தக் காரை வழிமறித்தனர். ஆனால், கார் நிற்காமல் சென்றுவிட்டது. பின்னர் கொட்டாம்பட்டி அருகே அந்தக் காரை மடக்கிய வருவாய்த் துறையினரும், போலீஸôரும் மேலூர் போலீஸ் நிலையத்துக்கு அதை கொண்டுவந்தனர். காரில் சோதனையிட்டபோது, அதில் சால்வைகள் மட்டும் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து காரை போலீஸôர் விடுவித்தனர்.  திமுக வேட்பாளரின் காரை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  தி.மு.க. வேட்பாளர் ஆதரவாளர்கள் சென்ற வாடகைக் காரில் 82 சால்வைகள் இருந்ததாகவும், அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் காரில் இருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸôர் கூறினர்.



Alagiri convoy ‘ignores’ tahsildar’s order


MADURAI: The AIADMK on Sunday alleged DMK South Zone Organising Secretary M K Alagiri to having carried money to bribe voters in Melur constituency. Alagiri came to Melur with his supporters in a convoy to hold discussions with Congress functionaries at the MP Office, to brighten up the chances of DMK candidate Rani, widow of former MLA KVV Rajamanickam, in the elections.Sources said money in two bags was transferred from a car without a registration number to the one belonging to Rani. Immediately, the AIADMK passed on the information to Melur tahsildar Kalimuthu. Before he could reach the spot, the candidate’s car reportedly left for Kottampatti. The tahsildar rushed to a check-post near Melur to stop the vehicles, but none of them, including that of Alagiri, halted to the signal from tahsildar. The Kottampatti inspector was informed, but the cars took a diversion avoiding Kottampatti check-post.Based on representations from the AIADMK, Expenditure Observer H Moharana ordered seizure of the car. However, a vehicle check revealed only a few towels and shawls. A case was registered for violation of poll code under section 171(E) and 511(i) of IPC, read with Section 123 of the Representation of the People Act. Surprisingly, even after tahsildar’s endorsement, Alagiri and Moorthy MLA were not booked. Instead, four unnamed persons were booked under the same sections for not cooperating with tahsildar during vehicle check.

 

No comments:

Post a Comment