Tuesday, 8 March 2011

புதுச்சேரி முன்னாள் முதல்வரின் பொதுக்கூட்டம் செய்திப் படம் போல் வெளியிடப் பட்ட விளம்பரம்


 14ஆம் பக்கத்தில் வெளியான விளம்பரம் இது.  பட விளக்கம் தரப்பட்டு, நாளிதழே இந்தப் ப்டத்தை வெளியிடப் பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப் படுகின்றது.

  இது 12ஆம் பக்கத்தில் வெளியான செய்திப் படம்.


புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் புதுக் கட்சி சார்பில் 05 03 2011 அன்று பொதுக் கூட்டம் நடத்தப் ப்ட்டது. அதையொட்டி, தமிழ் முன்னணி நாளிதழ்களில் ஏராளமான விளம்பரங்கள் அக்கட்சியின் தொண்டர்கள் சார்பில் பக்கங்களை நிரப்பும் வகையில் இடம்பெற்றன. 06 03 2011 நாளிட்ட இதழில் இந்த மாநாடு தொடர்பான செய்திகள் இடம்பெற்றன. அத்துடன்,  மாநாடு தொடர்பான புகைப்படங்கள் அரைப்பக்க அளவிற்கு விளம்பரமாகவும் வெளியிடப் பட்டன. தினமலர் தவிர பிற இதழ்கள், இந்த அரைப் பக்க ப்டங்களுடன் "விள்மபரம்" என்ற குறிப்பையும் இணைத்தே வெளியிட்டன. தினமலரின் (புதுச்சேரி பதிப்பு) 12ஆம் பக்கத்தில் மாநாட்டுச் செய்திகளும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன. 14ஆம் பக்கத்தில் கட்சி சார்பிலோ, தொண்டர்கள் சார்பிலோ தரப்பட்ட விளம்பரம், செய்தி போல வெளியிடப் பட்டுள்ளது.  விளம்பரமாக இருந்தாலும், செய்திப் படம் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.
நாளிதழ்கள் தங்கள் மாநாட்டை வெகு விரிவாக செய்தி புகைப்படங்களுடன் வெளியிட்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்  முயற்சி இது. இதற்கு,  ஏராளமான விளம்பரம் தரும் கட்சியினருக்கு உதவும் நோக்குடன், நாளிதழ்கள் உடன்படுவது நியாயமானது அல்ல.  ஃப்ளக்ஸ் போர்டுகளில் நகர் முழுவதும் விளம்பரங்களை வைப்பதற்கு புதுச்சேரியிலும் தடை விதிக்கப் பட்டிருப்பதால், பொது மக்களின் கவனத்தை ஈர்க்க இது போன்ற பிரமாண்டமான விளம்பரங்களில் கட்சிகள் ஈடுபடும். நாளிதழ்கள் கவனமுடன் இவற்றைப் பாகுபடுத்தி "இந்தப் புகைப்படம் காசு கொடுத்து விளம்பரமாக வெளியிடப் பட்டுள்ளது", என்ற விரிவான குறிப்பை இடம் பெறச் செய்ய வேண்டும்.


http://epaper.dinamalar.com/DM/PONDICHERRY/2011/03/07/INDEX.SHTML

No comments: