Tuesday, 22 March 2011

வைகோவை அவமானப் படுத்த முயலும் தினமலர்

மதிமுக தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று எடுத்த முடிவை, தமிழ் நாளிதழ்களிலேயே மிகவும் ஆபாசமாகவும், கொச்சைப் படுத்தியும் செய்தி வெளியிட்ட நாளிதழ் தினமலர்.
21 03 2011 திங்கள் அன்று வெளியான பதிப்பில், கீழ்க்கண்டவாறு தலைப்பிட்டிருந்தது தினமலர் :
ஓட்டம் ,
தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார் வைகோ
இன்னும் 2 மாதங்களுக்கு எந்த அறிக்கையும் கிடையாது




தேர்தலைப் புறக்கணிக்க முடிவு
என்று தினமணியும்,





தொகுதி பங்கீடு பிரச்னையால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்
மதிமுக தேர்தல் புறக்கணிப்பு
வைகோ தலைமையில் நடந்த
கூட்டத்தில் தீர்மானம்

என்று தினத்தந்தியும்தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன.
மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்து, ஒரு அரசியல் ரீதியான முடிவெடுக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவரது முடிவை இப்படி கொச்சைப்படுத்துவது எவ்வகையில் அறமாகும்?
இது வைகோவை அவமானப் படுத்துவதாகக் கருதிக் கொண்டு தன்னைத் தானே தரம் தாழுத்துவதாகாதா ? என்ற கேள்விக்ளை எழுப்பியுள்ளது இந்தத் தலைப்பும் இதையொட்டிய செய்தியும்.
ஏன் தினமலர் இவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதைத் தனியாகத் தான் ஆராய வேண்டும்.


Source : Dinamalar

1 comment:

Anonymous said...

http://padithuraipandi.blogspot.com/2011/03/blog-post_21.html