புதுச்சேரியில் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்துக்கள் குறித்த விவரங்களையும், அவரக்ளது குற்றப் பின்னணி குறித்தும் விரிவான ஆய்வுகளுடன், புதுச்சேரி தன்னர்வ நிறுவனம் தகவல் திரட்டி செய்தியாளர்களிடம் புதன் கிழமை வெளியிட, ஏறத்தாழ எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளுமே உரிய முக்கியத்துவத்துடன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், தமிழ்ப் பத்திரிகைகளில், தினமணி தவிர பிற எந்த நாளிதழுமே இந்தச் செய்தியை வெளியிடவில்லை.
தினமணியில் வெளிவந்த செய்தி :
தினமணியில் வெளிவந்த செய்தி :
___________
48 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், 24 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
புதுச்சேரி, ஏப். 6: புதுச்சேரியில் போட்டியிடும் 187 வேட்பாளர்களில் 48 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். 24 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று தன்னார்வ தொண்டு நிறுவனமான புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கத்தின் நிர்வாகிகள் கூறினர்.இந்த அமைப்பின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் பெ. ஜோசப் விக்டர் ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: வரும் தேர்தலில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குப் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தோம். அந்த ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் 24 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 24 பேரில் 5 பேர் மீது கடத்தல், பணப்பறிப்பு போன்ற கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து முக்கிய கட்சிகளுமே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்துள்ளன.இதில் போட்டியிட அதிமுக டிக்கெட் கொடுத்துள்ள 10 பேரில் 4 பேர் மீதும், திமுக டிக்கெட் கொடுத்துள்ள 10 பேரில் 2 பேர் மீதும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ள 18 பேரில் 7 பேர் மீதும், காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ள 17 பேரில் 2 பேர் மீதும், தேமுதிக டிக்கெட் கொடுத்துள்ள ஒருவர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டிக்கெட் கொடுத்துள்ள 3 பேரில் ஒருவர் மீதும், பாஜக டிக்கெட் கொடுத்துள்ள 20 பேரில் ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடீஸ்வரர்கள்: மொத்த வேட்பாளர்களில் 48 பேர் கோடீஸ்வரர்கள். இதில் திமுகவின் வேட்பாளர்களில் 80 சதவீதம் பேரும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 76 சதவீதம் பேரும் கோடீஸ்வரர்கள்.மொத்த வேட்பாளர்களில் 117 பேர் ஆண்கள், பெண்கள் 6 பேர் மட்டும். பாஜக இரண்டு பெண்களுக்கும், திமுக ஒருவருக்கும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி இரண்டு பெண்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளன. ஒரு பெண்மணி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.உங்கள் வேட்பாளரைப் பற்றி தெரிந்து கொள்ள கட்டணமற்ற தொலைபேசி எண் 1-800-110-440-ஐ தொடர்பு கொள்ளுங்கள் அல்லது ஙவசஉபஅ பின்கோடு என்று டைப் செய்து 56070 க்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்.மேலும் தகவலுக்கு ஹோப் நிறுவனம் மனை எண். 106, எம்.ஜி.ஆர். நகர், 100 அடி சாலை, புதுச்சேரி - 605004 தொலைபேசி: 0413- 2266741. Source : Dinamani.com
No comments:
Post a Comment