ஏப்ரல் முதல் நாளன்று வெளியான தினமலரின் இணைப்பான தேர்தல் களம் 2011 சப்ளிமென்ட் இதழின் முதல் பக்கத்தில், சமரசம்! அதிமுக கூட்டணியில் மீண்டும் வைகோ. போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு என்ற தலைப்பிட்ட ஒரு பக்க செய்தி வெளியாகியிருந்தது. உண்மை என்ன ? என்ற குறிப்புடன் 7ஆம் பக்கத்தில் வெளியான குறிப்பில், ஏப்ரல் முதல் நாளன்று இவ்வாறு யாராவது உங்களை ஏமாற்றலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இக்கட்டான நிலையிலிருக்கும் மதிமுகவை மையமாக வைத்து இப்படி ஒரு விளையாட்டான செய்தி வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. என்றாலும், இது குறித்த குறிப்பு அதே இதழில் இடம் பெற்று விட்டதால் பிரச்னையில்லை.
ஆனால், இந்த செய்தியைப் படித்த வைகோ, உடன்டியாக இது குறித்த தனது கண்டனத்தை ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கை, மாலை மலர் இதழில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தினமலரில் இந்தச் செய்தி யைக் காண முடியவில்லை.
எந்த முதல் பக்க்த்தில் குறும்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்களோ அதே முதல் பக்கத்தில், இந்த மறுப்பை வெளிய்ட்டால்தானே தினமலரின் தவறை மன்னிக்க முடியும். ஆனால், மறுப்பு அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் குப்பையில் போட்டால், இது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடல்லவா? சுதந்திரம் என்பதைத் தவறாகப் பயன்படுத்துவதாகாதா?
ஆனால், இந்த செய்தியைப் படித்த வைகோ, உடன்டியாக இது குறித்த தனது கண்டனத்தை ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கை, மாலை மலர் இதழில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தினமலரில் இந்தச் செய்தி யைக் காண முடியவில்லை.
எந்த முதல் பக்க்த்தில் குறும்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்களோ அதே முதல் பக்கத்தில், இந்த மறுப்பை வெளிய்ட்டால்தானே தினமலரின் தவறை மன்னிக்க முடியும். ஆனால், மறுப்பு அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் குப்பையில் போட்டால், இது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடல்லவா? சுதந்திரம் என்பதைத் தவறாகப் பயன்படுத்துவதாகாதா?
source Dinamalar.com
தினம்லரில் இடம்பெறாத அறிக்கை
தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மாலைமலரில் வெளிவந்துள்ள செய்தி
ஜெயலலிதாவை நான் சந்தித்ததாக கூறுவதா? வைகோ கண்டனம்
சென்னை, ஏப்.1-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது. அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.
கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 comment:
தினமலம் எனும் பச்சைப் பார்ப்பன அயோக்கியத்தனம், தமிழில்,தமிழரை அவமானப் படுத்தித் தமிழ்நாட்டில் பணம் சேர்ப்பது தமிழர்களுக்கு உணர்ச்சி என்பதே இல்லை என்பதைப் பறை சாற்றுகிறது. தினமலத்தைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
Post a Comment