Thursday, 24 March 2011

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை 4 நாளிதழ்களும் 4 விதமாக வெளியிடக் காரணம் என்ன ?

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல அறிக்கையை 23 03 2011 அன்று அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் வெளியிட்டார். அது குறித்த செய்தி நமது ஆய்வுக்குரிய 4 தமிழ் நாளிதழ்களிலுமே வெளியாகியுள்ளன.தினகரனில் தவிர, மற்ற இதழ்களில் திருமாவளவன் தனது கட்சித் தலைவர்களுடன் தேர்தல் அறிக்கையை வெளியிடும் படமும் வெளியிடப் பட்டுள்ளன.
ஆனால், தேர்தல் அறிக்கையில் உள்ள உள்ளடக்கத்தை வெளியிடுவதில் தினமலர், தினகரன், தினத்தந்தி ஆகிய் இதழ்கள் மிக மோசமாகவே நடந்து கொண்டுள்ளன. தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில்
திருமாவளவனிடம் கேடகப் பட்ட கேள்வி பதில்களை விரிவாக வெளியிட்டு விட்டு, தேர்தல் அறிக்கையில் உள்ள செய்திகளை மேலோட்டமாக வெளியிட்டுள்ளன. தினமணியில் தேர்தல் அறிக்கை விரிவாக இடம்பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கையின் எந்தெந்தப் பகுதிகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன என்று தேட முற்பட்டோம். அதற்குள்,  தி இந்துவில் இந்தச் செய்தி குறித்த தலைப்பிலேயே விடை கிடைத்தது.
தமிழ்த் தேசியம் குறிதது வி சி க வின் தேர்தல் அறிக்கை அதிகம் பேசுவதாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியம் பேசுவது, தமிழ் நாளிதழ்களுக்குப் பிடிக்காத விஷயமாக இருக்க வேண்டும். அதனால்தான், தினமணி தவிர்த்த பிற நாளிதழ்கள் தேர்தல் அறிக்கையின் பெரும்பகுதியினை இருட்டடிப்பு செய்து விட்டன.

இந்தச் செய்தியை விரிவாக அலசுவதற்கு வசதியாக், ஒவ்வொரு நாளிதழும் இந்தச் செய்தியை எவ்வாறு
கையாண்டுள்ள  விதம் அந்தந்த நாளிதழின் இணைய தளத்தில் உள்ள படி,தரப்பட்டுள்ளன.

 
தினகரனில் வெளியான செய்தி  
திருமாவளவன் கோரிக்கை 
நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு 
வைகோ பாடம் புகட்ட வேண்டும் 
 
சென்னை : ‘நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ 
என்று வைகோவுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைவர் திருமாவளவன், 
சென்னையில் நேற்று வெளியிட்ட பிறகு கூறியதாவது: 
மாநில உரிமைகளுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக போராடும். 
மதுவிலக்கு கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வலியுறுத்துவோம். 
தாய் மொழி கல்வி, நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக கொண்டுவர 
பாடுபடுவோம். தலித் மக்களின் நலன், மகளிர் நலன், இஸ்லாமியர் நலன், 
மீனவர் நலன்களுக்காக சட்டப்பேரவையில் போராடுவோம். 
கச்சத்தீவை மீட்க போராடுவோம். கடந்த 6 ஆண்டுகளாக அரசியலில் 
உடன் இருந்த மதிமுகவை அரசியல் நாகரீகமே இல்லாமல், 
பிடரியை பிடித்து வெளியே தள்ளியிருக்கின்றனர். 
தேர்தலை புறக்கணிப்பதை தவிர்த்து விட்டு, தேர்தலில் வைகோ 
பங்கேற்க வேண்டும். வைகோவை சந்திப்பதற்கு கால அவகாசம் இல்லை. 
அதனால், பத்திரிகைகள் மூலமாக அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 
நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் தனித்து போட்டி?
‘‘புதுச்சேரியில் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். 
புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். 
உடன்பாடு ஏற்பட்டால் அதன்படி போட்டியிடுவோம். 
இல்லையென்றால் 12 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்’’ 
என்று திருமாவளவன் தெரிவித்தார்
Source : Dinakaran.com  


மாநிலங்களில் தன்னாட்சி, தனிக்கொடி : வி.சி., தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை : "மாநிலங்களுக்கு தன்னாட்சி மற்றும் தனிக்கொடி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தனியாக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். இதில், மத்திய அரசிடம் உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை, மாநில அரசின் வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். மத்திய வரி மற்றும் கூடுதல் வரிகளில் மாநிலங்களுக்கு, 75 சதவீதம் வழங்க வேண்டும்.
சுதந்திரம் மற்றும் குடியரசு நாளில், தேசியக் கொடியுடன் மாநில கொடியையும் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏற்ற வழி செய்ய வேண்டும். கனிம வளங்களின் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் ஏஜன்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.

இப்போதுள்ள ஏஜன்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சென்னையை உருவாக்கிய தலித் மக்களை, அங்கிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றக் கூடாது. ஏழை மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை டாஸ்மாக் மதுபான கடைகள் பாதிக்கின்றன. பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
source : Dinamalar.com



____________
தினமணியில் வெளியான செய்தி
தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கு: விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

சென்னை, மார்ச் 23: தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்:  தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் தலித்துகள், மீனவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதுக்கடைகளையும் மூட பாடுபடுவோம்.  இந்தக் கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் மாற்று வேலைகளை வழங்கவும், மதுவிலக்குக் கொள்கையை இந்திய அளவில் நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துவோம்.  இலங்கையில் ஆயுதப் போராட்ட வடிவம் இடைக்காலமாக அழிக்கப்பட்டாலும், விடுதலைப் போராட்டத்துக்கான தேவைகளும், காரணங்களும் அழிக்க முடியாதவையாக உள்ளன.  அங்கு நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்கவும், தமிழீழத்தை மீட்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.  உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில் மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட 38 நாடுகளை உறுப்பு நாடுகளாகவும், 14 நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாகவும் ஐ.நா.சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்துவோம்.  அகதிகள்: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை கொத்தடிமைகளை விட வேதனைக்குரியதாக உள்ளது. இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறையும், அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும்.  இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.  விடுதலை செய்ய வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையைப் பெற்றுள்ள நளினி, தூக்குத் தண்டனையைப் பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.  கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட இன்னபிற வழக்குகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்.  கச்சத் தீவு மீட்பு: கடல் எல்லைப் பாதுகாப்பு எனும் பெயரில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் தொடர்கதையாகி வருகின்றன. தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம்.  மாநிலங்களுக்கு தன்னாட்சி: வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவும், மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு 75 சதவீதம் வழங்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.  மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, கோலார் ஆகிய தமிழர்கள் வாழும் பகுதிகள் கேரள, கர்நாடக மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பகுதிகளில் உள்ள மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இடங்களை தமிழக எல்லைக்குள் கொண்டுவர குரல் கொடுப்போம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன.

 


___________
தினத்தந்தி வெளியிட்ட திருமாவின் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றம்:
`அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம்'
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தொல்.திருமாவளவன் பேட்டி


சென்னை, மார்ச் 24-

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

தேர்தல் அறிக்கை

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின், தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

வாக்குறுதிகள்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்று 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.

நாங்கள் மக்களை சந்திக்கும்போது, சில வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளோம். அந்த வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.

அதில், இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

இனப்படுகொலை

இலங்கை தீவில் நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா. பேரவைக்கு அழுத்தம் கொடுக்க பாடுபடுவோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 லட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ 2 லட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கும் பணிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க போராடுவோம்.

கச்சத்தீவு மீட்பு

தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும், இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.

மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை - எளிய மக்களின் வாழ்வு வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, முழு மது விலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

நம்பிக்கை துரோகம்

இதுபோன்ற கொள்கைகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வோம். மீண்டும் நல்ல பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முதல்-அமைச்சர் கருணாநிதியை 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்துவோம்.

எதிரணி கூட்டணியில் 5 ஆண்டுகாலம் இருந்த ம.தி.மு.க.வை பிடரியை பிடித்து வெளியே தள்ளுவது போன்று வெளியேற்றியுள்ளனர். இது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் ஆகும். கூடா நட்பின் விளைவு இது. ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்பதை ம.தி.மு.க. கைவிட்டு, தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை

முதல்முறையாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவும் அளிக்கிறது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றுவதற்கு டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் பணம்தான் பெரும் உதவியாக இருக்கும். அப்படி இருக்கும்போது, மதுவிலக்கு வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது கூட்டணியில் முரண்பாடு ஏற்படுத்தாதா?.

பதில்:- தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், அவர்களின் எல்லா கொள்கையிலும் உடன்பாடு இருக்காது. அகில இந்திய அளவில் மது விலக்கு வேண்டும். இதை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

தேர்தலுக்கான உறவு

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க.வும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்கிறீர்கள். தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட கூறுகின்றீர்களா? அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றீர்களா?.

பதில்:- நம்பிக்கை துரோகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் போட்டியிட வேண்டும்.

கேள்வி:- ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தொடர்ந்து காங்கிரஸ் அரசை எதிர்த்து வருகிறீர்கள். ஆனால், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இருக்கும் அணியில் இடம்பெற்றுள்ளீர்கள். இது பிரசாரத்தின்போது பாதிப்பை ஏற்படுத்தாதா?.

பதில்:- இது தேர்தலுக்கான உறவு. ஈழத் தமிழர் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். நீர்த்து போக மாட்டோம்.

புதுச்சேரியில் தனித்து போட்டி

கேள்வி:- தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?.

பதில்:- முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதில், நாங்களும் கலந்துகொள்வோம். அதன்பின்னர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வோம். புதுச்சேரியில் 12 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். இந்த நிலையில், புதுச்சேரி முதல்-மந்திரி வைத்திலிங்கம் தொடர்பு கொண்டு, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரிடம் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வன்னியரசு, பாவலன், ஆர்வலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, தொல்.திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Source : Dailythanthi.com



Strong ingredients of Tamil nationalism in VCK manifesto
Special Correspondent CHENNAI: Supporting the case for an independent ‘Tamil Eelam', seeking United Nations recognition for its formation, working for the rehabilitation of Tamil refugees and demanding retrieval of Tamil areas now with other States, the election manifesto of Viduthalai Chiruthaigal Katchi (VCK), released on Wednesday, is dominated by strong ingredients of Tamil nationalism.
Asked whether it would be possible to get back Tamil areas after the reorganisation of States, VCK president Thol Thirumavalavan said, “We have included the issue to further sharpen the debate on Tamil nationalism.” “The government should conduct a referendum in Tamil-speaking areas such as Devikulam, Peermedu, Munnar and Kolar Gold mines to ascertain the opinion of the people to include these areas with Tamil Nadu,” he said. The party also demanded total prohibition in the State, saying the retail liquor shops run by the State government had deprived the livelihood of Dalits, fishermen and other downtrodden while plunging the youth into drinking habit. “We need not have agreement with our alliance partner on all issues,” he said when asked how he could expect the DMK government to close down liquor shops which were generating revenue for its welfare schemes.
The VCK also wanted government control over agriculture lands to prevent fertile lands being taken over for real estate purposes. “The government should set up a land commission for the purpose because real estate business has killed the hope that agriculture can be revived in the State. If allowed to continue, it will lead to a situation of food scarcity,” VCK said.
Protection of native species of cows, goats and buffaloes, a special scheme for cultivation of palm trees, introduction of drip irrigation and a pension scheme for all farmers who have crossed 60 years are the issues found a place in the manifesto.
Besides demanding 33 per reservation for women, free education from kindergarten to higher education, the party wanted a separate ministry for women at the Centre and in Tamil Nadu.
Mr. Thirumavalavan also came down on AIADMK general secretary Jayalalithaa for “elbowing out” the MDMK from the alliance. “It is a betrayal of trust,” he said.
Asked whether he would ask Mr. Vaiko to join the DMK alliance, he said, “It is for the DMK leadership to decide.”

Source : The Hindu website 

No comments: