முந்தைய முயற்சி

Saturday, 19 March 2011

புதுச்சேரியில் ரங்கசாமியின் கட்சிக்கு ஆதரவான தினமலரின் நிலைப்பாடு

ஒரு பக்கச் சார்பான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பத்திரிகைகளை இனம் காண்பது இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.  ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவது, அந்த ஆதரவான கட்சிக்கு ஒவ்வாத செய்திகளைத் தவிர்ப்பது, அல்ல்து ஆதரவான கட்சிக்கு ஒவ்வாத கட்சிகளுக்கு எத்ரான நிலைப்பாட்டை எடுப்பது என்பது  போன்றவை  இந்தியப் பத்திரிகை உலகிலோ, தமிழ்ப் பத்திரிகைச் சூழலிலோ நடவாத ஒன்றல்ல. அப்படி நடப்பது போலத்தோன்றும்  எல்லாச் செய்திகளையும், அது எந்த நாளிதழில் வெளிவந்தாலும் தொடர்ந்து அம்பலப் படுத்துவது என்பதை இந்த ஆய்வுக் குழு தனது கவனத்தில் கொண்டுள்ளது.  இந்தச் சூழலில், புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய என் ஆர் காங்கிரசின் நிறுவனருமான  என்  ரங்கசாமிக்கு ஆதரவான ஒரு நிலைப் பாட்டை தினமலர் எடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றதோ என்று எண்ணூமளவிற்கு சில ஆதாரங்களை தினமலர் நாளிதழில் நம்து ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
19 03 2011  அன்று வெளிவந்துள்ள தினமலரில் (புதுச்சேரிப்பதிப்பில்) சில செய்திகளை கவனிப்போம் :ரங்கசாமிக்கு குளோபல் விருது
தினமலர் 19 03 2011 ப். 11(**)  புதுச்சேரி நாளிடப் பட்டுள்ள இந்தச் செய்தியினைக் கவனியுங்கள் :



"ஒரு மாத காலத்தில் மூன்று உலக சாதனை நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக், முன்னாள் முதல்வர் ர்ங்கசாமிக்கு, குலோபல் உல க்சாதனையின் விரு
து    வழங்கப் பட்டுள்ள து என்று தொடங்கும் இந்தச் செய்தி, இதன் மூலம் ஒரு அரசியல் தலைவர் , ஒரு மாதத்திற்குள் மூன்று தனி நபர் உலக சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையை ரங்கசாமி படைத்துள்ளார். அதற்காக, அவருக்கு குளோபல் உலக சாதனையின் கவுரவ விருது விரைவில் வழங்கப் படவுள்ளது", என்று வியந்தோதி புகழ்ந்து முடிகின்றது. 
 அடுத்த செய்தி ரங்கசாமிக்கு பிரசார வாகனம் தயார் என்று வியந்து எழுதப்பட்டுள்ளது.   (தினமலர், புதுச்சேரி, 19 03 2011 ப். 14)



அடுத்ததாக தேர்தல் களம் 2011 என்ற தலைப்புடன் 6ஆம் பக்கத்தில் வெளியான அடுத்தடுத்த மூன்று செய்திகளைக் கவனிப்போம். எல்லாமே, என் ஆர் காங்கிரஸ் பற்றியது தான் :






 என் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் நந்தா கலவாணனுடன் பேட்டி,  என் ஆர் காங்கிரஸ் பிரமுகர் வைத்தியநாதனுடன் பேட்டி, காங்கிரஸ் பிரமுகர் தியாகராஜன் என் ஆர் காங்கிரசில் ஐக்கியம் என்று என் ஆர் காங்கிரஸ் பற்றிய செய்திகளே
பக்கம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன.





இவை தற்செயலாக நிகழ்ந்தவை என்று கொள்ள முடியாது.
இவற்றை பக்கச் சார்பான நிலைப்பாடு என்று கொள்ள முடியும்.

புதுச்சேரி முன்னாள் முதல்வரின் பொதுக்கூட்டம் செய்திப் படம் போல் வெளியிடப் பட்ட விளம்பரம் என்ற தலைப்பில் இதே வலைப்பதிவில், தினமலர் நாளிதழ், ரங்கசாமிக்கு சாதகமாக செய்ல்படும் விதமாக, அரைப்பக்க விளம்பரத்தை, செய்திப்படம் போல வெளியிட்டிருந்ததை நினைவில் கொள்வோம்.  அந்த விமர்சனத்தை மறந்தவர்கள் மீண்டும் இந்தசொடுக்கியைச் சொடுக்கினால், மீண்டும் வாசிக்கலாம்.

1 comment: