Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Sunday, 3 April 2011

அழகிரியைக் கைது செய்ய வேண்டும் : ஜெயலலிதா கோரிக்கை - டெக்கான் கிரானிக்கிளில் மட்டும் செய்தி

 தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மு க அழகிரியைக் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக தலைவி ஜெயலலிதா , திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய மதுரையின் நிஜமான சூழலை மனதில் கொண்டு ஜெயலலிதா விடுத்துள்ள இந்த கோரிக்கை, டெக்கன் கிரானிக்கிளில் மட்டும் இடம்பெற்றுள்ளது.
தமிழ் நாளிதழ் எதிலும் இது தொடர்பான செய்திகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Tuesday, 22 March 2011

ஜெயலலிதா பிரச்சாரத் திட்டம்:தினத்தந்தியில் முழுமையாக வெளியீடு

அதிமுக பொதுச் செயலரின் 18 நாட்கள் பிரச்சார சுற்றுப் ப்யணம் குறித்த அறிக்கை முழுமையாக தினத் தந்தியில் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை தினமலர், தினகரன், தினமணியில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் நிரம்பிய அறிக்கைகளை எடிட் செய்தும் சுருக்கமாகவும் வெளியிடுவதை விடவும், விரிவாக வெளியிடுவதுதானே சரி ?எங்கள் ஆசிரியர்கள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.

 அடுத்த 18 நாட்களில் ஜெயலலிதா எங்கே இருக்கின்றார் என்பதைத் தேட இது போன்ற அறிவிப்புகள் பெருமளவில் உதவும்.


அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
ஜெயலலிதா 24-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம்
திருச்சியில் தொடங்குகிறார்


சென்னை, மார்ச்.22-

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 24-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 24-3-2011 முதல் 11-4-2011 வரை அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து 18 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

திருச்சி

24.3.2011 (வியாழக்கிழமை): திருச்சி பகுதி- மாம்பழச் சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பகுளத் தெரு கார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, காந்தி ரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின் ரோடு, திருவானைக்கோவில் சன்னதி வீதி, நடுக்கொண்டையன்பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை, பாலக்கரை.

25.3.2011 (வெள்ளிக்கிழமை): திருச்சி பகுதி- கம்மரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்பூர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர்.

கந்தர்வகோட்டை

26.3.2011 (சனிக்கிழமை): திருச்சி பகுதி - கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், மணிகண்டம் ïனியன் ஆபிஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மாவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜி நகர் மில் கேட், தீரன் நகர், கருமண்டபம்.

27.3.2011 (ஞாயிற்றுக்கிழமை): கந்தர்வகோட்டை பகுதி: கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர், திருவையாறு, தஞ்சாவூர்.

28.3.2011 (திங்கட்கிழமை): தஞ்சாவூர் பகுதி - திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி.

தூத்துக்குடி

29.3.2011 (செவ்வாய்க்கிழமை): விழுப்புரம் பகுதி - விழுப்புரம், திருவண்ணாமலை.

30.3.2011 (புதன்கிழமை): வேலூர் பகுதி - வேலூர், காஞ்சீபுரம்.

1.4.2011 (வெள்ளிக்கிழமை): கன்னியாகுமரி பகுதி - கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி.

2.4.2011 (சனிக்கிழமை): தூத்துக்குடி பகுதி - தூத்துக்குடி, சிவகாசி, மதுரை.

3.4.2011 (ஞாயிற்றுக்கிழமை): கம்பம் பகுதி - கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சிலமலை, போடிநாயக்கனூர், நத்தம், மதுரை.

4.4.2011 (திங்கட்கிழமை): பரமக்குடி பகுதி- முதுகுளத்தூர், தூவல், பரமக்குடி, காரைக்குடி, மதுரை.

திருப்பூர்

5.4.2011 (செவ்வாய்க்கிழமை): உதகமண்டலம் பகுதி - உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், இடையார்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, பீளமேடு, செட்டி வீதி, உக்கடம் பைபாஸ், சிங்காநல்லூர், நீலாம்பூர், காளப்பட்டி.

