மிகுந்த ஆய்வுக்கு உரிய ஒரு பொருள் இது.
ஒவ்வொரு நாளிதழின் நிர்வாகத்துக்கும் ஒரு சில அரசியல் இயக்கங்கள் மீது ஆர்வமும் அக்கறையும் இருக்கலாம். ஆனால், தமது விருப்பு வெறுப்புகளை தமிழ் நாளிதழ்கள் எவ்வளவு அப்பட்டமாக வெளிப்படுத்துகின்ற்ன என்ப்தை நிரூபிக்க அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை என்றே தோன்றுகின்றது.
திமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக மு கருணாநிதி அறிவிக்க இது எல்லா நாளிதழ்களிலுமே செய்தியானது.
தினத்தந்தியும், தினகரனும், தினமணியும் படத்துடன் இந்தச் செய்திக்குரிய முக்கியத்துவத்துடன் வெளியிட்டுள்ளன.
திமுக கூட்டணியில்
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு
ஒரு தொகுதி ஒதுக்கீடு
கருணாநிதி அறிவிப்பு
தினத்தந்தி புதுச்சேரி பதிப்பு 14 03 2011 ப்.7
____________
________
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி
சென்னை : தமிழகத்தில் உள்ள நாடார் அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, "பெருந்தலைவர் மக்கள் கட்சி' எனும் புதிய கட்சி துவக்கப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு, தி.மு.க., கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது."பெருந்தலைவர் மக்கள் கட்சி' சார்பில், அக்கட்சியின் அமைப்பாளர் தனபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினர். அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். பேச்சுவார்த்தையின் போது, பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், தனபாலனும் கையெழுத்திட்டனர்.பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வேட்பாளர், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Dinamalar dated 14 03 2011 PDY Edition p.5
_________________
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு திமுக அணியில் ஒரு இடம்
சென்னை,மார்ச் 13: தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்பாடு கருணாநிதி முன்னிலையில், ஞாயி ற்றுக்கிழமை கையெழுத்தானது.
இதுகுறித்து அக்கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்களிடம் கூறியது:
நாடார் மகாஜன சங்கம், தமிழ்நாடு நாடார் பேரவை, சென்னைவாழ் நாடார் சங்கம், நெல்லை, தூத்துக்குடி நாடார் சங்கம் உள்ளிட்ட 3, 500 சங்கங்கள் இணைந்து பெருந்தலைவர் மக்கள் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளன.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். சென்னை, கொங்கு மண்டலங்களில் நாடார்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவரைக் கேட்டுக் கொண்டோம்.
இதே போன்று காங்கிரஸ் தலைவர்களையும் வலியுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.
Dinamani 14 03 2011 p.9
_______
தினமலரில், இப்படி ஒரு இயக்கம் தொடங்கப் பட்ட செய்தியையே வெளியிடாமல் மறைக்கப் பட்டு விட்டதால், அதில் இந்தச் செய்தியை எப்படி வெளியிடுகின்றார்கள் என்று ஒரு ஆர்வத்துடன் ஆராய்ந்தோம்.
ஒரு பத்திச் செய்தியாக, மிகவும் அடக்கி வாசித்திருந்தது தினமலர். பிற மூன்று பத்திரிகை வெளியிட்டது போல் படமும் வெளியிடப் படவில்லை. செய்தியையும் விரிவாக உரிய முக்கியத்துவத்துடன் வெளியிடவில்லை. இப்படி ஒரு இயக்கம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பதை தினமலர் மட்டுமே வாசிக்கும் அப்பாவி வாசகருக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அந்தப் பத்திரிகை முடிவு செய்து விட்டது போலும். பின்னணியும் தராமல், விரிவாக்வும் பதிவு செய்யாமல் தனது விருப்பு வெறுப்புப் படி சுருக்கி வெளியிட்டால் எப்படிப் புரிந்து கொள்வது?
எங்கள் பேராசிரியர் ஒருவர், பத்திரிகை நிறுவன முதலாளிகளுக்கும், அவர்கள் சார்ந்துள்ள் ஜாதிகளுக்கும், அவர்கள் வெளியிடும் செய்திகளுக்கும் ஒருவித நெருக்கமான தொடர்பு உண்டு என்று குறிப்பிடுவார். அவர், முன்வைக்கும் சான்று : ஓட்டல் சரவண பவன் நிறுவனர் ராஜ கோபால் அண்ணாச்சி ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட போது தினத்தந்தியும், தினமலரும் அதே செய்தியை எப்படி அணுகின என்பதையும், காஞ்சி ஜெயேந்திரர் சங்கரராமன் கொலைவழக்கில் குற்றஞ் சாட்டப் பட்ட போது தினமலரும் தினத்தந்தியும் எப்படி செய்திகளை வெளியிட்டன என்பதை ஆராய்ந்தால், தானாடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதில் ஊடக் நிறுவனங்களும் தப்பிக்க முடிவதில்லை என்பது விளங்கும்.
எங்கள் பேராசிரியரின் தியரி இப்பொழுதும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. பத்திரிகைகள் ஜாதீய உணர்வுடனே செய்திகலை அணுகுகின்றன. அது குற்றவியல் செய்திகளில் மட்டுமல்ல, மக்களை அரசியல்மயப் படுத்தி ச்ரியான தகவலால் அதிகாரப் படுத்தி, தேர்தலில் சரியான முடிவுகளை எடுக்க அவை முழுமனதுடன் பங்களிப்பதில்லை. என்ற தற்காலிக முடிவுக்கு இப்பொழுது வரமுடியும்.

திமுக கூட்டணிக்கு
3500 நாடார் சங்கங்கள் ஆதரவு
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு சீட்
தினகரன் புதுச்சேரி 14 03 2011 ப்.5

No comments:
Post a Comment