முந்தைய முயற்சி

Sunday, 20 March 2011

A comment from Madurai

பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழக ஊடகவியல் மாணவர்கள் "தேர்தல் ஊடகக் கண்காணிப்பு" என்ற வலைப்பதிவை நடத்தி வருகின்றார்கள் . அதில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான செய்திகளில் ஒன்று நம் எம்.எல்.ஏ.க்களின் குற்றப் பின்னணி பற்றியதாகும். மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது மொத்தமாக 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 77ல் 39 பேர் தி.மு.க. 15 பேர் பா.ம.க. 9  பேர் காங்கிரஸ். ஒரு விடுதலைச் சிறுத்தை. அ.இ.அ.தி.மு.க. வினர் எட்டு பேர். ம.தி.முக - 2. கம்யூனிஸ்ட் - 2. மார்க்சிஸ்ட்- 1.மொத்த 77 பேரிலும் மிகக் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் 25 பேர். அதில் தி.மு.க - 16. பா.ம.க. - 4. காங்கிரஸ் - 3. அ.இ.அ.தி.மு.க - 1 . கம்யூனிஸ்ட் - 1. ஆள் கடத்தல், அடைத்து வைத்தல், மிரட்டல், பொய் வாக்குமூலம் அளித்தல், கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, கொடூர ஆயுதங்களால் தாக்குதல், ராஜ துரோகம் போன்ற இ.பி.கோ. பிரிவுகளில் 51 வழக்குகளில் 35 வழக்குகள் தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது உள்ளன. பா.ம. க.வினர் மீது 9, காங்கிரசார் மீது 5, அ.இ. அ.தி.மு.க.வினர் மீது ஒன்று, கம்யூனிஸ்ட் டுகள் மீது 2 வழக்குகள் உள்ளன.

If you make a request to these students to compile the nature of crimes these people committed and their photographs, I hope that the students will do it and that will a contribution to election watch.


--
S.Rengasamy
Madurai Institute of Social Sciences
Alagarkoil Road Madurai 2. TN
Res:-1/207 "Aruvi" Kiruba Nagar,
Naganakulam Road, Madurai 14
http://cdmissmdu.blogspot.com/
http://cdmiss.wordpress.com/
http://rengasamy.onsugar.com/
http://www.scribd.com/people/documents/3895747?from_badge_documents_button=1

No comments:

Post a Comment