Wednesday, 16 March 2011

கவனத்தை ஈர்த்த மூன்று செய்திகள் :

1. டெக்கன் க்ரானிக்கிளின் காங்கிரஸ் பட்டியலும் தினமணியின் காங்கிரஸ் பட்டியலும்
2.  விரல் அடையாள் மை எங்கிருந்து வருகின்றது (டைம்ஸ் ஆப் இந்தியா)
3. திருநங்கைகளுக்குக் கிடைத்துள்ள அங்கீகார வாய்ப்பு (தினமணி)


 காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளின் பட்டியலை எல்லா நாளிதழ்களுமே தான் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்தப் பட்டியல்களிலேயே இரண்டு பட்டியல்கள்  படிப்பதற்கும் ஒப்பிடுவதற்கும் வசதியாக இருந்தன. அவை: 1. தினமணி மாவட்ட வாரியாக, காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2. டெக்கன் கிரானிக்கிள் பத்திரிகை,  இந்த 63 தொகுதிகளில், எவையெவை யார் யார் வசம் இருந்தன என்று தொகுத்துப் பட்டியலிட்டுள்ளது.

காங்கிரஸின் 63 தொகுதிகள்

மாவட்ட வாரியாக காங்கிரஸýக்கு  ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்  திருவள்ளூர் : திருத்தணி,  பூந்தமல்லி (தனி), ஆவடி.  
சென்னை : திரு.வி.க. நகர் (தனி),  ராயபுரம், அண்ணா நகர்,  தியாகராய நகர்,  மயிலாப்பூர்.  
காஞ்சிபுரம் : ஆலந்தூர்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி),  மதுராந்தகம் (தனி).  
வேலூர் : சோளிங்கர், வேலூர்,  ஆம்பூர்.  
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஓசூர்.   
திருவண்ணாமலை : செங்கம் (தனி),  கலசப்பாக்கம், செய்யாறு.  
விழுப்புரம் : ரிஷிவந்தியம்.  
சேலம் : ஆத்தூர் (தனி),  சேலம் வடக்கு.  நாமக்கல் : திருச்செங்கோடு.  
ஈரோடு : ஈரோடு மேற்கு,  மொடக்குறிச்சி. 
நீலகிரி : உதகமண்டலம். 
 கோவை : வால்பாறை (தனி),  தொண்டாமுத்தூர்,  சிங்காநல்லூர்.  
திருப்பூர் : திருப்பூர் தெற்கு,  காங்கேயம்,  அவினாசி (தனி).  
திண்டுக்கல் : நிலக்கோட்டை (தனி),  வேடசந்தூர்.  
கரூர் : கரூர்.  
திருச்சி : மணப்பாறை, முசிறி.  
அரியலூர் : அரியலூர். 
 கடலூர் : விருத்தாசலம்.  
நாகை : மயிலாடுதுறை. 
 திருவாரூர் : திருத்துறைப்பூண்டி (தனி).  
தஞ்சாவூர் : பாபநாசம்,  பட்டுக்கோட்டை,  பேராவூரணி.  
புதுக்கோட்டை : திருமயம், அறந்தாங்கி.  
சிவகங்கை : காரைக்குடி, சிவகங்கை.  
மதுரை : மதுரை வடக்கு,  மதுரை தெற்கு,  திருப்பரங்குன்றம்.  
விருதுநகர் : விருதுநகர்.  
ராமநாதபுரம் : பரமக்குடி (தனி),  ராமநாதபுரம்.  
தூத்துக்குடி : விளாத்திக்குளம்,  ஸ்ரீவைகுண்டம்.  
திருநெல்வேலி : வாசுதேவநல்லூர் (தனி),  கடையநல்லூர்,  நாங்குநேரி, ராதாபுரம்.  
கன்னியாகுமரி : குளச்சல், விளவங்கோடு,  கிள்ளியூர். 
(தருமபுரி, தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப் படவில்லை என்பது தனிச் செய்தியாக 9 ஆம் பக்கத்தில் தினமணியில் வெளியாகியுள்ளது )

பாமக போட்டியிடும் தொகுதிகள்திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்க்காடு, போளூர், ஜோலார்பேட்டை, செஞ்சி, மயிலம், நெய்வேலி, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, பவானி, தருமபுரி, பூம்புகார், திண்டுக்கல், ஆலங்குடி, மதுரவாயல், அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், பர்கூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, புவனகிரி, கோவில்பட்டி, திண்டிவனம், சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு.

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளிலும் 8 தனித் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.அந்தக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
பொதுத் தொகுதிகள்: சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை.
தனித் தொகுதிகள்: செய்யூர், அரக்கோணம் , கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சீர்காழி, அரூர், ஊத்தங்கரை.:

Source : Dinamani website

Deccan Chronicle list 



அடுத்த செய்தி தேர்தலின் போது விரல் நகங்களில் இடப்படும் அடையாள் மை எங்கே உற்பத்தியாகிறது?   என்பதை விரிவாக விளக்குகின்றது.
1962இல் நடந்த மூன்றாவது பொதுத்தேர்தலில் இருந்து தான் விரலில் வாக்களித்ததற்கான அடையாள் மை இடும் வழக்கம் தொடங்கியது.  மைசூர் பெயிண்ட்ஸ் அன்ட் வார்னிஷ் என்ற் பொதுத் துறை நிறுவனம் தான் நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களுக்கான விரல் அடையாள மையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மிகவும் ரகசியமாகத் தயாரிக்கப் படும் இந்த மையை உற்பத்தியாகும் செலவு என்ன ? யார் கண்டுபிடித்தது, ஒரு தேர்தலுக்கு ஒரு மாநிலத்துக்கு எவ்வளவு மை தேவை என்பது போன்ற விரிவான தகவல்களுடன், டைம்ஸ் ஆப் இந்தியாவின் இன்றைய இதழ் கீழ்க்கண்ட தலைப்புடன் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளது.  



State orders 1lakh vials of indelible ink 
from Mysore factory for polls 
________
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் "இதரர்' என்ற பிரிவின் கீழ் தனி அடையாளத்துடன் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர், "திருநங்கைகள்' என்றழைக்கப்படும் "அரவானிகள்'. என்ற அறிமுகத்துடன் தொடங்கும் விரிவான ஒரு கட்டுரையை தினமணி 15 03 2011 அன்று 7 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து  செய்தியோ கட்டுரையோ, மைய நீரோட்ட இதழ்களில் இடம் பெறுவதே இல்லை என்ற குற்றச்சாட்டை மறுதலிக்கும் வகையில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.


முதல் முறையாகக் கிட்டியுள்ள அங்கீகார வாய்ப்பு!
திருச்சி, மார்ச் 14: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் "இதரர்' என்ற பிரிவின் கீழ் தனி அடையாளத்துடன் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர், "திருநங்கைகள்' என்றழைக்கப்படும் "அரவானிகள்'.தெருக்களில் திரியும்போது படித்தவர்களும்கூட கேலி செய்து பேசி அழைக்கப்பட்ட சமூகமாக அரவானிகள் சமூகம் இருக்கிறது. இவர்களில் மிகச்சிலர் அடையாளம்கூட கண்டுகொள்ள முடியாத அளவுக்கு படித்து நல்ல பணியில் இருப்பதையும் காண முடிகிறது.தங்களுக்கென "தனி மொழி', ஜாதி, மத அடையாளமில்லாத உறவு, பழைமை மாறாத வாழ்வியல் சடங்குகளைக் கொண்டது அரவானிகள் சமூகம். இந்த நிலையில், சமூகத்தில் நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் இந்தச் சமூகத்துடன் ஒத்து வாழ வேண்டிய அவசியமும், உரிமையும் இருக்கிறது என்பது அண்மைக்காலமாக எழுந்து வரும் கோரிக்கை. இதுதொடர்பாகவே, அரவானிகள் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினரைக் கொண்ட போராட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன.இதற்கிடையே, தமிழ்நாட்டில் இப்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க இதரர் பிரிவில் 844 அரவானிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, அடையாள அட்டையும் பெற்றுள்ளனர்.இவர்களில் சென்னையில் 292 பேரும், திருவள்ளூரில் 209 பேரும், விழுப்புரத்தில் 96 பேரும், சேலத்தில் 83 பேரும், ஈரோட்டில் 47 பேரும், திருச்சியில் 14 பேரும், திண்டுக்கல்லில் 2 பேரும், தேனியில் ஒருவரும் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க விஷயங்களும் இருக்கின்றன. மொத்த மாவட்டங்கள் 32-ல் 15 மாவட்டங்களில் இருந்துதான் இந்த வாக்காளர் பட்டியலில் அரவானிகள் இடம் பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களிலுள்ள அரவானிகளுக்கு முன்கூட்டியே இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.தமிழ்நாட்டில் ஏறத்தாழ 35 ஆயிரம் அரவானிகள் இருக்கலாம் என்று தொண்டு நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது. என்றாலும், வாரியத்தில் பதிவு செய்த அரவானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். சுமார் 3,500 பேர்தான் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்த இந்த 10 சதம் பேருக்கும் வாரியத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.ஏறத்தாழ பெரும்பான்மையான எண்ணிக்கையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, குடும்ப அட்டைகள், இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சில மாவட்டங்களில் கட்டிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுவதுமுள்ள எண்ணிக்கையிலிருந்து வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைப்போல, தற்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.வாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என நடைபெற்ற நீண்ட விழிப்புணர்வு பிரசாரம் அதிகம். அளிக்கப்பட்ட கால இடைவெளி அதிகம். ஆனால், இத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க செய்யப்பட்ட மிகக் குறைவான பணிகளுடன் ஒப்பிடும்போது வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தவர்கள் அதிகம் என்றுதான் கணிக்க முடிகிறது.இது தொடர்பாக "ஃசேப்' அமைப்பின் தலைவி பி. கஜோல் கூறியது:"தமிழ்நாட்டில் அரவானிகள் நல வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, அரவானிகளைப் பற்றி மக்கள் மத்தியில் பரவலாக இருந்த எண்ணம் மாறியிருக்கிறது. அரவானிகளுக்கேகூட, தங்களுக்குரிய உரிமைகள், தங்களின் நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.இவற்றுக்கு மத்தியில், மூன்றாம் பாலினமாக அரவானிகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இப்போது வாக்காளர் பட்டியலில் இதரர் பிரிவின் கீழ் அரவானிகள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சிதான்.அதேநேரத்தில், வாக்காளர் பட்டியலில் "அரவானிகள்' என்ற பிரிவையே உருவாக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான உரிமை கிடைத்ததாக உணர முடியும். இதற்கான நடவடிக்கையை அடுத்த தேர்தல்களில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பிவைக்கப்படும்.புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருக்கும் அரவானிகள் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். இப்போதே, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பிக் கொள்ளாமல், விருப்பமுள்ளவர்களுக்கு வாக்களிக்கலாம். அதேநேரத்தில், கட்டாயம் தங்களின் வாக்கைப் பதிவு செய்வது அவசியம்' என்றார் கஜோல்.
Source : Dinamani


No comments: