Sunday, 27 March 2011

அரசியல் விவாதங்களைப் பதிவு செய்வதில் தினதந்திக்கு முதலிடம், தினமணிக்கு இரண்டாமிடம்

பொதுத்தேர்தலின் போது தங்கு தடையில்லாத அரசியல் விவாதங்களுக்கு வழிவகையேறபடுத்தும் வகையில்,
தொழில்முறையாக செய்திகளை வெளியிடுவது எந்தெந்தப் பத்திரிகைகள் என்று ஆராய்ந்தோம். வேட்புமனுத் தாக்கல் முடிந்து, பிரச்சாரங்கள் தொடங்கி மூன்று நாட்களான நிலையில் இந்த ஆய்வு பொருத்தமானதாக இருக்கும்.

திமுக தலைவர் தனது சாத்னைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்டு, ஆறாவது முறையாகவும் முதல்வராக வாய்ப்பளிக்கக் கோரி பிரச்சாரம் செய்து வருகின்றார்.  அ இ அதிமுக தலைவி ஜெயலலிதா, திமுக அரசின் ப்லவேறு குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதுடன், தான் ஆட்சிக்கு வந்தால் என்னெவெல்லாம் செய்வேன் என்பதையும் பட்டியலிட்டு வருகின்றார்.

தேமுதிக நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த், திமுக அரசை விமர்சித்தும், பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக தலைவரை விமர்சித்தும் பிரச்சாரங்கள் செய்துவருகின்றனர். இவர்கள் தவிர, திருமாவளவன், மு க ஸ்டாலின், கம்யூஸ்டு கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் செய்துவருகின்ற்னர்.
நாம் தமிழர் இயக்கத் தலைவர், சீமான், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிப்பதே தனது நோக்கம் என்று  பிரச்சாரம் செய்து வருகின்றார். சினிமா நட்சத்திரங்களில் குஷ்பூ 2 தினங்களாக, திமுக கூட்டணியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்துவருகின்றார்.

இந்தத் தலைவர்களது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் பேட்டிகளையும் வெளியிடுவதில், நேர்மையாகவும், பக்கஞ்சாராமலும்  இயங்குவது எந்தெந்தப் பத்திரிகைகள் எனக் கண்டறிவது நமது ஆர்வம்.

தினத்தந்தி, எல்லா தரப்பு செய்திகளையும் உள்ளடக்கிட முய்லவ்து போன்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு செய்திவாரியாக ஆராயும் போது தான், ஒவ்வொரு பத்திரிகையின் அரசியலும் புரிந்து கொள்ள முடிவதாக உள்ளது.  தினமணி, பக்கங்களின் எண்ணிக்கை காரணமாகவோ, அல்லது பிற காரணத்தாலோ, தினத்தந்தி அளவு பன்முகத்தன்மைக்கு இடம் தரமுடிவதில்லை.
தினகரன், திமுக சார்பு நிலைப்பாட்டிலேயே, குறிப்பாக, திமுக தலைவரது  குடும்பம் சார்பான நிலைப்பாட்டிலேயே செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
தினமலர், அதுவே ஒரு அரசியல் இயக்கம்போல, மிகுந்த விருப்பு வெறுப்புகளுடன், செய்திகளைத் தெரிவு செய்வதிலும், முன்னுரிமைப் படுத்துவதிலும்,  மிகுந்த பக்கச் சார்புடனே இயங்கிவருகின்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் கதாநாயகி என்று வர்ணிக்க, கடந்த தேர்தலில் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையை கதாநாயகன் என்றும் வர்ணிக்க, தினமலர், திடீரென வில்லன் என்று தானாகவே ஒரு சொல்லை இந்தக் கதையாடலில் அடையாளப் படுத்த முயல்கின்றது.

27 03 2011 அன்று வெளியான் தினமலர் இதழின் முதல் ப்க்கமொன்றில், மின்வெட்டை வில்லன் என்று வர்ணித்து  விவசாயிகள் மின்வெட்டால் கோபமுடன் இருப்பதாகவும், தேர்தலில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் முதன்மைச் செய்தியை எழுதியுள்ளது.




\


















முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படும் என்று அதிமுக தலைவர் ஜெயல்லிதா அறிவித்த செய்தியும், அதையடுத்து, திமுக தலைவர் "ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா ஏன் அதைச் செய்ய வில்லை" என்று கேட்டு திமுக தலைவர் மு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையும் முழுமையாகப் படிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு
நாளிதழாகத்தான் புரட்ட வேண்டும்.
மு கருணாநிதியின் அறிக்கையை தினத்தந்தியும், தினகரனும் மட்டுமே விரிவாக வெளியிட்டிருந்தன.  பிற எந்த இதழும், இந்த அறிக்கையைமுழுமையாகப் புரிந்து கொள்ளும் படி வெளியிடவில்லை.
தினத்தந்தியும் தினமலரும் இந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன என்பது அந்தந்த நாளிதழ்களின் இணையதளத்தில் உள்ளவாறு கீழே தரப்பட்டுள்ளது. :
 
தினமலரில் வெளிவந்த செய்தி





















தினத்தந்தியில் வெளிவந்த செய்தி

ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை?  கருணாநிதி கேள்வி
சென்னை, மார்ச்.27-  ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை? என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம் வருமாறு:-

இடஒதுக்கீடு உயர்த்தி

கேள்வி:-அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

பதில்:-யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமியப் பெருமக்களை ஜெயலலிதாவினால் ஏமாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உடன்பாடு, ஒற்றுமை என்பது அண்ணாவும் காயிதேமில்லத்தும் இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற உடன்பாடு. ஏன், இந்தத் தேர்தலிலே கூட இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் முதலில் 3 இடங்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 63 இடங்கள் வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், தி.மு.க.விற்கு அத்தனை இடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களான ஈ.ஏ.அகமதுவும், காதர்மொய்தீனும் தி.மு.க. கேட்டுக் கொள்ளாத நிலையிலேயே, பா.ம.க. எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்ததைப் போலவே தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களில் ஓர் இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லீம்லீக் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தது. அதைக்கூட ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு 3 இடங்களை தி.மு.க. முதலில் அளித்துவிட்டு, அதிலே ஓர் இடத்தைப் பறித்துக் கொண்டதாக அவதூறு செய்தார்கள். ஆனால் நானே அண்ணா அறிவாலயத்திற்கு காதர் மொய்தீனையும், தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் தனியாக இயங்கி வந்த திருப்பூர் அல்தாப்பையும் அழைத்து இருவருடனும் பேசி, இரண்டு இயக்கங்களையும் ஒன்றாக இணைத்து வைத்ததோடு - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ஓர் இடத்தைச் சேர்த்து 3 இடங்களாகவே உயர்த்திக் கொடுத்தோம். இதையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினர் நன்றாகவே உணர்வார்கள்.

தேர்தலுக்காக சொல்பவர்கள்

தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே பத்தாண்டு காலம் இருந்தாரே, அப்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை? தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது தானே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. அதனையும் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கையை இந்திய ïனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் வைத்ததையொட்டி - தற்போது தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவிகிதம் அளித்தது தி.மு.க. ஆட்சிதான்.

இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்'' என்று எழுதப்பட்டு, படிக்கப்பட்டு அது ஏடுகளிலும் வெளி வந்துள்ளது. எனவே தேர்தலுக்காக - வாக்குக்காக சொல்வது யார், உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

ஜெயலலிதாவின் பேட்டி

இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஞாபகப்படுத்த வேண்டுமேயானால் - கரசேவை நேரத்தில் அதனை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ``பெரும்பான்மையினரும் அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை நமது முஸ்லீம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப்பிரதேச இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று பேசி அப்போதே ஏடுகளில் எல்லாம் அந்தப் பேச்சு வெளியிடப்பட்டது.

23-7-2004 தேதிய "தினத்தந்தி'' நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது. அந்தப் பேட்டி இதோ:-

கேள்வி:- இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?

ஜெயலலிதா:- இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!

இயலாத ஒன்று

கேள்வி:- சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயலலிதா:- முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.

ராமர் கோவில்

இதற்குப் பிறகு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் ``அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?'' என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்? "ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?'' என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.

இப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா? இன்னும் ஜெயலலிதாவிற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பினால் தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டன என்பதையும் விரிவாக எழுதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

No comments: