Wednesday, 13 April 2011

அரசியல் கொலைகளைப் பதிவு செய்வதில் தமிழ்ப் பத்திரிகைகளின் தடுமாற்றம்

தேர்தலுக்கு முந்தைய இரு தினங்களில் தமிழ் நாட்டின் வடமாவட்டப் பகுதிகளின் இரு வேறு பகுதிகளில் இரு அரசியல் கொலைகள் நடந்துள்ளன. இந்தக் கொலைகளை அறிக்கையிடுவதில் தமிழ் நாளிதழ்களுக்கும், ஆங்கில நாளிதழ்களுக்கும் மிகுந்த வேறுபாட்டைக் காணமுடிகின்றது.
முதலாவது கொலை தர்மபுரி மாவட்டத்தில் இரு அர்சியல் தொண்டர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகல்ப்பாக மாறி ஒருவர் மற்றவரைத் தாக்கியதில், தலையில் அடிபட்டு ஒரு தொண்டர் இறந்து விடுகின்றார். மற்றொரு நிகழ்வில், விழுப்புரம் மாவட்டட்தின் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பேரூராட்சி மன்றத்தலைவர் படுகொலை செய்யப் படுகின்றார்.
இதில், இரண்டாவது கொலை இரு சமூகத்தைச் சேர்ந்த பிரிவினருக்கிடையில் நடந்த  நீண்ட நாள் மோதலின் தொடர்ச்சியாக நடந்த கொலை. 
விக்கிரவாண்டி படுகொலையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன  தி இந்துவும், தினமணியும்.
படுகொலை செய்யப் பட்டவர் தாழ்த்தப் பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும், சில காலம் முன்பாகக் கொலை செய்ய்ப பட்ட வன்னிய பிரிவைச் சேர்ந்த அதே பேரூராட்சியின் துணைத்தலைவருக்கு வேண்டியவர்கள் பழி வாங்கும் நோக்குடன் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்றும் தினமணி பதிவு செய்துள்ளது. பொன்முடியும் ராமதாசும் பதற்றமான எட்டு பூத்களிலாவது தேர்தல் கொஞ்சம் தாமதாமாக நடத்தப் படலாம் என்று சொல்ல, திட்ட்மிட்டபடி தேர்தல் நடக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்ததாக தி இந்து நாளிதழ் அறிக்கை குறிப்பிடுகின்றது.
தினமணியில் வெளிவந்த செய்தி  
பேரூராட்சித் தலைவர் வெட்டிக் கொலை: விக்கிரவாண்டியில் பதற்றம்;   போலீஸ் தடியடி




விக்கிரவாண்டியில் நடந்த கொலையை அடுத்து கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படும் கடைவீதி. (உள்படம்) கொல்லப்பட்ட அர்ஜுனன்.


விழுப்புரம், ஏப்.12: விக்கிரவாண்டியில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன், 4 பேர் கொண்ட கும்பலால் செவ்வாய்க்கிழமை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் திரண்ட பொதுமக்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவராக இருந்தவர் சுந்தரத்தின் மகன் அர்ஜுனன் (48). தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் பஜார் தெருவில் உள்ள சலாம்பாய் என்பவரின் அரிசி கடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அமர்ந்திருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும், அவர்களை சலாம்பாய் தடுத்தபோது, தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.கொலையாளிகள் நடந்தே வந்து, திரும்பி நடந்தே சென்றதாகக் கூறப்படுகிறது. பேரூராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் விக்கிரவாண்டி காலனியைச் சேர்ந்தவர்கள் நகருக்குள் திரண்டதால், அவர்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.விக்கிரவாண்டி பகுதி மக்களுக்கும், காலனியைச் சேர்ந்த மக்களுக்கும் நீண்டகாலமாக ஜாதி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் இருதரப்பில் பல கொலைகள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 16-ம் தேதி வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் திமுக பேரூராட்சித் தலைவர் அர்ஜுனன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை அரசியல் காரணமாக நிகழவில்லை, முன்விரோதத்தால் தான் நிகழ்ந்துள்ளது என்று போலீஸôர் சந்கேகிக்கின்றனர்.சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். விக்கிரவாண்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரசியல் காரணம் அல்லஇக்கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் கூறியது:கடந்த மாதம் விக்கிரவாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அழகு தங்கமணி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை ஒரு சமுதாயத்தினரால் செய்யப்பட்டது. இப்போது நடைபெற்ற கொலை பழிவாங்கும் நோக்கில்தான் நடந்துள்ளது.இது அரசியலால் ஏற்பட்ட பிரச்னையல்ல. இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சம்பவம். இப்படுகொலை குறித்து தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட்டுவிடுவர் என்றார்.Source : Dinamani.com

No comments: