கோவை பொதுக்கூட்டத்தில் ஜெய்லலிதாவுடன் விஜய்காந்த் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த தினமலர் இது குறித்து ஒரு முதன்மைச் செய்தியை வெளியிட்டது. பிற நாளிதழ்கள் இது குறித்து எந்த்த விதப் பதிவைக் கூடச் செய்யயாத நிலையில் தினமலர் மட்டும் ஏன் இத்த்னை தூரம் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று இந்த வலைப்பதிவிலும் கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.
இப்பொழுது தான் ஏன் கோவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விஜய்காந்த் விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவலை தினமணி பதிவு செய்துள்ளது. அதிர்ச்சியும் வியப்பும் மேலிட பெரிய அளவில் செய்தி வெளியிட்ட தினமலரோ தனது செய்தி ஆதாரமற்றது எனத் தெரிந்த நிலையில், உண்மையான நிலையைத் தனது வாசகர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இது குறித்து செய்தியை வெளியிட முன்வரவில்லை.
அரைகுறையான புரிதலுடன் ஒரு செய்தியை வெளியிடுவது, செய்தியால் பாதிக்கப் பட்டவரக்ள் விளக்கமளித்த பின்பும், அந்த விளக்கத்தை வெளியிடாமல் இருப்பது, இதே தவற்றைத் தொடர்ந்து செய்வது என்பது இந்திய இதழியலில் தினமலர் தவிர பிற மொழி இதழ்கள் எதிலேனும் காணப் படுகின்றதா என்பதை ஆய்வாளர்கள் தான் விளக்க வேண்டும்.
கோவை பொதுக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? விஜயகாந்த் விளக்கம்
சிதம்பரம், ஏப். 7: தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் கோவை பொதுக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவர் ஒரே மேடையில் ஜெயலலிதாவுடன் பிரசாரம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவருக்கு பதிலாக அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் வியாழக்கிழமை சிதம்பரத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த், இதற்கு பதிலளித்து பேசியதாவது: நான் தொகுதிதோறும் மக்களை சந்திக்கச் செல்வதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளருக்கு 2 நாளுக்கு முன்பே தகவல் சொல்லி விட்டேன். இதை வெளியில் முன்கூட்டியே சொல்ல வேண்டாம். தேவையில்லாமல் ஏதாவது செய்திகளை வெளியிடுவார்கள் என்று சொல்லிவிட்டேன். கோவை கூட்டத்துக்கு நான் செல்லவில்லை என்றவுடன் புறக்கணிப்பு, புறக்கணிப்பு என கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகளில் "பிளாஷ் நியூஸ்' போட்டார்கள். லயாலோ கல்லூரி கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை தொலைக்காட்சியில் செய்தியாக போடவில்லையே ஏன்?. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அதே லயோலா கல்லூரி கருத்து கணிப்பை திருப்பி, திருப்பி பல முறை போட்டீர்களே? கேபிள் நிறுவனம் அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்ததால் பயத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று அஞ்சி இதுபோன்று செய்திகளை வெளியிடுகிறார்கள். இப்போது அந்த குடும்ப தொலைக்காட்சிகளில், நான் உட்கார்ந்தால் குற்றம். நின்றால் குற்றம். சாய்ந்தால் குற்றம் என வெளியிடுகின்றனர். 2009-10 தேர்தலில் தனித்து நான் போட்டியிட்ட போது ஒருவார்த்தை கூட என்னை பற்றி தவறாக செய்தி போடவில்லையே ஏன்? தற்போது தவறாக செய்தி போடுகிறார்கள் என்றால் இதற்கு உள்அர்த்தம் உள்ளதாக குற்றம்சாட்டினார் விஜயகாந்த்.
திட்டமிட்டு புறக்கணிப்பு? கூட்டணி கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள், ஒரே மேடையில் தோன்றும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் துவங்கியது முதலே, இக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி தோழமைக் கட்சியினர் மத்தியில் எழுந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க., தலைமை, தங்களது கட்சிகளின் சார்பில், 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது முதலே, விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment