Friday, 11 March 2011

பிரகாஷ் காரத்தைப் புறக்கணித்த தமிழ் நாளிதழ்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் காரத் திண்டுக்கல்லில் தனது கட்சியின் பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளார். தேசிய்க் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின்
தேர்தல் பிரச்சார உரையை தினமணி மட்டுமே உரிய முக்கியத்துவம் தந்து வெளியிட்டுள்ளது. தினகரனிலோ, எல்லாத் தரப்பு செய்திகளுக்கும் இடம் தரும் நாளிதழ் என்று நம்ப்பப் படும் தினத்தந்தியிலோ, கம்யூனிசம் தொடர்பான எந்தச்செய்திக்குமே இடம் தர மறுக்கும்  தினமலரிலோ இந்தச் செய்தி இடம் பெறவில்லை.
தமிழ்  நாளிதழ்கள் செய்திகளைத் தெரிவு செய்வதிலும் முன்னுரிமைப் படுத்துவதிலும் கடுமையான விருப்பு வெறுப்புகளுடனே இயங்குகின்றன என்று  கூறுவதில் தவறில்லை எனலாம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் இந்தச் செய்திக்கு இடமில்லை.
தி இந்து நாளிதழ், இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவம் கொடுதது வெளியிட்டுள்ளது.   

Prakash Karat, CPI(M) general secretary, addressing an election campaign in Dindigul on Thursday.

ஊழல் தி.மு.க. அரசை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: காரத்

திண்டுக்கல், மார்ச் 10: ஊழல் தி.மு.க. அரசை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கேட்டுக் கொண்டார்.திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:இந்திய மக்கள் முன் இப்போது மிகப் பெரிய இரு பிரச்னைகள் உள்ளன. ஒன்று மிகப் பெரிய ஊழல், மற்றொன்று விலைவாசி உயர்வு. இந்த இரு பிரச்னைகளுக்கும் காரணம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும், மாநிலத்தில் தி.மு.க. அரசும்தான். கடந்த சில ஆண்டுகளாக பல லட்சம் கோடி ஊழல் விஷயங்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. இந்த ஊழல் காரணமாக நாட்டின் வளம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் மக்களுக்கான சுகாதாரம், கல்வி, நாட்டின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மக்களவையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாக எடுத்துச் சொன்னபோது நாட்டு மக்களில் பலரும் இதை நம்பவில்லை. ஆளும்கட்சியின் மீது சொல்லப்படும் அரசியல் குற்றச்சாட்டு என நினைத்தனர். ஆனால் தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை அளித்த பின்னரும் இது குறித்து பிரதமர் அமைதி காத்தது ஏன்?2009 அக்டோபர் முதல் 2010 அக்டோபர் வரை இது குறித்து எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க மறுத்து விட்டனர்.உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்னரே விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உரிமம் பெற்றுள்ள 122 நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன. இந்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய அமைச்சர் ஆ.ராசா உரிமம் வழங்கியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுட்டிக் காட்டியது. இதன் பின்னரும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்தான் பரிசுத்தமானவரா?தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பதவியேற்ற பின் அவரது திறமையின் காரணமாகத்தான் கிராம மக்களிடம் கூட செல்போன் புழக்கத்தில் வந்துள்ளது எனக் கூறுவது அப்பட்டமான பொய். தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக இது நடந்துள்ளது. மிகப் பெரிய சந்தை உள்ள நாட்டில் அலைக்கற்றை ஒதுக்கீட்டை சந்தை விலையைவிட ஆயிரம் மடங்கு குறைவான விலைக்கு ஒதுக்கீடு செய்தது ஏன்? இதனால் இந்த உரிமம் பெற்ற மிகப் பெரிய நிறுவனங்கள் அதிக லாபத்தை அடைந்துள்ளன. இதனால் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு சுகாதாரத்துக்கான 8 பட்ஜெட்டுகளையும், கல்விக்கான 3 பட்ஜெட்டுகளையும் நிறைவேற்ற முடியும்.ஆ.ராசா கைது செய்யப்பட்டதுடன் இந்த விவகாரம் முடிந்து விடவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமத்தை ரத்து செய்துவிட்டு மறு ஏலம் நடத்தப்பட வேண்டும். இழந்த தொகையை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரவேண்டும். ஆனால் இதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்யாது. ஏனெனில் உரிமத்தை ரத்து செய்தால் அதைப் பெற்ற நிறுவனங்கள் உண்மையை வெளியே சொல்லும். 6 மத்திய அமைச்சர்களைக் கொண்ட தி.மு.க. ஒரு துறையில் இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்கும்போது கடந்த 5 ஆண்டு முழுவதும் தமிழகத்தை ஆண்ட தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஊழல் புரிவதில் தி.மு.க. புதிய சாதனையைப் படைத்துள்ளது.ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் வளத்தை கொள்ளை அடிப்பது என்பது தமிழக மக்களின் துரதிருஷ்டமாகும்.பெட்ரோல் விலையின் தொடர் ஏற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. 3 தொகுதிகளை விட்டுத்தர மனமில்லாமல் மத்திய அமைச்சர்கள் பதவியை ராஜிநாமா செய்ய முனையும் தி.மு.க., பெட்ரோல் விலை ஏற்றத்துக்காக ராஜிநாமா எனக் கூறியிருந்தால் நாட்டு மக்களுக்காவது பலன் கிடைத்திருக்கும். 3 தொகுதிகள்தான் பிரச்னை என இரு கட்சியினரும் கூறினால் அதை யார் நம்புவார்கள்? அலைக்கற்றை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையைத் தடுப்பதற்கான நடவடிக்கை இது. இது தேர்தல் கூட்டணியா அல்லது ஊழல் கூட்டணியா? எல்லா அரசும் ஊழல் அரசு என்ற விவாதத்தை ஏற்க முடியாது.மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது ஒரு சிறு குற்றச்சாட்டும் கூற முடியாது. எனவே தி.மு.க. அரசை வீழ்த்த ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவையும் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் பிரகாஷ் காரத்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D&artid=388658&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu 

1 comment:

Anonymous said...

கராத் ஒரு பார்பன பேர்வழி. இவர் எப்படி உண்மை பேசுவர்? பார்பான் என்றாலே ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் என்று பொருள்.
இந்தியாவை சீனர்களிடம் விற்கும் கூட்டம். இங்குள்ள நிலவரத்திற்கு ரஷ்ய, சீன போன்றோரிடம் அனுமதி கேட்டு நடக்கும் கூட்டம்.
ஈழ போரின் போது அங்கு எதுவுமே நடக்காதது போல் இருந்த ஆள். இவருக்கு ஏன் செய்தி போடா வேண்டும்?
இப்போது லிபியாவில் ஒரு பகுதி மக்கள் ஆயுதம் எடுத்து போராடும் போது அதற்கு இவர்கள் ஆதரவு தருகின்றனர்.
ஈழத்தில் நடந்த போர் எந்த விதத்தில் வேறு?