6.4.2011 (புதன்கிழமை): திருப்பூர் பகுதி - திருப்பூர் (பாண்டியன் நகர்), செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, பொலவகாளிபாளையம், கோபிசெட்டிப்பாளையம்.

7.4.2011 (வியாழக்கிழமை): கோபிசெட்டிப்பாளையம் பகுதி - கரூர், பரமத்தி, தென்னிலை, வெள்ளக்கோவில், முத்தூர், விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, காசிபாளையம், ஈரோடு.

8.4.2011 (வெள்ளிக்கிழமை): நாமக்கல் பகுதி - நாமக்கல், ஆண்டலூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், போஸ் மைதானம்.

கிருஷ்ணகிரி

9.4.2011 (சனிக்கிழமை): கிருஷ்ணகிரி பகுதி - காரிமங்கலம், பைïர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஓசூர்.

10.4.2011 (ஞாயிற்றுக்கிழமை): சென்னை பகுதி - மயிலாப்பூர், டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கார் பாலம், கச்சேரி ரோடு, மாங்கொல்லை, மலர் மருத்துவமனை, திருவான்மிïர் சிக்னல், பெருங்குடி, விஜய நகரம், கோவிலம்பாக்கம்-கீழ்க்கட்டளை ஜங்ஷன், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், ஆற்காடு சாலை, துரைசாமி சாலை, சிங்கார வேலர் திடல், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அமைந்தகரை மார்க்கெட், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சிந்தாதிரிப்பேட்டை, டாக்டர் நடேசன் ரோடு, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை.

சென்னை

11.4.2011 (திங்கட்கிழமை): சென்னை பகுதி - அம்பத்தூர், பாடி மேம்பாலம், கொன்னூர் நெடுஞ்சாலை, என்.எம்.கே. தெரு, அயன்புரம் மார்க்கெட், வெங்கடேசபுரம் காலனி, பெரம்பூர் மேம்பாலம், பெரவலூர் சதுக்கம், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம், மேல்பட்டி பொன்னப்ப தெரு, மூர்த்திங்கர் தெரு, அசோக் பில்லர், முல்லை நகர் மேம்பாலம், திரு.வி.க. லிங்க் ரோடு, வைத்யநாதன் பாலம், வ.உ.சி. நகர் மார்க்கெட் லைன், டோல்கேட், எல்லையம்மன் கோயில் தெரு, கடற்கரை சாலை, எஸ்.என். செட்டித் தெரு, ராயபுரம் என்-1 காவல் நிலையம், சிமென்ட்ரி ரோடு, தங்கசாலை மணிக்கூண்டு, பேசின்பாலம், அம்பிகா ஓட்டல், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, வெங்கட்டம்மா சமாதி தெரு, பிளவர்ஸ் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 அதிமுக வேட்பாளர் பட்டியலைப் போலவே தேமுதிக வேட்பாளர் பட்டியலும், தினத்தந்தியில் துல்லியமாகவும், தினமலரிலும், தினமணியிலும் சுருக்கமாகவும் தரப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது
தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் அறிவிப்பு
வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டி


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டனர். விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சென்னை, மார்ச்.22-

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

20 மணி நேரம் பேச்சுவார்த்தை

தே.மு.தி.க. போட்டியிடும் 41 தொகுதிகள் எவை, எவை என்பதை அடையாளம் காண்பதற்காக இரு தரப்பினரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு சில தொகுதிகளில் இரு கட்சிகளுமே தீவிர ஆர்வம் காட்டியதால் இழுபறி நிலை ஏற்பட்டு விடிய, விடிய பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போனது.

2 நாட்களாக சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் பேசிய பிறகு நேற்று முன்

தினம் இரவில் உடன்பாடு ஏற்பட்டது.


ஜெயலலிதா அறிவித்தார்


இதையடுத்து அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க.வின் 160 தொகுதிகளுக்கான திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் பட்டியலையும் அறிவித்தார்.


இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டன. அவை வருமாறு:-


1. விருத்தாசலம், 2. திருக்கோவிலூர், 3. ரிஷிவந்தியம், 4. திருச்செங்கோடு, 5. ஆரணி, 6. செங்கம் (தனி), 7. பட்டுக்கோட்டை, 8. கும்மிடிப்பூண்டி, 9. திருத்தணி, 10. சோளிங்கர்.


11. தர்மபுரி, 12. கங்கவல்லி (தனி), 13. மதுரை மத்தி, 14. கூடலூர் (தனி), 15. திருவாடானை, 16. திட்டக்குடி (தனி), 17. குன்னம், 18. மயிலாடுதுறை, 19. திருவெறும்பூர், 20. சேலம் (வடக்கு).


21. ராதாபுரம், 22. சூலூர், 23. விருகம்பாக்கம், 24. ஓசூர், 25. லால்குடி, 26. பேராவூரணி, 27. செங்கல்பட்டு, 28. எழும்பூர் (தனி), 29. செஞ்சி, 30. ஈரோடு (கிழக்கு).


31. கம்பம், 32. சேந்தமங்கலம், 33. திருப்பரங்குன்றம், 34. விருதுநகர், 35. ஆத்தூர், 36. பண்ருட்டி, 37. அணைக்கட்டு, 38. பத்மநாபபுரம், 39. வேப்பனஹள்ளி, 40. மேட்டூர், 41. ஆலந்தூர்


மேற்கண்ட 41 சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஆனது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.


மேற்கண்டவாறு அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.


ஒப்பந்தத்தில் விஜயகாந்த் கையெழுத்து


இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே பொது தேர்தல் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு இந்த 41 தொகுதிகளும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.


ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தும் கையெழுத்திட்டிருந்தனர்.


41 வேட்பாளர்கள்


தொகுதிகள் முடிவானதை தொடர்ந்து விஜயகாந்த் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 3 கட்டங்களாக வெளியிட்டார்.


கடந்த தேர்தலில் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை அவர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலந்தூரிலும், நடிகர் அருண்பாண்டியன் பேராவூரணியிலும் போட்டியிடுகிறார்கள்.


பட்டியல் விவரம்


விஜயகாந்த் அறிவித்த முதல் பட்டியலில் 11 பேரும், 2-வது பட்டியலில் 24 பேரும், 3-வது பட்டியலில் 6 பேரும் இடம் பெற்று இருந்தனர். பட்டியல்

விவரம் வருமாறு:-



1. விருதுநகர்- க.பாண்டியராஜன் (தேர்தல் பணி செயலாளர்)

2. மதுரை மத்தி- ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க. மாநில பொருளாளர்)

3. ஈரோடு கிழக்கு- வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்)

4. கம்பம்- பி.முருகேசன் (துணை செயலாளர்)

5. பட்டுக்கோட்டை- என்.செந்தில் குமார் (மாநில இளைஞர் அணி துணை செயலாளர்)

6. ராதாபுரம்- மைக்கேல் எஸ்.ராயப்பன் (உயர் மட்டக்குழு உறுப்பினர்)

6. சேலம் வடக்கு- ஆர்.மோகன்ராஜ் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்)

7. திருக்கோவிலூர்- எல்.வெங்கடேசன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்)

9. ஆத்தூர்- எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)

10. கூடலூர் (தனி)- எஸ்.செல்வராஜ் (நீலகிரி மாவட்ட செயலாளர்)

11. சேந்தமங்கலம்- சாந்தி ராஜமாணிக்கம் (நாமக்கல் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்)

12. ரிஷிவந்தியம்-விஜயகாந்த் (நிறுவன தலைவர்).

13. ஆலந்தூர்-பண்ருட்டி எஸ்.ராமசந்திரன்(அவைத்தலைவர்)

14. செங்கம் (தனி) -டி.சுரேஷ் குமார்(துணை செயலாளர்)

15. எழும்பூர்(தனி)-கு.நல்லதம்பி (மாநில இளைஞரணி துணைசெயலாளர்)

16. பண்ருட்டி - பி.சிவக் கொளுந்து(கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்)

17. சூலூர் - கே.தினகரன் (கோவை தெற்கு மாவட்ட செயலாளர்)

8. குன்னம் - துரை காமராஜ்(பெரம்பலூர் மாவட்ட செயலாளர்)

19. மேட்டூர் - எஸ்.ஆர்.பார்த்திபன்(சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்)

20.தருமபுரி-ஏ.பாஸ்கர்(தர்மபுரி மாவட்ட இளைஞரணி செயலாளர்)

21. ஆரணி - ஆர்.மோகன் என்ற மோகனம்

22. பேராவூரணி-சி.அருண் பாண்டியன்(நடிகர்)

23. சோளிங்கர் -பி.ஆர்.மனோகர்(அரக்கோணம் நகர செயலாளர்)

24. திருவாடனை-முஜிபுர் ரகுமான்(மாநில செயற்குழு உறுப்பினர்)

25. லால்குடி-செந்தூர்ரேஸ்வரன்(மாநில மாணவரணி செயலாளர்)

26. திருப்பரங்குன்றம் - ஏ.கே.டி.ராஜா(மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்)

27. அணைக்கட்டு - வி.பி. வேலு(வேலூர் மத்திய மாவட்ட செயலாளர்)

28. திருவெறும்பூர்-எஸ்.செந்தில்குமார்.(திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்)

29. கெங்கவல்லி- ஆர். சுபா (சேலம் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலாளர்)

30. ஓசூர்-ஜான்சன்(கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)

31. செஞ்சி-சிவா என்ற சிவலிங்கம்(விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்)

32. மயிலாடுதுறை-பால அருட்செல்வம்(நாகை வடக்கு மாவட்ட செயலாளர்)

33. செங்கல்பட்டு-டி.முருகேசன்(காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்)

34. வேப்பனஹள்ளி-எஸ்.எம்.முருகேசன்(மாநில பொதுக்குழு உறுப்பினர்)

35. விருத்தாசலம்-முத்துகுமார்(விருத்தாசலம் ஒன்றிய செயலாளர்)

36.விருகம்பாக்கம்-ப.பார்த்தசாரதி (தலைமை நிலைய செயலாளர்)

37.கும்மிடிப்பூண்டி-சி.எச்.சேகர் (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

38.பத்மநாபபுரம்-எஸ்.ஆஸ்டின் (துணை செயலாளர்)

39.திருத்தணி-மு.அருண் சுப்பிரமணியம் (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்)

40.திருச்செங்கோடு-பி.சம்பத்குமார் (நாமக்கல் மாவட்ட செயலாளர்)

41.திட்டக்குடி (தனி)-தமிழ்அழகன் (நல்லூர் ஒன்றிய செயலாளர்)

ஒத்துழைப்பு

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும் கழக மற்றும் அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு தந்து பொது மக்களின் ஆதரவை பெற்று அவர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Saturday, 12 March 2011

வதந்திகளால் கட்டமைக்கப் படும் தமிழ் செய்தி உலகம்

கவுண்டம் பாளையத்தில் ஜெயலலிதா போட்டி: தமிழ் ஓசை (பா ம க நாளிதழ்)
திருவாரூரில் கருணாநிதி போட்டி : தினத்தந்தி
தொகுதிக்கு 70 வேட்பாளர்களை நிறுத்தி வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தவிர்க்க அதிமுக திட்டம்: தினமணி


தமிழ் நாளிதழ்கள் வதந்திகளைப் பெரிதும் நம்பியே இயங்கிக் கொண்டிருக்கின்ற்ன. செய்திகளுக்கு உரிய ஆதாரங்களை உரிமைப் படுத்தும் (attribution) முயற்சிகளை அவை பொருட்படுத்துவதில்லை என்று உறுதியாகக் கூறுவதற்கு ஏராளமான சான்றுகளைச் சொல்ல முடியும்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்
தொகுதி மாறுகிறார் செயலலிதா
ஆண்டிப்பட்டிக்குப் பதில் கவுண்டப் பாளையத்தில் போட்டியிட முடிவு

என்ற தலைப்பிட்ட செய்தி 12 030211 நாளிட்ட தமிழ் ஓசை நாளிதழின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி முழுக்க இதற்கான ஆதாரம் எதையும் அந்த நாளிதழ் மேற்கோள் காட்டவில்லை.
ஓரிடத்தில்  அதிமுக வுக்கு நெருக்கமான் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர் என்றும், இன்னுமொரு இடத்தில், அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் , இன்னுமொரு இடத்தில் அதிமுக மூத்த நிருவாகி ஒருவர் தெரிவித்தார் என்றும் சொல்லிக் கொண்டே போகும் இச்செய்தி, ஏன் ஆண்டிப்பட்டியை விடுத்து கவுண்டம்பாளையத்தை, அதிமுக பொதுச் செயலர் தெரிவு செய்யவிருக்கின்றார் என்பதற்கு நம்பும் படியான வாதங்களை முன்வைத்துள்ளது. ஆனால், மூன்று விதமான தகவல் மூலங்களைக் கொண்டு கட்டமைக்கும் இச்செய்தியில் ஏன் ஒருவரைக் கூட மேற்கோள் காட்ட இயலவில்லை. இச்செய்தி உண்மையாகக் கூட அமைந்து விடலாம். ஆனால், உரிமையாக்கிக் கூறாமல் (attribution) , வெளியிடப் படும் செய்தி, வதந்திக்கு உரிய மரியாதையையே பெறும் என்பதை இவர்கள் கவனிப்பதில்லையே ஏன் ?
இது பா ம க நடத்தும் பத்திரிகைக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல.
தினத்தந்தியில் இன்று (12 3 2011) புதுச்சேரிப் பதிப்பின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள கீழ்க்கண்ட செய்தியைக் கவனியுங்கள் :
இந்தச் செய்தியிலும் உரிமையாக்கிக் கூறப்படும் முயற்சி எதுவும் இல்லை. இது உண்மையாகவும் இருக்கலாம். இந்தக் கணிப்பு தவறாகி செய்தி பொய்யாகப் போகும் வாய்ப்பும் உண்டு.
ஆனால்,  அது குறித்த எந்த அச்சமும் தினத்தந்தியிடம் இல்லை.

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டி?
வேறு யாரும் அங்கு விணணப்பிக்கவில்லை



சென்னை, மார்ச்.12-

தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில் திருவாரூர் தொகுதியில் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிட வேணடும் என்று 750 பேர் மனு கொடுத்திருந்தனர். அந்த தொகுதியில் தாங்கள் போட்டியிட வேணடுமென்று விருப்பம் தெரிவித்து வேறு யாரும் விணணப்பம் தாக்கல் செய்யவில்லை.

ஆகவே திருவாரூர் தொகுதியில் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்து தினமணியில் வெளியாகியுள்ள கீழ்க்கண்ட செய்தியைக் கவனியுங்கள்:  நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு இயந்திர வாக்குப் பதிவு முறையைத் தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் 70 பேரை போட்டியிட வைப்பது குறித்து அதிமுக சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது என்பது தான் செய்தி. செய்தி முழுக்க ஒரு முக்கிய திட்டம் குறித்து விரிவாக விளக்கப் படுகின்றது. ஆனால், எங்குமே யாரையுமே மேற்கோள் காட்டாமல் இது ஒரு கற்பனயான செய்தியா, வதந்தியா, அல்லது அதிமுக உண்மையிலேயே இப்படி ஒரு திட்டமிட்ட காரியத்தில் இறங்கப்
போகிறதா என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது.  முதலில் இந்த சதித் திட்டத்தை விளக்கும் செய்தியை வாசியுங்கள் :


மின்னணு வாக்குப் பதிவைத் தடுக்க புதிய உத்தி 

ஒவ்வொரு தொகுதியிலும் 70 பேர் போட்டி?


சென்னை, மார்ச் 11: நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு இயந்திர வாக்குப் பதிவு முறையைத் தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் 70 பேரை போட்டியிட வைப்பது குறித்து அதிமுக சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட, வட்டார, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் உள்ள பாரூர் சட்டப்பேரவை தொகுதியில் 50 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படிப்படியாக முழு அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பது மின்னணு வாக்குப்பதிவில் உள்ள குறையாகும்.

வாக்குச் சீட்டு முறையில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு வெளியாக 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஆனது. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தேர்தல் முடிவுகள் 3 அல்லது 4 மணி நேரத்தில் வெளியிடப்பட்டன.
இதனால் அரசியல் கட்சிகள் தொடக்கத்தில் இதை வரவேற்றன. ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வதாக பரவலாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளித்தது. தவிர சந்தேகம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகளை தனித்தனியாகவும் அழைத்து செயல்முறை விளக்கம் மூலம் சந்தேகங்களை நீக்க முயற்சி செய்தது. ஆனால் பிரதான தேசிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உள்பட பல கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பி வருகின்றன. இருப்பினும் இந்த சந்தேகங்களை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைக்கு அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எனவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் 64 பேருக்கு அதிகமாக அதாவது சுமார் 70 பேரை போட்டியிடச் செய்ய திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
64 பேருக்கு மேல் போட்டியிட்டால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. பழைய முறையான வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடந்த முடியும்.
அண்மையில் ஆந்திரத்தின் தெலங்கானா பகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சில தொகுதிகளில் 64 பேருக்கும் அதிகமாக போட்டியிட்டதால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்தது.ஆனால் 234 தொகுதிகளிலும் 70 பேரை போட்டியிடச் செய்வது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்களால் எழுப்பப்படுகிறது.

தினமலரில் எது செய்தி, எது வதந்தி, எது பொய், எது உண்மை என்று வித்தியாசம் காணும் முயற்சியே வேண்டாம்.  எந்தச் செய்தியிலும் உரிமையாக்கிக் கூறும் பண்பையே காண முடியவில்லை.தினகரனிலும் இதே நிலவரம் தான்.  இனிவரும் காலங்களில் முறையாக அறிக்கையிடப் பட்ட செய்தி என்று ஏதேனும் தென் பட்டால், கட்டாயம் இங்கே பதிவு செய்வோம்.
இதில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கவை:
1. செய்திகளை உரிய முறையில் அறிக்கையிட,எந்தத் தமிழ் நாளிதழும் மெனக்கிடுவதேயில்லை.  இதற்கு அறியாமை காரணமா ? பயிற்சி இன்மை காரணமா ?
2. அல்லது தமிழ் வாசகப் பெருமக்களுக்கு இப்படி அரையும் குறையுமாகச் செய்தியைக் கொடுத்தால் போதும் என்று தமிழ் வாசகர்கள் பற்றிய தாழ்வான மதிப்பீடு காரணமா ?
ஆய்வாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

Friday, 11 March 2011

ஜெயலலிதாவின் அறிக்கை: 3 நாளிதழ்கள் 3 விதமாக வெளியிடல் தினமணி: நன்று ; தினமலர் : கொஞ்சம் சொதப்பல்; தினத்தந்தி : முற்றிலும் நீர்த்துப் போகச் செய்தல்


 தயாநிதி மாறனையும், சன் டி வியையும், திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து அதிமுக பொதுச்செய்லாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையை, தினமலர், சன் டிவி, தயாநிதி மாற்ன் தொடர்பான பகுதிகளை எடிட் செய்து விட்டு, வெளியிட்டுள்ளது. தினத்தந்தி, எந்த விமர்சனப் பகுதியையும் வெளியிடாமல், யாருக்கும் பாதகமோ,  முக்ச் சுளிப்போ ஏற்படுத்தாத வகையில் எடிட் செய்து விட்டு,  சில பாதகமில்லாத பகுதிகளை மட்டும் வெளியிட்டுள்ளது..
தினகரனில் செய்தியையே காணவில்லை. தினமணி யின் செய்தி கொஞ்சம் எடிட் செய்யப் பட்டிருந்தாலும், அரசியல் ரீதியாக ஓரளவு முழுமையாக இருப்பதாகக் கொள்ளலாம்.
இங்கே மூன்று நாளிதழ்களிலும் வெளிவந்த பகுதிகளின் சொடுக்குகளைத் தருகின்றோம். சொடுக்கிப் படிக்கலாம்.
தினமலர் : காங்., - தி.மு.க., கபட நாடகம்: ஜெயலலிதா கடும் தாக்கு

தினத்தந்தி :தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும்
விலைமதிப்பற்ற வாக்கினை செலுத்த முன்வர வேண்டும்
ஜெயலலிதா வேண்டுகோள்


தினமணி :திமுகவின் நாடகம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை: ஜெயலலிதா

Thursday, 10 March 2011

அனைத்து நாடார் சமுதாய் மக்கள் இணைந்து தொடங்கியுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி குறித்து தினமலரும், தினகரனும், செய்தி எதுவும் வெளியிடாதது ஏன் ?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பணிக்குழு நியமனம் என்ற செய்தி தினமணியில் 05 03 2011 அன்று 3ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

திமுக விலகியதை விசிக வ்ரவேற்கிறது : தொல் திருமாவளவன் அறிக்கை என்ற செய்தி தினத்தந்தியில் 05 03 2011 அன்று 4 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தினமலரில்  விடுதலைச் சிறுத்தைகள் தொடர்பான இந்தச் செய்திகள் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது
.


தனித்து நின்றாலும் வெற்றி உறுதி
காங்கிரஸ் நிபந்தனைக்குக்
க்ட்டுப் ப்டக் கூடாது
திமுகவுக்கு வீரமணி வேண்டுகோள்
என்ற செய்தி தினத்தந்தியில் 06032011 அன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையையும் தினமலரில் காண இயலவில்லை.


ஆளும் கட்சிக்கு மட்டும் பூரண ஆதரவு. எந்த விமர்சனத்திற்கும் இடமே இல்லை. என்ற குறைகளை தினத்த்ந்தியில் காணமுடிந்தாலும், பல்வேறு தரப்பான அரசியல் இயக்கங்களுக்கான இடத்தைத் தருவதில் தினத்தந்தி முன்னணியில் இருப்பதாகவே தோன்றுகின்றது. இனி வரும் நாட்களில் இதை உறுதி செய்ய முயல்வோம்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஆர் நல்லக் கண்ணு  ஒரு கூட்டத்தில் பேசியதாக ஒரு செய்தி தினத்த்ந்தியில் வெளியாகியிருந்தது. அந்தத் தலைப்பு இது:


சுதந்திர இந்தியாவில் தேர்தல் சின்னத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி: பயிற்சி முகாமில் ஆர் நல்லக் கண்ணு பேச்சு   தினத்தந்தி 05 03 2011 ப்.10

அனைத்து நாடார் சமுதாய் மக்கள் இணைந்து  தொடங்கியுள்ள  பெருந்தலைவர் மக்கள் கட்சி குறித்து தினமலரும், தினகரனும், செய்தி எதுவும் வெளியிடாதது ஏன் ?  

சரத்குமார் தலைமையில் நாடார்கள் புதிய இயக்கம் என்ற செய்தி தினமணியில் 0803 2011 அன்று முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று காமராஜர் பெயர்ல் புதிய கட்சி
அனைத்து நாடார் சமுதாய் மக்கள் இணைந்து தொடக்கம் என்ற‌
செய்தி தினத்தந்தியில் 08 03 2011 அன்று 5 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி தின்மலரிலோ, தினகரனிலோ, தி இந்துவிலோ வெளியிடப் படவில்லை.

மகளிர் தினத்தன்று கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகளிருக்காகத்  தனது அரசு செய்த சாதனைகளை கருணாநிதி அறிக்கையாக வெளியிட, அதனைத் தினகரன் அப்படியே 08 03 2011 அன்று வெளியிட்டது. (பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சியில் தான் ஏராளமான திட்டங்கள்
மகளிர் தினத்துக்கு கருணாநிதி வாழ்த்து தினகரன் 08 03 2011 ப்.5).

ஆனால், அதே நாளில்  "அதிகாரம் அளிக்கும் புதிய பாதையில் பெண்கள் அடியெடுத்து வைக்க வேண்டும்" என்று   உலக மகளிர் தினத்தையொட்டி  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை தினத்தந்தி மட்டுமே வெளியிட்டுள்ளது. (தினத்தந்தி 08 03 2011 ப்.12 )