Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Wednesday, 13 April 2011

தமிழீழ விடுதலை இயக்கங்கள் மீது தினமலரின் திடீர்க் கரிசனம் ?

இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாகக் கூட நடந்து கொள்வார்களா என்று எங்கள் எல்லோரையும் திகைக்க வைத்த செய்தி தினமலரில் இன்றும் நேற்றும் இடம் பெற்ற தமிழீழ் விடுதலைப் புலிகள் குறித்தவை.
திடீரென தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் நாளான இன்றும், நேற்றுமாக இரு செய்திகள் தினமலரில் இடம்பெற்றன.
இரண்டும், விடுதலைப்புலிகள் தமிழக முதல்வரிடம் தொடர்புகொண்ட நிக்ழ்வுகள் தொடர்பானவை. இந்த நிகழ்வுகள் நடந்த போது தினமலரில் இது போன்ற செய்திகள் எதுவும் வெளியிடப் படவில்லை. இப்பொழுது இந்தச் செய்திகளை வெளியிட வேண்டிய தேவையோ, சூழலோ எதுவுமே இல்லை.
தேர்தலில் வாக்களிக்கப் போகும் முன்பு, தமிழ் உணர்வாளர்களிடம், கருணாநிதி மீது கோபமும் வெறுப்பும் உருவாக்க வேண்டும் என்பது தானே இந்த இரு செய்திகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
த்மிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த தினமலரின் நிலைப்பாடு உலகறிந்தது. இப்பொழுது ஏதோ ஒரு உண்மையைக் கண்டுபிடித்து விட்டதைப்போல இந்த இரு செய்திகளை வெளியிடவேண்டியது ஏன் ?
நேற்று இன்றைய செய்திகளின் தொடர்ச்சியாக, அடுத்து ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ இது போன்று விடுதலைப்புலிகளுக்கு  ஆதரவாகவும், கருணாநிதிக்கு எதிராகவும் தினமலர் வெளியிட்டுவருமானால், இந்த எங்களின் புரிதலே தவறானது என்றாகும். மாறாக, நாளை முதல் இந்த இரு செய்திகளின் தொடர்ச்சியாக எதுவுமே இடம்பெறவில்லையென்றால், தினமலரின் வழக்கமான குறும்புகளில் இதுவும் ஒன்று என்று முடிவு கட்டத்தான் வேன்டும்.
தினமலரில் 12 04 2011, 13 04 2011 ஆகிய இரு தினங்களில் வெளிவந்த இரு செய்திகள் ;











 
 

Sunday, 10 April 2011

மதிமுக நிலை குறித்து தினம்லரின் தொடர்ச்சியான கிண்டல்

எது செய்தி ? எது விமர்சனம் ? எது கருத்துரை  என்று வேறுபடுத்திப் புரிந்துகொள்ள முடியாத அளவு குழப்பமான நிலையிலேயே வெளியிடுவது தமிழ் இதழ்கள் பலவற்றின் வழக்கமாகி வருகின்றது. இதில் முதலிடம் பிடிக்கும் வெகுஜன நாளிதழ் தினமலர் என்பது மீண்டும் மீண்டும் இப்பகுதியில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றது.
10 04 2011 அன்று வெளியான தினமலர் இதழில், "என்ன செய்யப் போகிறது வெண்கலப்பானை", என்ற தலைப்பில் ஒரு  செய்தி (?) வெளியாகியுள்ளது.
மீண்டும் மீண்டும் மதிமுக குறித்து தகவலை வெளியிடுவது, அதற்கு உரிய விளக்கங்க்ள் அளிக்கப்பட்டால், அதை வெளியிட ம்றுப்பது என்று தொடர்ந்து செயல்பட்டுவரும் தினமலர் நாளிதழ், இச்செய்தியில் எவரையும் மேற்கோள் காட்டாமல் ஒரு கருத்துரையை செய்தியாகத் தோன்றுமாறு வெளியிட்டுள்ளது.

தமிழர் தேசிய இயக்கத்தின் செய்திக்குறிப்பிற்கு செய்திப் பகுதியில் இடமில்லை

தமிழர் தேசிய இயக்கத்தின் செய்திக்குறிப்பு ஒன்று விளம்பரமாக இன்று 10 04 2011 தினமலர் இதழில் இடம் பெற்றுள்ளது. அதில் உள்ள தகவல்கள் செய்தியாக இடம்பெறத்தக்கவை. ஒரு அரசியல் இய்க்கத்தின் நியாயமான செய்தி அறிக்கையை வெளியிட, தமிழ் நாளிதழ்ச் சூழல் உகந்ததாக இல்லை என்பதால், தமிழ் உணர்வாளர்கள் உதவியுடன் விளம்பரமாக இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
வணிகமயமாகிப் போன நவீன தமிழ் இதழியலின் போக்கைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது இந்த விள்மபரம்.

























































Courtesy : Dinamalar.com

Saturday, 9 April 2011

வடிவேலு மீது செருப்பு வீசப்பட்டதற்கு தினமலரும் தினத்தந்தியும் அதீத முக்கியத்துவம்

 பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீது செருப்பு வீசப்படுவது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு முயற்சி என்றாலும், இந்தச் செய்திக்கு படத்துடன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. ஆங்கிலப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாகவே கருதப் படாததால், இது தொடர்பான செய்தி ஆங்கிலச் செய்தி இதழ்களில் காணப் படவில்லை. தமிழில், தினமலரும் தினத்தந்தியும் மட்டுமே இந்தச் செய்திக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.


தினத்தந்தியில் வெளிவந்த செய்தி
திருச்சி திருவானைக்காவலில்
வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீச்சு; தி.மு.க.வினர் சாலை மறியல்
தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது


திருச்சி, ஏப்.8-

திருச்சி திருவானைக்காவலில் வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது.

வடிவேலு பிரசாரம்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் திறந்த வேனில் நின்றபடி வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவரது பேச்சை கேட்க ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர்.

செருப்பு வீச்சு

இந்த நிலையில் வேட்பாளரை ஆதரித்து பேசி முடித்ததும் வடிவேலு திறந்த வேனில் நின்றபடி மக்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு செருப்பு வடிவேலுவை நோக்கி வீசப்பட்டது. இந்த செருப்பு பிரசார வேனின் மீது மேல் பகுதியில் வந்து விழுந்தது. அடுத்து வீசப்பட்ட மற்றொரு செருப்பு பிரசார வேன் மீது பட்டு கீழே விழுந்தது. இதையடுத்து வடிவேலு பிரசார வேனின் உள்பகுதிக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரசார வேன் அடுத்த இடத்திற்கு புறப்பட்டு சென்றது.

வடிவேலு பிரசார வேன் மீது செருப்புகள் விழுந்ததை கண்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கொந்தளித்து போனார்கள். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசார வாகன அணிவகுப்பில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது.

தே.மு.தி.க. அலுவலகம் சூறை

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அந்தபகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் கூட்டத்தில் இருந்து செருப்பு வீசியவரை போலீசார் பிடித்து சென்றனர். விசாரணையில் அவர் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. முன்னாள் நிர்வாகி மாசிலாமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாசிலாமணியை கைது செய்தனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. நிர்வாகி தான் செருப்பு வீசியது என தெரிந்ததும் திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதி தே.மு.தி.க. அலுவலகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் பிளக்ஸ் போர்டுகளை ரோட்டில் போட்டு கிழித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தே.மு.தி.க.வினரும், அ.தி.மு.க.வை சேர்ந்த குமார் எம்.பி. மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பிரச்சினை உருவாகாமல் இருக்க திருவானைக்காவல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.


-------

செருப்பு வீச்சு எதிரொலி: வடிவேலு பிரசாரத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் நடிகர் வடிவேலு தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த போது அவரது வேன் மீது செருப்பு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் வடிவேலு பிரசாரம் செய்த போது போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் வடிவேலு அடுத்த இடத்தில் பிரசாரம் செய்யும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கிராப்பட்டி, எ.புதூர் பகுதிகளில் போலீசார் கையில் கேமராவுடனும், துணை ராணுவ படையினரும், உயர்ந்த கட்டிடங்களின் மாடிகளிலும் போலீசார் நின்று கொண்டு கண்காணித்தனர். பிரசாரம் முடியும் வரை நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source : Dailythanthi.com

எந்தத் தவறையும் ஒப்புக் கொள்ள மறுக்கும் தினமலர் விஜய்காந்த் மறுப்பையும் வெளியிடவில்லை




கோவை பொதுக்கூட்டத்தில் ஜெய்லலிதாவுடன் விஜய்காந்த் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த தினமலர் இது குறித்து ஒரு முதன்மைச் செய்தியை வெளியிட்டது. பிற நாளிதழ்கள் இது குறித்து எந்த்த விதப் பதிவைக் கூடச் செய்யயாத நிலையில் தினமலர் மட்டும் ஏன் இத்த்னை தூரம் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று இந்த வலைப்பதிவிலும் கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.
இப்பொழுது தான் ஏன் கோவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விஜய்காந்த் விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவலை தினமணி பதிவு செய்துள்ளது. அதிர்ச்சியும் வியப்பும் மேலிட பெரிய அளவில் செய்தி வெளியிட்ட தினமலரோ தனது செய்தி ஆதாரமற்றது எனத் தெரிந்த நிலையில், உண்மையான நிலையைத் தனது வாசகர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இது குறித்து செய்தியை வெளியிட முன்வரவில்லை.
அரைகுறையான புரிதலுடன் ஒரு செய்தியை வெளியிடுவது, செய்தியால் பாதிக்கப் பட்டவரக்ள் விளக்கமளித்த பின்பும், அந்த விளக்கத்தை வெளியிடாமல் இருப்பது, இதே தவற்றைத் தொடர்ந்து செய்வது என்பது இந்திய இதழியலில் தினமலர் தவிர பிற மொழி இதழ்கள் எதிலேனும் காணப் படுகின்றதா என்பதை ஆய்வாளர்கள் தான் விளக்க வேண்டும்.

கோவை பொதுக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? விஜயகாந்த் விளக்கம்
சிதம்பரம், ஏப். 7: தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் கோவை பொதுக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.  கோவையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவர் ஒரே மேடையில் ஜெயலலிதாவுடன் பிரசாரம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவருக்கு பதிலாக அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இந்நிலையில் வியாழக்கிழமை சிதம்பரத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த், இதற்கு பதிலளித்து பேசியதாவது:  நான் தொகுதிதோறும் மக்களை சந்திக்கச் செல்வதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளருக்கு 2 நாளுக்கு முன்பே தகவல் சொல்லி விட்டேன். இதை வெளியில் முன்கூட்டியே சொல்ல வேண்டாம். தேவையில்லாமல் ஏதாவது செய்திகளை வெளியிடுவார்கள் என்று சொல்லிவிட்டேன்.  கோவை கூட்டத்துக்கு நான் செல்லவில்லை என்றவுடன் புறக்கணிப்பு, புறக்கணிப்பு என கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகளில் "பிளாஷ் நியூஸ்' போட்டார்கள். லயாலோ கல்லூரி கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை தொலைக்காட்சியில் செய்தியாக போடவில்லையே ஏன்?. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அதே லயோலா கல்லூரி கருத்து கணிப்பை திருப்பி, திருப்பி பல முறை போட்டீர்களே?  கேபிள் நிறுவனம் அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்ததால் பயத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று அஞ்சி இதுபோன்று செய்திகளை வெளியிடுகிறார்கள்.  இப்போது அந்த குடும்ப தொலைக்காட்சிகளில், நான் உட்கார்ந்தால் குற்றம். நின்றால் குற்றம். சாய்ந்தால் குற்றம் என வெளியிடுகின்றனர்.  2009-10 தேர்தலில் தனித்து நான் போட்டியிட்ட போது ஒருவார்த்தை கூட என்னை பற்றி தவறாக செய்தி போடவில்லையே ஏன்? தற்போது தவறாக செய்தி போடுகிறார்கள் என்றால் இதற்கு உள்அர்த்தம் உள்ளதாக குற்றம்சாட்டினார் விஜயகாந்த்.
 Source Dinamani.com
 
முன்னதாக தினமலரில் வெளிவந்த பெட்டிச் செய்தியும் முதன்மைச் செய்தியும் 
திட்டமிட்டு புறக்கணிப்பு? கூட்டணி கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள், ஒரே மேடையில் தோன்றும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் துவங்கியது முதலே, இக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி தோழமைக் கட்சியினர் மத்தியில் எழுந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க., தலைமை, தங்களது கட்சிகளின் சார்பில், 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது முதலே, விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Source Dinamalar.com

Friday, 8 April 2011

கோவையில் ஜெயலலிதா கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளாததில் தினமலருக்கு மட்டும் அதீத வருத்தம் ஏன்?

கோவையில் புதன் கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் கலந்துகொள்ள வில்லை. அவர் வரவில்லை என்பதை பல பத்திரிகைகள் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், தினமலர் மட்டும் இந்த விஷயத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து முதற்பக்க முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. திட்டமிட்ட புறக்கணிப்பு என்று கட்டம் கட்டி ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட அரசியல் இயக்கங்கள் மீது மட்டும் அதீத அக்கறை காட்டுவதும், அதீத முக்கியத்துவம் கொடுத்து முதன்மைப் படுத்துவதும், பிற செய்திகளுக்கு உரிய முக்கியத்துவத்தை ம்றுப்பதற்குச் சமமாகும்.
தினமலர் ஐ ஜே கே தலைவர் பச்சமுத்துவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்துவருகின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் போதுமான சான்றுகள் கிடைத்து வருகின்ற்ன. இது அப்ப்ட்டமான நெறிமீறல் என்றே கருதப் படவேண்டும்.

Sunday, 3 April 2011

தேர்தலில் தவிர்க்க முடியாத தேவைகள் : தி இந்துவில் வி ஆர் கிருஷ்ணையரின் கட்டுரை

ஓய்வு பெற்ற நீதிய்ரசர் வி ஆர் கிருஷ்ணைய்ரின் கட்டுரை ஒன்று இன்றைய இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. கட்டுரையும், உரிய சுட்டியும் கீழே தரப்பட்டுள்ளன. 
தேர்தல் அடிப்படையிலான ஜனநாயக்த்தை மிகவும் வலுவானதாக்கவும், பொருத்தமுடையதாக மாற்றவும், இது போன்ற அறிவூட்டல் கட்டுரைகள் அவசியமான தேவையாகும். இந்திய அரசியல் சட்டத்தின் 43வது ஷரத்தின் படி, குடிகாரரான ஒருவரைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த முடியாது.  குடிப்பழ்க்கமுடைய ஒருவர் மக்கள்
பிரதிநிதியாக முடியாது என்பதை, இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது என்பது பலருக்கும் தெரியாத செய்தியாக இருக்க்க் கூடும். இந்த விதியை ஒருவேளை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கடைப் பிடித்தால், எத்த்னை பேர் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள் என்பது யோசிக்க வேண்டிய ஒரு விஷ்யமாகும். இது போன்ற பல உருப்படியான தேர்தல் தகவல்களைக் கொண்டுள்ளது இந்தக் கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் எப்பொழுதுமே தமிழ் இதழ்களில் இடம்பெறுவதில்லை என்பது பெரிய குறைதான். 

Electoral imperatives in the Indian context

The imperatives of India's socialist democratic republic should be integral to every step of an election process.
For instance, under Article 47 of the Constitution, alcoholism is a disqualification for candidature in elections at every level from the panchayat onwards. Investigation into any complaints of alcoholism on the part of a candidate made by anyone in the voters' list may be undertaken by the Election Commission. Such a complaint could be made before the Returning Officer concerned.
The payment of dowry, directly or vicariously, could be another basis for disqualification. Any candidate who is in any manner guilty of such a practice will be held ineligible to contest.
The need for stern enforcement of all the relevant conditions is writ into election law. These are binding on the Election Commission, and other authorities including the police. Violations should be made cognisable offences.
The broad principle that makes Indian democracy a reality is similar to what existed in the case of the erstwhile Soviet Union in Article 135: “The elections of deputies shall be universal: all citizens of the USSR who have reached the age of 18, irrespective of race and nationality, religion, educational qualifications, residence, social origin, property status or past activity, shall have the right to take part in the elections of deputies and to be elected, with the exception of insane persons and persons condemned by court with deprivation of electoral rights.”
Every candidate to every House is bound by the Constitution. So all parties and candidates have to include in their manifesto a commitment that they would strive to create and strengthen a socialist society, a secular creed with freedom for all religions, and a truly democratic party. If these values are not made integral to the candidate's social philosophy, the party or candidate shall not be allowed by the Election Commission to contest elections.
The Constitution governs elections and its provisions are paramount. Two supreme values need special mention. The first is compassion. The other is negative, but equally paramount: the abolition of corruption. If proved corrupt, however high your office and whatever your alibi or excuse, you forfeit your office.
These are most important items in every candidate's manifesto, without which his or her candidature will not be valid. A majestic value-based manifesto is excellent but not enough. It must be an effective undertaking, should be functional and transform society into a nobler one. Every candidate must remember that he or she is not a member of his little constituency but a plenary surrogate of the culturally glorious geography called Bharat. To see that the pledges made in manifestos are effectively implemented, there should be election invigilators who have the powers to stop violations, and even to disqualify a candidate. No High Court has jurisdiction at that stage, as the era of Chief Election Commissioner T.N. Seshan demonstrated.
Money power, bribery, oblique tactics and so on should be arrested. The invigilators must be above party considerations, persons of integrity. And they should have policing powers. A clean election is the finest foundation of a great democratic republic.
There should also be a right of recall of elected representatives. For this, Parliament must amend the Representation of the People Act. Parliament could provide for a right of recall on specific conditions where the legislator has violated any of the set conditions, provided that the Election Commission shall enquire, on a complaint being duly made, about any legislator. The process should ensure natural justice and fiat justicia.
In the erstwhile Soviet Union there was the following provision effectively enforced under Article 142: “Every deputy shall be obliged to report to the electors on his work and on the work of the soviet of working people's deputies and may at any time be recalled by decision of a majority of the lectors in the manner prescribed by law.”
Every Indian who is 18 years and above is entitled to vote. The ballot is more than a right on paper. There should be a polling station even in prisons and hospitals which lodge about 500 persons. Their right to vote can be exercised only in a polling station with a polling officer and staff. Or else, the inmates lose their right of franchise. There is no reason to deprive a person of his right to vote: that will only diminish democracy.
Violence or pressure should never be used in any election process, and such actions must be made offences. The little man must be free to cast his vote on the little piece of paper or make a mark, according to his conscience. A party's candidates must win with the small man's independent franchise. That is a free election cast in a national spirit. Or else democracy becomes a travesty. That little man's freedom to freely cast his franchise was put in Winston Churchill's words: “The little man, walking into a little booth, with a little pencil, making a little cross on a little bit of paper — no amount of rhetoric or voluminous discussion can possibly diminish the overwhelming importance of the point.”
The basic structure of our polity is the free vote of the lowliest voter. The rich man shall not rule the constituency. These are the constitutional imperatives of Elections 2011.
The franchise every citizen enjoys is pregnant with the power to actualise a grand, magnificent change. Every election where votes are cast, there is this unwritten power implied in the ballot. The campaign for elections must be geared to make every citizen aware over his power, which cannot be bartered away by lucre lavishly spent during polling time. Thus the election process which is in the offing is a creative national operation where a New Brave Bharat will be the vision and the mission of the operation called elections.
Socialist India of the days the Constitution was enacted was the salvation of the have-not humanity of India. Social and economic justice is a pledge given in the Preamble, and nothing shall be done by the Executive, the Legislature and Judiciary to deter, delay or undo this sublime objective. Every high official in these three instrumentalities must function to accelerate and not decelerate. This solemn process has continued as India made its transition during the last 60 years from imperialist British India to Swaraj socialist secular India.
Omnipresent corruption
We have much to regret, what with omnipresent corruption, absent compassion, communalist negation of integrity, fraternity and unity, and surrender of resources to foreign domination, especially the Yankee syndrome. The new struggle is to fight back this tendency, all in the name of development that contradicts the tryst with destiny declared by Jawaharlal Nehru in 1947. 

 

Saturday, 2 April 2011

தொடரும் தினமலரின் அத்துமீறிய குறும்பும் பொறுப்பற்ற போக்கும்

ஏப்ரல் முதல் நாளன்று வெளியான தினமலரின் இணைப்பான தேர்தல் களம் 2011 சப்ளிமென்ட் இதழின் முதல் பக்கத்தில்,  சமரசம்! அதிமுக கூட்டணியில் மீண்டும் வைகோ. போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு என்ற தலைப்பிட்ட ஒரு பக்க செய்தி வெளியாகியிருந்தது. உண்மை என்ன ? என்ற குறிப்புடன் 7ஆம் பக்கத்தில் வெளியான குறிப்பில், ஏப்ரல் முதல் நாளன்று இவ்வாறு யாராவது உங்களை ஏமாற்றலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இக்கட்டான நிலையிலிருக்கும் மதிமுகவை மையமாக வைத்து இப்படி ஒரு விளையாட்டான செய்தி வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. என்றாலும், இது குறித்த குறிப்பு அதே இதழில் இடம் பெற்று விட்டதால் பிரச்னையில்லை.

ஆனால், இந்த செய்தியைப் படித்த வைகோ, உடன்டியாக இது குறித்த தனது கண்டனத்தை ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கை, மாலை மலர் இதழில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தினமலரில் இந்தச் செய்தி யைக் காண முடியவில்லை.
எந்த முதல் பக்க்த்தில் குறும்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்களோ அதே முதல் பக்கத்தில், இந்த மறுப்பை வெளிய்ட்டால்தானே தினமலரின் தவறை மன்னிக்க முடியும். ஆனால், மறுப்பு அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் குப்பையில் போட்டால், இது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடல்லவா? சுதந்திரம் என்பதைத் தவறாகப் பயன்படுத்துவதாகாதா?





source Dinamalar.com 



















தினம்லரில் இடம்பெறாத அறிக்கை  
தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மாலைமலரில் வெளிவந்துள்ள செய்தி 


ஜெயலலிதாவை நான் சந்தித்ததாக கூறுவதா? வைகோ கண்டனம்


சென்னை, ஏப்.1-
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.
 
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது.   அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
 
எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.
 
கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.
 
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Wednesday, 30 March 2011

விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பொதுச் சின்னம் கிடையாது : தினமலரில் செய்தி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பொதுச் சின்னம் அளிப்பது தொடர்பான விஷய்த்தில் தினமலர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு  ஒருபக்கம் சார்பான தகவல்களை வெளியிட்டு வருவதை இங்கே விவாதித்து வருகின்றோம்.
30 03 2011 நாளிட்ட தினமலர் இதழில் தமிழகத் தேர்தல் தலைமை அதிகாரியை மேற்கோள் காட்டி கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, விசிக தெரிவித்த எந்தத்த்கவலையும் வெளியிடாத தினமலர், தான் தெரிவிக்க விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட்டுவருகின்றது. இது அறமற்ற செயலாகவே கருதப்படும்.

















Source : Dinamalar.com

Tuesday, 29 March 2011

விசிக குறித்து அவதூறு வெளியிட்ட தினமலர் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பு

கடந்த வார இறுதியில், தினமலர் இதழின் முதல் பக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  தேர்தல் சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயல்வதாக ஒரு குற்றச் சாட்டு வெளியாகியிருந்தது.  அதே நாளில் தினமணியில் தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி தினமணியில் வெளியான ஒரு செய்தியில், சின்னங்கள்
எப்படி  ஒதுக்கப் படுகின்றன என்று ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது.
இந்த இரு செய்திகளின் அடிப்படையில் எங்களின் ஆய்வுக்குழு, தினமல்ர் தவறாக செய்தி வெளியிட்டிருப்பதாகக் கண்டறிந்தது.
இதற்கிடையில், தொல் திருமாவளவன், தாங்கள் பொதுச் சின்னம் பெறுவதற்காக யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தவறான செய்தியை வெளியிட்ட தினமலர், இது குறித்து வருத்தமும் தெரிவிக்கவில்லை. திருமாவளவனின் விளக்கத்தை வெளியிட்டு தனது வாசகர்களுக்கு உண்மை நிலவரத்தைப் புரியவைக்கவும் இல்லை.
தினமலர் தனது வாசகர்களை இவ்வளவு மோசமாக நடத்துவது ஏன் என்பது விளங்கவில்லை.
தெரிந்தே தவறு செய்வது, தவற்றை ஒப்புக் கொள்ள ம்றுப்பது, விளக்கம் அளிக்கப்  படும்போதுஅதனை வெளியிட மறுபப்து ஆகிய் செயல்கள், எவ்வகையில் ஏறகத்தக்கது என்பது எங்களுக்கெல்லாம் விளங்கவேயில்லை. இதை இதழியல் அடாவடித்தனம் என்று வகைப் படுத்த இயலுமா? இந்தியாவில் இது போன்ற மனப்பான்மையுடன் இயங்கும் இத்ழ்கள் வேறு உள்ளனவா? சர்வதேச ரீதியில் இது போன்றுபத்திரிகைகள் இயங்குகின்றனவா என்பவற்றைப் பேராசிரியர்கள் விளக்க வேண்டும்.
 தினத்தந்தியில் வெளியாகியுள்ள செய்தி 

பொதுச்சின்னத்தை பெறுவதற்காக
`தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' : தொல்.திருமாவளவன் பேட்டி


திட்டக்குடி, மார்ச்.28-

`விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச்சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை நாங்கள் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று திட்டக்குடியில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வந்திருந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏமாற்ற வில்லை

`விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாகும். முன்னுரிமை அடிப்படையில் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை பெறவே தொகுதிகளை குறிப்பிட்டு மனு செய்திருந்தோம்.

இதில் நாங்கள் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்பு அதன் விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம்.

வெற்றி வாய்ப்பு

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் கூட்டணி தர்மத்தை எப்போதும் மாற மாட்டோம். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் எங்களுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

முன்பு நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தவிர வேறல்ல. இதனை தொகுதி மக்கள் தவறாக கருதவில்லை. என்னையடுத்து இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் (செல்வப்பெருந்தகை) கட்சி மாறினாரே தவிர எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.

2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இடைபட்ட சில மாதங்கள்தவிர நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளோம். எனவே எங்களை அணி மாறுபவர்கள் என குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்களை பழிசுமத்துவது பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை.

திட்டக்குடி வேட்பாளர்

திட்டக்குடியில் தொகுதி வேட்பாளர் சிந்தனைச்செல்வன் 1986-ம் ஆண்டிலேயே இந்துவாக மீண்டும் மதம் மாறிவிட்டார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள்தான். இதனால் சிந்தனைச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தவறான தகவல் எதையும் கூறவில்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

தேர்தல் ஆணையமானது மனித உரிமைகளை மீறும் வகையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு முறையற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஆணையம் மதிப்பதில்லை. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும்.

மேற்கண்டவாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Source : Dailythanthi.com






விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தினத்தந்தியிலும், தினகரனிலும் செய்தி இல்லை

எல்லா தரப்பு செய்திகளுக்கும் தினத்தந்தி இடமளிக்கின்றது என்பது போன்ற தோற்றம் நிலவுகின்றது. ஆனால், அப்படியான தோற்றம் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு செய்தியாக, விஜய் மக்கள் இயக்கம், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்தியைக் குறிப்பிடலாம். தினமணி இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவப் படி, முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் இச்செய்தியில் பெரிய குறும்புத்தனம் எதனையும் வெளிப்படுத்தாமலேயே செய்தி வெளியிட்டுள்ளது. தினகரனிலும், தினத்தந்தியிலும் இந்தச் செய்திக்கு இடம் தரப்படவில்லை.
ஆளும் கட்சிக்குப் பிடிக்காத செய்திகளைப் பெருமளவில் தவிர்ப்பது என்ற நிலைப்பாடு காரணமாக இருக்கலாம்.  ஆங்கிலப் பத்திரிகைகளில் தி இந்துவும், டெக்கான் கிரானிக்கிளும் இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவம் தந்து வெளியிட்டுள்ளன. நியூ இந்தியன் எக்ஸ்பிரசிலும்,  டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் இந்தச் செய்தியைக் காண இயலவில்லை. 



தினமலரில் வெளிவந்த செய்தி












தினமணி வெளியிட்ட செய்தி

அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு
திருச்சி, மார்ச் 27: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்றார் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன்.  இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:  விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். இந்த இயக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் ரசிகர்கள் முனைப்போடு இறங்கி வேலை செய்ய உள்ளனர்.  நாட்டில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். தமிழ்நாட்டுக்கு இந்த மாற்றம் அவசியம் தேவை என்று உணர்ந்தோம்.  இதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற உணர்வையும், முனைப்பையும் தெரியப்படுத்தினேன்.  தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பாதிப்புக்காக, சுயநலத்தோடு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  நாட்டில் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. ஒரு காலத்தில் போஃபர்ஸ் ஊழலை மிகப்பெரிய ஊழல் என்பார்கள். இன்றைக்கு லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் வளர்ச்சிடைந்துள்ளது.  இந்தியாவின், தமிழகத்தின் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிமுகவுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.  அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.  என்னுடைய இயக்கத்தில் வெளிவந்துள்ள "சட்டப்படி குற்றம்' படத்தில் நாட்டின் அவலங்களை, அசிங்கத்தை தோலுரித்துக் காட்டியுள்ளேன். இந்தப் படத்தை பார்க்கும் மக்களுக்கு மனம் மாற்றம் ஏற்படும்.  இந்தப் படம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக வரக்கூடாது என்பதற்காக பலரும் பெரும் முயற்சி எடுத்தார்கள். படத்தை அனுமதிக்கக் கூடாது என்று சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இருப்பினும், இந்தப் படத்தை திரையரங்குகளில் திரையிட்டுள்ளோம் என்றார் அவர்.
source : Dinamani.com


தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி 

Actor Vijay's Makkal Iyakkam to support AIADMK

Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam, a people's movement launched by actor Vijay, has decided to support the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) led front in the Assembly elections.
S.A. Chandrasekar, noted film director and father of actor Vijay, called on AIADMK General Secretary Jayalalithaa at Sangam Hotel here on Sunday noon and informed her about the decision.
Later Mr. Chandrasekar told presspersons that the Iyakkam favoured a political change in the State for its overall development and for the wellbeing of all sections of the society. The Iyakkam is of the firm view that political change is the need of the hour, taking into consideration the happenings in various fronts.
Enormity of violence, price hike and rampant corruption prevailing in the administration were the three reasons that forced the Iyakkam to seek a change of government. “We will highlight all these issues during the campaign,” he said.
The Iyakkam will extend its total support for ushering in such a political change, to enable the AIADMK to capture power and form the next Government under Jayalalithaa.
Responding to a query, Mr. Chandrasekar said the decision to support AIADMK in the elections was not a prelude to the Iyakkam turning into a political movement. “We are not a political outfit. We are not against anybody. We only want a political change in the State now in the interest of the whole society.”
Mr. Chandrasekar said he will soon commence his campaign.
When asked whether Vijay will also campaign for the AIADMK front, he replied that it was for the actor to decide.

Source : The Hindu website 

டெக்கன் கிரானிக்கிள் இந்தச் செய்திக்கு முதற்பக்க லீட் ஸ்டோரி முன்னுரிமையை அளித்து வெளியிட்டுள்ளது.

Vijay joins Jaya star ranks, tie-up to fly

 

Actor Vijay is not known as ‘Ilaya Thalapathy’ (young general) for nothing as he leads a motley group — of school-going boys to the college students — who go crazy at the very sight of the star.
His gravity-defying gyrations are copied and his punch dialogues are repeated with gusto by these youngsters who have been brought under a flag and an association called the Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam.
This young star is now descending into the world of politics with the backing of this young brigade. After maintaining a prolonged silence over giving support to the AIADMK, Vijay finally got his message across to AIADMK general secretary J. Jayalalithaa on Sunday.
His father, producer-director S.A. Chandra-sekar, who has orchestrated every move of his life, called on Ms Jayalalithaa to convey the decision of the Iyakkam to support her party in the April 13 poll. Mr Chandrasekar, closeted with Ms Jayalalithaa for about 20 minutes at Sang-am Hotel in Tiruchy, said the Iyakkam favoured poli-tical change in the state to ensure that it develops equitably.
Ms Jayalalithaa, meanwhile, has decided to embark on a whirlwind campaign. She will fly by helicopter from constituency to constituency to campaign for her party, hoping that Vijay will add to the star power that she and ally DMDK chief Vijayakanth bring to her alliance.

Source : Deccan chronicle website 

Sunday, 27 March 2011

குஷ்பூவுக்கு இடமுண்டு சீமானுக்கு இடமில்லை

குறிப்பிட்ட ஒரு நடிகரின் அரசியல் பார்வை மீது தனக்கு உடன்பாடில்லையென்றால், அந்த நடிகர் அல்லது சினிமா இயக்குநர் சொல்லும் கருத்து எதுவானாலும் அதைத் தமது செய்தித்தாளில் இடம்பெறச் செய்வதில்லை என்பது தமிழ் நாளிதழ்கள் வகுத்துக் கொண்டிருக்கும் நியதி. இதற்கு எந்த நாளிதழும் விதிவிலக்கல்ல.
நடிகை குஷ்பூ 2 தினங்களுக்கு முன்பு மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தினமலரில், குஷ்பூ ஜெய்லலிதா குறித்து தெரிவித்த சில விமர்சனங்கள் கத்தரிக்கப் பட்டுள்ளன.

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசைத் தோற்கடிப்பதே தனது லட்சியம் என்று நாம் தமிழர் கட்சித் த்லைவர் சீமான் தெரிவித்த கருத்துகள், தினமணி தவிர எந்த தமிழ் நாளிதழிலும் காணப் படவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், நடிகர் மன்சூரலிகான் போன்றவர்களது பிரச்சாரங்களைத் தமது நாளிதழ்களில் வெளியிடும் நாளிதழ்கள் சீமானின் கருத்துக்கு இடம் தரமறுக்கின்றன.

தினமலரில் வெளிவந்த செய்தி 










Source : Dinamalar.com 

தினத்தந்தியில் வெளிவந்த செய்தி

ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப்போவதில்லை
"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்''
மதுரையில் நடிகை குஷ்பு பிரசாரம்

மதுரை, மார்ச்26-

"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்; ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை'' என்று, நடிகை குஷ்பு கூறினார்.

மதுரையில் பிரசாரம் தொடங்கினார்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் மதுரையில் நேற்று பிரசாரம் தொடங்கினார்.

நேற்று காலையில் அவர், மதுரை மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தளபதிக்கு ஆதரவாக, ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சோலையழகுபுரம், ஆண்டாள்புரம், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

மாலையில் கிழக்கு சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் பி.மூர்த்திக்கு ஆதரவாக, சொக்கலிங்கநகர், பை-பாஸ், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, மேலமாசிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம், நரிமேடு, பீபிகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சூர்யாநகர், புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது:-

நெற்றிக்கண்

மதுரையில் தான் நான் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். ஏனென்றால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்கள் நீங்கள். உங்களைப் போல தைரியமானவர்கள் யாரும் இல்லை. அதுவும் அமைச்சர் மு.க.அழகிரியின் தைரியத்திற்கு ஈடு இணையில்லை. இங்கு வந்து பேசுவதால் எனக்கும் தைரியம் அதிகமாக வந்துவிட்டது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வெற்றி பெறுவார்.

ஏனென்றால் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர்.

கோடநாட்டில் ஓய்வு

ஜெயலலிதா ஆட்சியில் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்கவில்லை. இது உங்களுக்கே நன்றாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லும் பாதையை அடைத்து விட்டார்.

ஆகையால் தொழிலாளர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவிட்டதால் அந்தபாதையை அவர் திறந்து விட்டுள்ளார்.

பள்ளியில் மாணவன் தேர்வு எழுதும் போது காப்பி அடித்தால் அந்த மாணவனை தண்டிப்பார்கள், அதேபோல் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

ஜெயலலிதா வைத்துள்ளது கூட்டணி அல்ல சீட்டணிதான். கலைஞரின் கூட்டணி தான் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை.

தூக்கி எறியப்பட்ட வைகோ

கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் கூட்டணி வைத்திருந்த ஒருவரை (வைகோ) தூக்கி எறிந்து விட்டார். அதேபோல தான் மக்களாகிய உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார்.

கலைஞர் அனைவருக்கும் வீடு வேண்டும் என்பதற்காக காங்கிரீட் வீடு கட்டித் தருகிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிளாட்பாரத்தில் தான் படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

குஷ்பு புசுபுசுவென இருக்கிறார் என்று நீங்கள் அனைவரும் நினைக்கின்றீர்கள், அதேபோல் உங்கள் குழந்தைகளும் புசுபுசுவென இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தை தருகிறார். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகவும் அறிவித்துள்ளார். எனவே கலைஞர் ஆட்சி மலர உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

Source : Daily Thanthi

 


தினமணியில் வெளிவந்த செய்தி
63 தொகுதிகளிலும் காங்கிரûஸ தோற்கடிப்போம்: சீமான்
சென்னை, மார்ச் 25: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.  இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நாங்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.  தமிழர் தேசிய இனத்தோடு உணர்வு, உயிர், உடைமை என அனைத்திற்கும் எதிராகவும், இலங்கை அரசுக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.  பூலித்தேவன் பிறந்த திசையன்விளையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்தை தொடக்க உள்ளேன். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாங்கள் செய்யும் பிரசாரம் காங்கிரûஸ மட்டும் இல்லாமல், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சி நிற்கும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள அ.தி.மு.க, தே.மு.தி.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வோம்.  அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வைகோ எடுத்த முடிவு குறித்து நான் கருத்து கூற முடியாது. அவர் நல்ல அரசியல் அனுபவம் மிக்கவர், எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். தமிழர் நலனை குறிக்கோளாகக் கொண்ட கட்சிகள் தி.மு.க. - காங்கிரஸ் அணியில் இருக்கின்றன என்பதற்காக நாங்கள் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யமாட்டோம். அவர்கள் உள்ளே இருந்தும், நாங்கள் வெளியே இருந்தும் காங்கிரஸýக்கு நெருக்கடி ஏற்படுத்துவோம்.  இலவச திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றாது. இலவச திட்டங்களால் தமிழம் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. அப்படி இருக்கும்போது இப்போது மீண்டும் இலவச கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது ஏன்? என்றார் சீமான்.


Source : Dinamani

அரசியல் விவாதங்களைப் பதிவு செய்வதில் தினதந்திக்கு முதலிடம், தினமணிக்கு இரண்டாமிடம்

பொதுத்தேர்தலின் போது தங்கு தடையில்லாத அரசியல் விவாதங்களுக்கு வழிவகையேறபடுத்தும் வகையில்,
தொழில்முறையாக செய்திகளை வெளியிடுவது எந்தெந்தப் பத்திரிகைகள் என்று ஆராய்ந்தோம். வேட்புமனுத் தாக்கல் முடிந்து, பிரச்சாரங்கள் தொடங்கி மூன்று நாட்களான நிலையில் இந்த ஆய்வு பொருத்தமானதாக இருக்கும்.

திமுக தலைவர் தனது சாத்னைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்டு, ஆறாவது முறையாகவும் முதல்வராக வாய்ப்பளிக்கக் கோரி பிரச்சாரம் செய்து வருகின்றார்.  அ இ அதிமுக தலைவி ஜெயலலிதா, திமுக அரசின் ப்லவேறு குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதுடன், தான் ஆட்சிக்கு வந்தால் என்னெவெல்லாம் செய்வேன் என்பதையும் பட்டியலிட்டு வருகின்றார்.

தேமுதிக நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த், திமுக அரசை விமர்சித்தும், பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக தலைவரை விமர்சித்தும் பிரச்சாரங்கள் செய்துவருகின்றனர். இவர்கள் தவிர, திருமாவளவன், மு க ஸ்டாலின், கம்யூஸ்டு கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் செய்துவருகின்ற்னர்.
நாம் தமிழர் இயக்கத் தலைவர், சீமான், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிப்பதே தனது நோக்கம் என்று  பிரச்சாரம் செய்து வருகின்றார். சினிமா நட்சத்திரங்களில் குஷ்பூ 2 தினங்களாக, திமுக கூட்டணியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்துவருகின்றார்.

இந்தத் தலைவர்களது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் பேட்டிகளையும் வெளியிடுவதில், நேர்மையாகவும், பக்கஞ்சாராமலும்  இயங்குவது எந்தெந்தப் பத்திரிகைகள் எனக் கண்டறிவது நமது ஆர்வம்.

தினத்தந்தி, எல்லா தரப்பு செய்திகளையும் உள்ளடக்கிட முய்லவ்து போன்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு செய்திவாரியாக ஆராயும் போது தான், ஒவ்வொரு பத்திரிகையின் அரசியலும் புரிந்து கொள்ள முடிவதாக உள்ளது.  தினமணி, பக்கங்களின் எண்ணிக்கை காரணமாகவோ, அல்லது பிற காரணத்தாலோ, தினத்தந்தி அளவு பன்முகத்தன்மைக்கு இடம் தரமுடிவதில்லை.
தினகரன், திமுக சார்பு நிலைப்பாட்டிலேயே, குறிப்பாக, திமுக தலைவரது  குடும்பம் சார்பான நிலைப்பாட்டிலேயே செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
தினமலர், அதுவே ஒரு அரசியல் இயக்கம்போல, மிகுந்த விருப்பு வெறுப்புகளுடன், செய்திகளைத் தெரிவு செய்வதிலும், முன்னுரிமைப் படுத்துவதிலும்,  மிகுந்த பக்கச் சார்புடனே இயங்கிவருகின்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் கதாநாயகி என்று வர்ணிக்க, கடந்த தேர்தலில் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையை கதாநாயகன் என்றும் வர்ணிக்க, தினமலர், திடீரென வில்லன் என்று தானாகவே ஒரு சொல்லை இந்தக் கதையாடலில் அடையாளப் படுத்த முயல்கின்றது.

27 03 2011 அன்று வெளியான் தினமலர் இதழின் முதல் ப்க்கமொன்றில், மின்வெட்டை வில்லன் என்று வர்ணித்து  விவசாயிகள் மின்வெட்டால் கோபமுடன் இருப்பதாகவும், தேர்தலில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் முதன்மைச் செய்தியை எழுதியுள்ளது.




\


















முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படும் என்று அதிமுக தலைவர் ஜெயல்லிதா அறிவித்த செய்தியும், அதையடுத்து, திமுக தலைவர் "ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா ஏன் அதைச் செய்ய வில்லை" என்று கேட்டு திமுக தலைவர் மு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையும் முழுமையாகப் படிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு
நாளிதழாகத்தான் புரட்ட வேண்டும்.
மு கருணாநிதியின் அறிக்கையை தினத்தந்தியும், தினகரனும் மட்டுமே விரிவாக வெளியிட்டிருந்தன.  பிற எந்த இதழும், இந்த அறிக்கையைமுழுமையாகப் புரிந்து கொள்ளும் படி வெளியிடவில்லை.
தினத்தந்தியும் தினமலரும் இந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன என்பது அந்தந்த நாளிதழ்களின் இணையதளத்தில் உள்ளவாறு கீழே தரப்பட்டுள்ளது. :
 
தினமலரில் வெளிவந்த செய்தி





















தினத்தந்தியில் வெளிவந்த செய்தி

ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை?  கருணாநிதி கேள்வி
சென்னை, மார்ச்.27-  ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை? என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம் வருமாறு:-

இடஒதுக்கீடு உயர்த்தி

கேள்வி:-அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

பதில்:-யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமியப் பெருமக்களை ஜெயலலிதாவினால் ஏமாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உடன்பாடு, ஒற்றுமை என்பது அண்ணாவும் காயிதேமில்லத்தும் இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற உடன்பாடு. ஏன், இந்தத் தேர்தலிலே கூட இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் முதலில் 3 இடங்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 63 இடங்கள் வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், தி.மு.க.விற்கு அத்தனை இடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களான ஈ.ஏ.அகமதுவும், காதர்மொய்தீனும் தி.மு.க. கேட்டுக் கொள்ளாத நிலையிலேயே, பா.ம.க. எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்ததைப் போலவே தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களில் ஓர் இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லீம்லீக் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தது. அதைக்கூட ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு 3 இடங்களை தி.மு.க. முதலில் அளித்துவிட்டு, அதிலே ஓர் இடத்தைப் பறித்துக் கொண்டதாக அவதூறு செய்தார்கள். ஆனால் நானே அண்ணா அறிவாலயத்திற்கு காதர் மொய்தீனையும், தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் தனியாக இயங்கி வந்த திருப்பூர் அல்தாப்பையும் அழைத்து இருவருடனும் பேசி, இரண்டு இயக்கங்களையும் ஒன்றாக இணைத்து வைத்ததோடு - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ஓர் இடத்தைச் சேர்த்து 3 இடங்களாகவே உயர்த்திக் கொடுத்தோம். இதையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினர் நன்றாகவே உணர்வார்கள்.

தேர்தலுக்காக சொல்பவர்கள்

தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே பத்தாண்டு காலம் இருந்தாரே, அப்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை? தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது தானே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. அதனையும் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கையை இந்திய ïனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் வைத்ததையொட்டி - தற்போது தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவிகிதம் அளித்தது தி.மு.க. ஆட்சிதான்.

இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்'' என்று எழுதப்பட்டு, படிக்கப்பட்டு அது ஏடுகளிலும் வெளி வந்துள்ளது. எனவே தேர்தலுக்காக - வாக்குக்காக சொல்வது யார், உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

ஜெயலலிதாவின் பேட்டி

இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஞாபகப்படுத்த வேண்டுமேயானால் - கரசேவை நேரத்தில் அதனை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ``பெரும்பான்மையினரும் அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை நமது முஸ்லீம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப்பிரதேச இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று பேசி அப்போதே ஏடுகளில் எல்லாம் அந்தப் பேச்சு வெளியிடப்பட்டது.

23-7-2004 தேதிய "தினத்தந்தி'' நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது. அந்தப் பேட்டி இதோ:-

கேள்வி:- இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?

ஜெயலலிதா:- இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!

இயலாத ஒன்று

கேள்வி:- சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயலலிதா:- முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.

ராமர் கோவில்

இதற்குப் பிறகு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் ``அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?'' என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்? "ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?'' என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.

இப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா? இன்னும் ஜெயலலிதாவிற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பினால் தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டன என்பதையும் விரிவாக எழுதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

அரசியல் இயக்கங்கள் மீது துவேஷம் காட்டும் தினமலர்

ஒரு செய்தியைத் தனது பார்வைக்கு ஏற்ப எப்படியெல்லாம் வளைத்துத் திரிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதைக்  குறிப்பிடலாம்:
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக, சிறிய கட்சிகள் முயன்று கொண்டே இருப்பதும், அதற்காக தேர்தல் ஆணையம் பல விதிகளை விதித்திருப்பதும் நாம் அறிந்தது தான். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இது குறித்து விரிவாக நியதிகளை வகுத்துள்ளது. இந்தச் சட்ட்த்தில் சில திருத்தங்களும் அறிமுகப் படுத்தப் பட்டுமுள்ளன.
2011 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனக்கென தனிச் சின்னம் கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று தினமலரிலும், தினமணியிலும் இது தொடர்பான இரு செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கீகரிக்கப் படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள்தாக தினமணியின் செய்தி தெரிவிக்கின்றது. சின்னம் கோரி அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து மார்ச் 30க்குள் முடிவெடுக்கப் படும் என்றும் தினமணியின் செய்தி சொல்கின்றது (தினமணியின் செய்தி கீழே தரபட்டுள்ளது).

ஆனால், தினமலர் செய்தி, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல் தந்திருப்பது போலவும், அந்தத் திருட்டுத் தனத்தைத் தான் கண்டுபிடித்து அம்பலப் படுத்திவிட்டதாகவும் முதற் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது (தினமலரில் வெளிவந்த செய்தி கீழே தரப்பட்டுள்ளது).

தினமலரின் செய்தியின்படி,   ஒரு வேளை விசிக வின் செயலில் தவ்றிருந்தாலும், அது குறித்து விசிகவின் அமைப்பாளர்களில் ஒருவரிடம் கருத்துக் கேட்டு, தனது குற்றச் சாட்டை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்க
வேண்டாமா?  ஒருவர் மீது குற்றஞ்சாட்டும் போது, குறிப்பாக, அபாண்டமாக அவதூறு செய்யும் வகையில் செய்திகளை எழுதும்போது,  குற்றஞ்சாட்டப் படுபவரது தரப்பு நியாயத்தையும் கேட்டு அதையும் பதிவு செய்திருக்க வேண்டாமா?

எந்த நாளில் இந்தக் கோரிக்கையினை விசிக, தேர்தல் ஆணைய்ம் முன்வைத்தது. தொடக்கத்திலிருந்தே திமுக அணியில் கூடுதல் இடங்களைக் கேட்டுக் கொண்டிருந்த விசிக, தான் திட்டமிட்டபடியே, தேர்தல் ஆணையத்திடம் மனுவைக் கொடுத்து சின்னம் கோரியிருக்கலாம். திமுக தலைமை, 10 சீட்டுகளே ஒதுக்க முடியும் என்றதும் அதை விசிக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, தேர்தல் ஆணைய்ம் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய விதிகளின்படி, தகுதி பெறாத கட்சிகளுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்காமல், அவற்றைச் சுயேட்சையாகக் கருதி, ஒவ்வொரு தொகுதி வாரியாக சின்னங்களை ஒதுக்க்லாம். அப்போதும் மெழுகுவர்த்தி சின்னத்திற்கு பிற சுயேட்சைகள் போட்டியிடாத வரை, விசிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமே மெழுகுவர்த்தி சின்னம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதுதான் செய்தியாக வெளியிடப் பட்டிருக்க வேண்டும். தேர்தலைப் பார்வையாளராக இருந்து கவனிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே இந்தப் பிரச்னை எளிதாகப் புரியும் போது, தேர்தலில் புகுநது, தனது விருப்பு வெறுப்புகளின் படி, அரசியல் கட்சிகள் மீது துவேஷத்தைக் காட்டுவது எவ்வகையில் அறம்?
தினமலரில் வெளிவந்த செய்தி :




  
தினமணியில் வெளிவந்த செய்தி :



அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
  
சென்னை, மார்ச் 26: அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:  தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகள் ஒன்பது உள்ளன. மேலும், ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்து விட்டு அதேசமயம், அங்கீகாரம் பெறாத கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.  உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் அளிக்கப்படுகின்றன. பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் ஒரு கட்சி போட்டியிட வேண்டும்.  இதனால், அந்தக் கட்சிக்கு மோதிரம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மட்டை, பட்டம் ஆகிய சின்னங்களை கோரி இருந்தது.  விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. கூடை, தேங்காய், முரசு ஆகிய சின்னங்களை அந்தக் கட்சி கோரியிருந்தது. புதுச்சேரியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கூஜா சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன், மோதிரம், மின்கம்பம் ஆகியவற்றை அந்தக் கட்சி கோரியிருந்தது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் அறிவித்து இருந்தது. ஆனால், தி.மு.க. அணியில் அந்தக் கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.  அந்தக் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன் நட்சத்திரம், மணி ஆகியவற்றை கோரியிருந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்துக்கு மின்கம்பம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.  மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு மேஜை விளக்கு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மேஜை விளக்கு, மேஜை ஆகியவற்றை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்த விவரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெற்று அனைத்து விவரங்களையும் தொகுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிட வேண்டும்.  வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தினத்துக்கு முன்பாக இந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  23 தொகுதிகளுக்கு குறைவாகப் போட்டியிடும் கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தால் அது குறித்து மார்ச் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Source :Dinamani




Saturday, 26 March 2011

மந்தமாகத் தொடங்கியுள்ள பிரச்சாரம்: தலைவர்கள் பேச்சுகளுக்கு பத்திரிகைகள் முன்னுரிமை

18 நாட்கள் நடைபெறவுள்ள பிரச்சாரத்தில் எதை முன்வைத்து விவாதங்களை முன்னெடுத்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வாக்குகளைச் சேகரிக்கப் போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு ஆர்வம் தரும் ஆய்வாக உள்ளது.
முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
தேர்தல் ஆணைய்ம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று ஜெயலலிதா அளித்துள்ள பேட்டி,  தினமணியில் விரிவாக வெளியாகியுள்ளது. தவிர, கருணாநிதி, விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோரது பிரச்சார உரைகளும், தினம்ணியில் பதிவாகியுள்ளன.
தினமலர் திருமாவளவன் தவிர, பிற முக்கிய த்லைவர்களது பேச்சுகளை இடம்பெறச் செய்துள்ளது. தொகுதி மாறியத் ஏன் என்ற தலைப்பில், ஜெயலலிதாவின் பேட்டியை தினகரன் வெளியிட்டுள்ளது. அவர் பிரசசார உரையை தினகரனில் காண இயலவில்லை.
தினத்தந்தி ஏறத்தாழ எல்லா தலைவர்களது பேச்சுகளையும், பேட்டிகளையும் பதிவு செய்துள்ளது. வைகோ, ஒரு திருமணவிழாவில் தனது அரசியல் பயணம் தொடரும் என்று பேசிய் பேச்சை தினத்தந்தி மட்டும் பதிவு செய்துள்ளது.
தி இந்து நாளிதழ், தலைவர்கள் மனு தாக்கல் செய்திகளை விரிவாக வெளியிட்டிருந்தாலும், ஜெயலலிதாவின் பிரச்சார பேச்சை மட்டுமே வெளியிட்டுள்ளது. பிற தலைவர்களது பேச்சுகளை தி இந்து வில் காண இயலவில்லை.
அடிமைத் தளையிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் தனது தொகுதியில் பேசிய்தாக இந்தப் பதிவில் கூறப் பட்டுள்ளது. அந்த செய்தி கீழே தரப் பட்டுள்ளது.


Elections to liberate people from ‘slavery'

The ensuing Assembly elections are not just about ushering in a change of government but also liberating the people of Tamil Nadu from “slavery,” said AIADMK general secretary Jayalalithaa here on Thursday.

In a blistering attack on hitting the campaign trail from Srirangam, her constituency, she said: “Over the last five years you have been facing various problems. Paramount among them is price rise. But, the DMK government, despite being part of the Union government, has not taken any steps to check price rise or solve any of your problems.”
The government had only contributed to the price rise. Chief Minister M. Karunanidhi supported the move to allow oil companies to fix the price of petrol and diesel. Over the last one year, the price of petrol was increased nine times by Rs.15 a litre.
Ms. Jayalalithaa, who started her campaign at Veeraswaram, criss-crossed thorough fares of the island town to address wayside meetings. At Raghavendra Arch, in front of the Rajagopuram of the Srirangam Ranganathaswamy Temple, she spoke from the roof top of her campaign vehicle, using a hydraulically lifted seat.
Making a comparison of the period during the pre-DMK government and the current price of various essential commodities and construction material, Ms. Jayalalithaa said the price of rice in the open market had gone up to Rs.42 a kg from Rs.15. The price of sugar went up to Rs.35 from Rs.13 a kg. Prices of thuvar dhal, tamarind and garlic had also risen.
The price of a truckload of sand had gone up to Rs.13,000 from Rs.2,500, while the price of a bag of cement had increased from Rs.150 to Rs.280. Brick was being sold at Rs.6 a piece. “You can build a house only in your dreams,” she told the residents, many of whom had turned out on the streets to catch a glimpse of her.
Under the DMK regime, Tamil Nadu faced a decline on all fronts. Industrial and agriculture production went down. The economy became sick and unemployment rose. Power cuts, rather than power generation, had increased. If voted to power, the AIADMK would put an end to power cuts. There was no protection for the lives and property of the people under the DMK government. “Corruption is rampant and pervades all government schemes. The 2G scam has compromised national security.” The Chief Minister, she charged, was not able to get the final verdict of the Cauvery Tribunal gazetted. Nor could he get the Supreme Court order in the Mullaperiyar dispute implemented.
Ms. Jayalalithaa promised permanent solution to problems faced by people residing around Ranganathaswamy Temple in selling their land. She also promised permanent protection against flooding in the town and improvements to infrastructure and basic amenities in the temple town.

Thursday, 24 March 2011

விஜயகார்ந்தைத் துதி பாடும் தினமலர் அறம் தவறுவது சரியோ? தகுமோ ?

விஜயகாந்த் கட்சியையும் , எஸ் ஆர் எம் பல்கலைக் கழக முதலாளி பச்சமுத்துவின் கட்சியான ஐ ஜே கே கட்சியையும்  தினமலர்  துதி பாடுவதற்கு எல்லைகள் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கே வந்து விடலாம். ஐ ஜே கே கட்சி என்ற ஒரு கட்சி இருக்கின்றதா என்ற அளவில் பிற பத்திரிகைகள், அந்தக் கட்சிக்கு இடம் ஒதுக்க, தினமலர் மட்டும் ஐ ஜே கே கட்சிக்கு, அதீத முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றது. இதில் ஏதேனும் வணிக நலன்கள் மறைந்து கிடக்கின்றதா என்பது இனிவரும் காலங்களில் ஆராயப் பட வேண்டியது.
அதுபோலவே, விஜய்காந்தின் தேமுதிக கட்சிக்கு தினமலர் கொடுக்கும் முக்கியத்துவமும், புக்ழந்து பாடுவதும், துதி பாடுவதும், அனத்து இதழியல் தர்மங்களையும் மீறிய ஒரு செயலாகவே தென்படுகின்றது.
24 03 2011 அன்று தினமலரில் வெளியான தேமுதிக தொடர்பான துதிபாடலைக் கவனித்தால், இந்த விமர்சனத்தின் நியாயம் புரியும்.  ஆங்கிலத்தில்  PAID NEWS  என்கிறார்களே. அந்த வகையில் இதனை ஏன் வகைப் படுத்தக் கூடாது என்பதை எங்களின் பேராசிரியர்கள் தான் விளக்க வேண்டும். PAID NEWS என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் ஒன்றைத் தமிழ் கூறும் நல்லுலகம் தெரிவித்தால், இதழியல் மாணவர்கள் பெரிதும் நன்றியுடையோராவோம்.

_________________
தினமலரில் வெளியான  விஜயகாந்த் குறித்த  PAID NEWS


உழைத்தவர்களுக்கு கவுரவம்: சீட் வழங்க விஜயகாந்த் பயன்படுத்திய "பார்முலா"
 
சொந்த பணத்தில் பல கோடி ரூபாயை செலவழித்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த மாவட்ட செயலர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் போட்டியிட தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் அதிகளவு சீட் வழங்கியுள்ளார். ரசிகர் மன்றத்தில் இருந்தே தன்னுடன் இருப்பவர்களுக்கும் சீட் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு. தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 21ம்தேதி, நான்கு கட்டமாக அறிவித்தார். சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து விஜயகாந்த் அறிவித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தே.மு.தி.க., துவங்கி ஐந்து ஆண்டுகளாகிறது. குறுகிய காலத்திற்குள் முக்கிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் கட்சித் தலைவர் விஜயகாந்தின் சிறப்பான செயல்பாடே. தற்போது, வேட்பாளர் தேர்வையும் விஜயகாந்த் சிறப்பாக செய்து முடித்துள்ளார். கட்சி வளர்ச்சிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த பணத்தை செலவழித்த மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் மதிப்பளித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சி.எச்.சேகர் (கும்மிடிபூண்டி), மேற்கு மாவட்ட செயலர் அருண் சுப்பிரமணியம், மதுரை தெற்கு மாவட்ட செயலர் ராஜா (திருப்பரங்குன்றம்), காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் முருகேசன் (செங்கல்பட்டு), திருச்சி தெற்கு மாவட்ட செயலர் செந்தில்குமார்(திருவெறும்பூர்), நாகை வடக்கு மாவட்ட செயலர் பால அருட்செல்வம் (மயிலாடுதுறை), வேலூர் மத்திய மாவட்ட செயலர் வேலு (அணைக்கட்டு), கடலூர் வடக்கு மாவட்ட செயலர் சிவக்கொழுந்து (பண்ருட்டி) ஆகியோருக்கு போட்டியிட சீட்கள் வழங்கியுள்ளார்.

மேலும், கோவை தெற்கு மாவட்ட செயலர் தினகரன் (சூலூர்), பெரம்பலூர் மாவட்ட செயலர் துரை காமராஜ் (குன்னம்), சேலம் மேற்கு மாவட்ட செயலர் பார்த்திபன்(மேட்டூர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலர் மோகன்ராஜ் (சேலம் வடக்கு), விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் (திருக்கோவிலூர்), திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியம்(ஆத்தூர்), நீலகிரி மாவட்ட செயலர் செல்வராஜ் (கூடலூர்), நாமக்கல் மாவட்ட செயலர் சம்பத்குமார்(திருச்செங்கோடு) ஆகியோரையும் வேட்பாளராக்கியுள்ளார். இவ்வாறு, மொத்தம் 16 மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த் சீட் வழங்கியுள்ளார். இதேபோல, ரசிகர் மன்றத்தில் இருந்தே தன்னுடன் இருப்பவர்களுக்கும் சீட் வழங்கி விஜயகாந்த் கவுரவப்படுத்தியுள்ளார். இந்த பட்டியலில் கட்சி பொருளாளர் சுந்தர்ராஜன்(மத்திய மதுரை), தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி (விருகம்பாக்கம்), கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), இளைஞர் அணி துணை செயலர் நல்லதம்பி(எழும்பூர்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களோடு, தனது நீண்டகால நண்பரான நடிகர் அருண் பாண்டியனுக்கும்(பேராவூரணி)போட்டியிட சீட் வழங்கியுள்ளார். தே.மு.தி.க., சார்பில் போட்டியிட சீட் கேட்ட ஒரே நடிகர் இவர் என்பதாலும், சீட் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அரசியலை தவிர்க்கும் வகையில் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் (மாநில இளைஞர் அணி செயலர்) ஆகியோருக்கும் சீட் வழங்குவதை விஜயகாந்த் தவிர்த்துள்ளார். இப்படி, பலதரப்பட்டவர்களுக்கு மதிப்பளித்தும், கவுரவம் அளித்தும் விஜயகாந்த் சீட்களை வழங்கி, கட்சியினரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தே.மு.தி.க., சார்பில் போட்டியிட சீட் கேட்டு கோயம்பேடு கட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில், "பெட்டி' உடன் முகாமிட்டிருந்த பலரின் முகங்களில், இதன் மூலம் விஜயகாந்த் கரியை பூசியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்
 

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை 4 நாளிதழ்களும் 4 விதமாக வெளியிடக் காரணம் என்ன ?

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல அறிக்கையை 23 03 2011 அன்று அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் வெளியிட்டார். அது குறித்த செய்தி நமது ஆய்வுக்குரிய 4 தமிழ் நாளிதழ்களிலுமே வெளியாகியுள்ளன.தினகரனில் தவிர, மற்ற இதழ்களில் திருமாவளவன் தனது கட்சித் தலைவர்களுடன் தேர்தல் அறிக்கையை வெளியிடும் படமும் வெளியிடப் பட்டுள்ளன.
ஆனால், தேர்தல் அறிக்கையில் உள்ள உள்ளடக்கத்தை வெளியிடுவதில் தினமலர், தினகரன், தினத்தந்தி ஆகிய் இதழ்கள் மிக மோசமாகவே நடந்து கொண்டுள்ளன. தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில்
திருமாவளவனிடம் கேடகப் பட்ட கேள்வி பதில்களை விரிவாக வெளியிட்டு விட்டு, தேர்தல் அறிக்கையில் உள்ள செய்திகளை மேலோட்டமாக வெளியிட்டுள்ளன. தினமணியில் தேர்தல் அறிக்கை விரிவாக இடம்பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கையின் எந்தெந்தப் பகுதிகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன என்று தேட முற்பட்டோம். அதற்குள்,  தி இந்துவில் இந்தச் செய்தி குறித்த தலைப்பிலேயே விடை கிடைத்தது.
தமிழ்த் தேசியம் குறிதது வி சி க வின் தேர்தல் அறிக்கை அதிகம் பேசுவதாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியம் பேசுவது, தமிழ் நாளிதழ்களுக்குப் பிடிக்காத விஷயமாக இருக்க வேண்டும். அதனால்தான், தினமணி தவிர்த்த பிற நாளிதழ்கள் தேர்தல் அறிக்கையின் பெரும்பகுதியினை இருட்டடிப்பு செய்து விட்டன.

இந்தச் செய்தியை விரிவாக அலசுவதற்கு வசதியாக், ஒவ்வொரு நாளிதழும் இந்தச் செய்தியை எவ்வாறு
கையாண்டுள்ள  விதம் அந்தந்த நாளிதழின் இணைய தளத்தில் உள்ள படி,தரப்பட்டுள்ளன.

 
தினகரனில் வெளியான செய்தி  
திருமாவளவன் கோரிக்கை 
நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு 
வைகோ பாடம் புகட்ட வேண்டும் 
 
சென்னை : ‘நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ 
என்று வைகோவுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைவர் திருமாவளவன், 
சென்னையில் நேற்று வெளியிட்ட பிறகு கூறியதாவது: 
மாநில உரிமைகளுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக போராடும். 
மதுவிலக்கு கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வலியுறுத்துவோம். 
தாய் மொழி கல்வி, நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக கொண்டுவர 
பாடுபடுவோம். தலித் மக்களின் நலன், மகளிர் நலன், இஸ்லாமியர் நலன், 
மீனவர் நலன்களுக்காக சட்டப்பேரவையில் போராடுவோம். 
கச்சத்தீவை மீட்க போராடுவோம். கடந்த 6 ஆண்டுகளாக அரசியலில் 
உடன் இருந்த மதிமுகவை அரசியல் நாகரீகமே இல்லாமல், 
பிடரியை பிடித்து வெளியே தள்ளியிருக்கின்றனர். 
தேர்தலை புறக்கணிப்பதை தவிர்த்து விட்டு, தேர்தலில் வைகோ 
பங்கேற்க வேண்டும். வைகோவை சந்திப்பதற்கு கால அவகாசம் இல்லை. 
அதனால், பத்திரிகைகள் மூலமாக அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 
நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் தனித்து போட்டி?
‘‘புதுச்சேரியில் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். 
புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். 
உடன்பாடு ஏற்பட்டால் அதன்படி போட்டியிடுவோம். 
இல்லையென்றால் 12 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்’’ 
என்று திருமாவளவன் தெரிவித்தார்
Source : Dinakaran.com  


மாநிலங்களில் தன்னாட்சி, தனிக்கொடி : வி.சி., தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை : "மாநிலங்களுக்கு தன்னாட்சி மற்றும் தனிக்கொடி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தனியாக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். இதில், மத்திய அரசிடம் உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை, மாநில அரசின் வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். மத்திய வரி மற்றும் கூடுதல் வரிகளில் மாநிலங்களுக்கு, 75 சதவீதம் வழங்க வேண்டும்.
சுதந்திரம் மற்றும் குடியரசு நாளில், தேசியக் கொடியுடன் மாநில கொடியையும் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏற்ற வழி செய்ய வேண்டும். கனிம வளங்களின் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் ஏஜன்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.

இப்போதுள்ள ஏஜன்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சென்னையை உருவாக்கிய தலித் மக்களை, அங்கிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றக் கூடாது. ஏழை மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை டாஸ்மாக் மதுபான கடைகள் பாதிக்கின்றன. பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
source : Dinamalar.com



____________
தினமணியில் வெளியான செய்தி
தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கு: விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

சென்னை, மார்ச் 23: தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்:  தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் தலித்துகள், மீனவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதுக்கடைகளையும் மூட பாடுபடுவோம்.  இந்தக் கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் மாற்று வேலைகளை வழங்கவும், மதுவிலக்குக் கொள்கையை இந்திய அளவில் நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துவோம்.  இலங்கையில் ஆயுதப் போராட்ட வடிவம் இடைக்காலமாக அழிக்கப்பட்டாலும், விடுதலைப் போராட்டத்துக்கான தேவைகளும், காரணங்களும் அழிக்க முடியாதவையாக உள்ளன.  அங்கு நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்கவும், தமிழீழத்தை மீட்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.  உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில் மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட 38 நாடுகளை உறுப்பு நாடுகளாகவும், 14 நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாகவும் ஐ.நா.சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்துவோம்.  அகதிகள்: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை கொத்தடிமைகளை விட வேதனைக்குரியதாக உள்ளது. இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறையும், அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும்.  இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.  விடுதலை செய்ய வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையைப் பெற்றுள்ள நளினி, தூக்குத் தண்டனையைப் பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.  கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட இன்னபிற வழக்குகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்.  கச்சத் தீவு மீட்பு: கடல் எல்லைப் பாதுகாப்பு எனும் பெயரில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் தொடர்கதையாகி வருகின்றன. தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம்.  மாநிலங்களுக்கு தன்னாட்சி: வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவும், மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு 75 சதவீதம் வழங்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.  மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, கோலார் ஆகிய தமிழர்கள் வாழும் பகுதிகள் கேரள, கர்நாடக மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பகுதிகளில் உள்ள மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இடங்களை தமிழக எல்லைக்குள் கொண்டுவர குரல் கொடுப்போம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன.

 


___________
தினத்தந்தி வெளியிட்ட திருமாவின் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றம்:
`அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம்'
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தொல்.திருமாவளவன் பேட்டி


சென்னை, மார்ச் 24-

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

தேர்தல் அறிக்கை

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின், தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

வாக்குறுதிகள்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்று 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.

நாங்கள் மக்களை சந்திக்கும்போது, சில வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளோம். அந்த வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.

அதில், இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

இனப்படுகொலை

இலங்கை தீவில் நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா. பேரவைக்கு அழுத்தம் கொடுக்க பாடுபடுவோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 லட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ 2 லட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கும் பணிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க போராடுவோம்.

கச்சத்தீவு மீட்பு

தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும், இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.

மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை - எளிய மக்களின் வாழ்வு வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, முழு மது விலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

நம்பிக்கை துரோகம்

இதுபோன்ற கொள்கைகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வோம். மீண்டும் நல்ல பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முதல்-அமைச்சர் கருணாநிதியை 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்துவோம்.

எதிரணி கூட்டணியில் 5 ஆண்டுகாலம் இருந்த ம.தி.மு.க.வை பிடரியை பிடித்து வெளியே தள்ளுவது போன்று வெளியேற்றியுள்ளனர். இது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் ஆகும். கூடா நட்பின் விளைவு இது. ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்பதை ம.தி.மு.க. கைவிட்டு, தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை

முதல்முறையாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவும் அளிக்கிறது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றுவதற்கு டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் பணம்தான் பெரும் உதவியாக இருக்கும். அப்படி இருக்கும்போது, மதுவிலக்கு வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது கூட்டணியில் முரண்பாடு ஏற்படுத்தாதா?.

பதில்:- தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், அவர்களின் எல்லா கொள்கையிலும் உடன்பாடு இருக்காது. அகில இந்திய அளவில் மது விலக்கு வேண்டும். இதை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

தேர்தலுக்கான உறவு

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க.வும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்கிறீர்கள். தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட கூறுகின்றீர்களா? அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றீர்களா?.

பதில்:- நம்பிக்கை துரோகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் போட்டியிட வேண்டும்.

கேள்வி:- ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தொடர்ந்து காங்கிரஸ் அரசை எதிர்த்து வருகிறீர்கள். ஆனால், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இருக்கும் அணியில் இடம்பெற்றுள்ளீர்கள். இது பிரசாரத்தின்போது பாதிப்பை ஏற்படுத்தாதா?.

பதில்:- இது தேர்தலுக்கான உறவு. ஈழத் தமிழர் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். நீர்த்து போக மாட்டோம்.

புதுச்சேரியில் தனித்து போட்டி

கேள்வி:- தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?.

பதில்:- முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதில், நாங்களும் கலந்துகொள்வோம். அதன்பின்னர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வோம். புதுச்சேரியில் 12 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். இந்த நிலையில், புதுச்சேரி முதல்-மந்திரி வைத்திலிங்கம் தொடர்பு கொண்டு, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரிடம் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வன்னியரசு, பாவலன், ஆர்வலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, தொல்.திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Source : Dailythanthi.com



Strong ingredients of Tamil nationalism in VCK manifesto
Special Correspondent CHENNAI: Supporting the case for an independent ‘Tamil Eelam', seeking United Nations recognition for its formation, working for the rehabilitation of Tamil refugees and demanding retrieval of Tamil areas now with other States, the election manifesto of Viduthalai Chiruthaigal Katchi (VCK), released on Wednesday, is dominated by strong ingredients of Tamil nationalism.
Asked whether it would be possible to get back Tamil areas after the reorganisation of States, VCK president Thol Thirumavalavan said, “We have included the issue to further sharpen the debate on Tamil nationalism.” “The government should conduct a referendum in Tamil-speaking areas such as Devikulam, Peermedu, Munnar and Kolar Gold mines to ascertain the opinion of the people to include these areas with Tamil Nadu,” he said. The party also demanded total prohibition in the State, saying the retail liquor shops run by the State government had deprived the livelihood of Dalits, fishermen and other downtrodden while plunging the youth into drinking habit. “We need not have agreement with our alliance partner on all issues,” he said when asked how he could expect the DMK government to close down liquor shops which were generating revenue for its welfare schemes.
The VCK also wanted government control over agriculture lands to prevent fertile lands being taken over for real estate purposes. “The government should set up a land commission for the purpose because real estate business has killed the hope that agriculture can be revived in the State. If allowed to continue, it will lead to a situation of food scarcity,” VCK said.
Protection of native species of cows, goats and buffaloes, a special scheme for cultivation of palm trees, introduction of drip irrigation and a pension scheme for all farmers who have crossed 60 years are the issues found a place in the manifesto.
Besides demanding 33 per reservation for women, free education from kindergarten to higher education, the party wanted a separate ministry for women at the Centre and in Tamil Nadu.
Mr. Thirumavalavan also came down on AIADMK general secretary Jayalalithaa for “elbowing out” the MDMK from the alliance. “It is a betrayal of trust,” he said.
Asked whether he would ask Mr. Vaiko to join the DMK alliance, he said, “It is for the DMK leadership to decide.”

Source : The Hindu website