18 அன்று மதுரையில் இருந்து தான் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் என்று தமிழ் இதழ்கள் செய்தியை வெளியிட்டு உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன. ஏறத்தாழ இன்னும் முப்பது நாள்கள் கூட இல்லாத நிலையில், தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரங்களை எப்படி அறிக்கையிடப் போகின்றன என்பதைக் கூர்ந்து ஆராய வேன்டியுள்ளது.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ஜெயலலிதா ? என்று கேள்விக் குறியுடன் தினமணி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ஜெயலலிதா?
மதுரை, மார்ச் 15: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதுரையில் வரும் 18-ம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது. மதிமுகவுக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. இதில் இன்னும் சுமுக நிலை எட்டப்படவில்லை. எனினும், ஓரிரு தினங்களில் இப்பிரச்னை தீர்க்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 29 நாள்களே உள்ளன. இதனால், தென் மாவட்டத்தில் இருந்து தனது சூறாவளிப் பிரசாரத்தைத் தொடங்க அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மதுரையில் இருந்து அவர் பிரசாரத்தை வரும் 18-ம் தேதி மாலையில் தொடங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருந்து 18-ம் தேதி விமானம் மூலம் மதுரை வரும் அவர், மதுரையில் வழக்கமாக தங்கும் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கியிருந்து தென் மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று வேனில் இருந்தவாறு கிராமம், கிராமமாக அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, முதுகுளத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணியையும் அக்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ராசியான தேதி, இடம் : கடந்த 2001-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது ஜெயலலிதா தனது பிரசாரத்தை மதுரையில் இருந்தே தொடங்கினார். மதுரை கீழவாசல் மைனா தெப்பக்குளம் பகுதியில் இருந்து மாலையில் அவர் பிரசாரத்தைத் தொடங்கி தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்றார்.
மேலும், அவரது ராசி எண் 9 என்பதால் 18-ம் தேதி அவர் பிரசாரம் மேற்கொள்வது அவருக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், மார்ச் 18-ம் தேதி கடந்த முறை போல் மதுரை மைனா தெப்பக்குளம் பகுதியில் பிரசாரத்தை அவர் தொடங்குவார் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
செல்லூர், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி ஆகிய பகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Source : Dinamani

No comments:
Post a Comment