குறிப்பிட்ட ஒரு நடிகரின் அரசியல் பார்வை மீது தனக்கு உடன்பாடில்லையென்றால், அந்த நடிகர் அல்லது சினிமா இயக்குநர் சொல்லும் கருத்து எதுவானாலும் அதைத் தமது செய்தித்தாளில் இடம்பெறச் செய்வதில்லை என்பது தமிழ் நாளிதழ்கள் வகுத்துக் கொண்டிருக்கும் நியதி. இதற்கு எந்த நாளிதழும் விதிவிலக்கல்ல.
நடிகை குஷ்பூ 2 தினங்களுக்கு முன்பு மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தினமலரில், குஷ்பூ ஜெய்லலிதா குறித்து தெரிவித்த சில விமர்சனங்கள் கத்தரிக்கப் பட்டுள்ளன.
காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசைத் தோற்கடிப்பதே தனது லட்சியம் என்று நாம் தமிழர் கட்சித் த்லைவர் சீமான் தெரிவித்த கருத்துகள், தினமணி தவிர எந்த தமிழ் நாளிதழிலும் காணப் படவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், நடிகர் மன்சூரலிகான் போன்றவர்களது பிரச்சாரங்களைத் தமது நாளிதழ்களில் வெளியிடும் நாளிதழ்கள் சீமானின் கருத்துக்கு இடம் தரமறுக்கின்றன.
நடிகை குஷ்பூ 2 தினங்களுக்கு முன்பு மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தினமலரில், குஷ்பூ ஜெய்லலிதா குறித்து தெரிவித்த சில விமர்சனங்கள் கத்தரிக்கப் பட்டுள்ளன.
காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசைத் தோற்கடிப்பதே தனது லட்சியம் என்று நாம் தமிழர் கட்சித் த்லைவர் சீமான் தெரிவித்த கருத்துகள், தினமணி தவிர எந்த தமிழ் நாளிதழிலும் காணப் படவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், நடிகர் மன்சூரலிகான் போன்றவர்களது பிரச்சாரங்களைத் தமது நாளிதழ்களில் வெளியிடும் நாளிதழ்கள் சீமானின் கருத்துக்கு இடம் தரமறுக்கின்றன.
தினமலரில் வெளிவந்த செய்தி
Source : Dinamalar.com
தினத்தந்தியில் வெளிவந்த செய்தி
ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப்போவதில்லை
"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்''
மதுரையில் நடிகை குஷ்பு பிரசாரம்
மதுரை, மார்ச்26-
"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்; ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை'' என்று, நடிகை குஷ்பு கூறினார்.
மதுரையில் பிரசாரம் தொடங்கினார்
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் மதுரையில் நேற்று பிரசாரம் தொடங்கினார்.
நேற்று காலையில் அவர், மதுரை மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தளபதிக்கு ஆதரவாக, ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சோலையழகுபுரம், ஆண்டாள்புரம், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
மாலையில் கிழக்கு சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் பி.மூர்த்திக்கு ஆதரவாக, சொக்கலிங்கநகர், பை-பாஸ், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, மேலமாசிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம், நரிமேடு, பீபிகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சூர்யாநகர், புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது:-
நெற்றிக்கண்
மதுரையில் தான் நான் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். ஏனென்றால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்கள் நீங்கள். உங்களைப் போல தைரியமானவர்கள் யாரும் இல்லை. அதுவும் அமைச்சர் மு.க.அழகிரியின் தைரியத்திற்கு ஈடு இணையில்லை. இங்கு வந்து பேசுவதால் எனக்கும் தைரியம் அதிகமாக வந்துவிட்டது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வெற்றி பெறுவார்.
ஏனென்றால் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர்.
கோடநாட்டில் ஓய்வு
ஜெயலலிதா ஆட்சியில் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்கவில்லை. இது உங்களுக்கே நன்றாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லும் பாதையை அடைத்து விட்டார்.
ஆகையால் தொழிலாளர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவிட்டதால் அந்தபாதையை அவர் திறந்து விட்டுள்ளார்.
பள்ளியில் மாணவன் தேர்வு எழுதும் போது காப்பி அடித்தால் அந்த மாணவனை தண்டிப்பார்கள், அதேபோல் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
ஜெயலலிதா வைத்துள்ளது கூட்டணி அல்ல சீட்டணிதான். கலைஞரின் கூட்டணி தான் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை.
தூக்கி எறியப்பட்ட வைகோ
கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் கூட்டணி வைத்திருந்த ஒருவரை (வைகோ) தூக்கி எறிந்து விட்டார். அதேபோல தான் மக்களாகிய உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார்.
கலைஞர் அனைவருக்கும் வீடு வேண்டும் என்பதற்காக காங்கிரீட் வீடு கட்டித் தருகிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிளாட்பாரத்தில் தான் படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குஷ்பு புசுபுசுவென இருக்கிறார் என்று நீங்கள் அனைவரும் நினைக்கின்றீர்கள், அதேபோல் உங்கள் குழந்தைகளும் புசுபுசுவென இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தை தருகிறார். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகவும் அறிவித்துள்ளார். எனவே கலைஞர் ஆட்சி மலர உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
Source : Daily Thanthi
63 தொகுதிகளிலும் காங்கிரûஸ தோற்கடிப்போம்: சீமான்
சென்னை, மார்ச் 25: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நாங்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். தமிழர் தேசிய இனத்தோடு உணர்வு, உயிர், உடைமை என அனைத்திற்கும் எதிராகவும், இலங்கை அரசுக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். பூலித்தேவன் பிறந்த திசையன்விளையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்தை தொடக்க உள்ளேன். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாங்கள் செய்யும் பிரசாரம் காங்கிரûஸ மட்டும் இல்லாமல், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சி நிற்கும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள அ.தி.மு.க, தே.மு.தி.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வைகோ எடுத்த முடிவு குறித்து நான் கருத்து கூற முடியாது. அவர் நல்ல அரசியல் அனுபவம் மிக்கவர், எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். தமிழர் நலனை குறிக்கோளாகக் கொண்ட கட்சிகள் தி.மு.க. - காங்கிரஸ் அணியில் இருக்கின்றன என்பதற்காக நாங்கள் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யமாட்டோம். அவர்கள் உள்ளே இருந்தும், நாங்கள் வெளியே இருந்தும் காங்கிரஸýக்கு நெருக்கடி ஏற்படுத்துவோம். இலவச திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றாது. இலவச திட்டங்களால் தமிழம் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. அப்படி இருக்கும்போது இப்போது மீண்டும் இலவச கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது ஏன்? என்றார் சீமான். Source : Dinamani
No comments:
Post a Comment