Showing posts with label தினகரன். Show all posts
Showing posts with label தினகரன். Show all posts

Sunday, 27 March 2011

குஷ்பூவுக்கு இடமுண்டு சீமானுக்கு இடமில்லை

குறிப்பிட்ட ஒரு நடிகரின் அரசியல் பார்வை மீது தனக்கு உடன்பாடில்லையென்றால், அந்த நடிகர் அல்லது சினிமா இயக்குநர் சொல்லும் கருத்து எதுவானாலும் அதைத் தமது செய்தித்தாளில் இடம்பெறச் செய்வதில்லை என்பது தமிழ் நாளிதழ்கள் வகுத்துக் கொண்டிருக்கும் நியதி. இதற்கு எந்த நாளிதழும் விதிவிலக்கல்ல.
நடிகை குஷ்பூ 2 தினங்களுக்கு முன்பு மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தினமலரில், குஷ்பூ ஜெய்லலிதா குறித்து தெரிவித்த சில விமர்சனங்கள் கத்தரிக்கப் பட்டுள்ளன.

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசைத் தோற்கடிப்பதே தனது லட்சியம் என்று நாம் தமிழர் கட்சித் த்லைவர் சீமான் தெரிவித்த கருத்துகள், தினமணி தவிர எந்த தமிழ் நாளிதழிலும் காணப் படவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், நடிகர் மன்சூரலிகான் போன்றவர்களது பிரச்சாரங்களைத் தமது நாளிதழ்களில் வெளியிடும் நாளிதழ்கள் சீமானின் கருத்துக்கு இடம் தரமறுக்கின்றன.

தினமலரில் வெளிவந்த செய்தி 










Source : Dinamalar.com 

தினத்தந்தியில் வெளிவந்த செய்தி

ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப்போவதில்லை
"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்''
மதுரையில் நடிகை குஷ்பு பிரசாரம்

மதுரை, மார்ச்26-

"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்; ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை'' என்று, நடிகை குஷ்பு கூறினார்.

மதுரையில் பிரசாரம் தொடங்கினார்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் மதுரையில் நேற்று பிரசாரம் தொடங்கினார்.

நேற்று காலையில் அவர், மதுரை மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தளபதிக்கு ஆதரவாக, ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சோலையழகுபுரம், ஆண்டாள்புரம், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

மாலையில் கிழக்கு சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் பி.மூர்த்திக்கு ஆதரவாக, சொக்கலிங்கநகர், பை-பாஸ், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, மேலமாசிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம், நரிமேடு, பீபிகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சூர்யாநகர், புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது:-

நெற்றிக்கண்

மதுரையில் தான் நான் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். ஏனென்றால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்கள் நீங்கள். உங்களைப் போல தைரியமானவர்கள் யாரும் இல்லை. அதுவும் அமைச்சர் மு.க.அழகிரியின் தைரியத்திற்கு ஈடு இணையில்லை. இங்கு வந்து பேசுவதால் எனக்கும் தைரியம் அதிகமாக வந்துவிட்டது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வெற்றி பெறுவார்.

ஏனென்றால் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர்.

கோடநாட்டில் ஓய்வு

ஜெயலலிதா ஆட்சியில் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்கவில்லை. இது உங்களுக்கே நன்றாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லும் பாதையை அடைத்து விட்டார்.

ஆகையால் தொழிலாளர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவிட்டதால் அந்தபாதையை அவர் திறந்து விட்டுள்ளார்.

பள்ளியில் மாணவன் தேர்வு எழுதும் போது காப்பி அடித்தால் அந்த மாணவனை தண்டிப்பார்கள், அதேபோல் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

ஜெயலலிதா வைத்துள்ளது கூட்டணி அல்ல சீட்டணிதான். கலைஞரின் கூட்டணி தான் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை.

தூக்கி எறியப்பட்ட வைகோ

கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் கூட்டணி வைத்திருந்த ஒருவரை (வைகோ) தூக்கி எறிந்து விட்டார். அதேபோல தான் மக்களாகிய உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார்.

கலைஞர் அனைவருக்கும் வீடு வேண்டும் என்பதற்காக காங்கிரீட் வீடு கட்டித் தருகிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிளாட்பாரத்தில் தான் படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

குஷ்பு புசுபுசுவென இருக்கிறார் என்று நீங்கள் அனைவரும் நினைக்கின்றீர்கள், அதேபோல் உங்கள் குழந்தைகளும் புசுபுசுவென இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தை தருகிறார். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகவும் அறிவித்துள்ளார். எனவே கலைஞர் ஆட்சி மலர உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

Source : Daily Thanthi

 


தினமணியில் வெளிவந்த செய்தி
63 தொகுதிகளிலும் காங்கிரûஸ தோற்கடிப்போம்: சீமான்
சென்னை, மார்ச் 25: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.  இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நாங்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.  தமிழர் தேசிய இனத்தோடு உணர்வு, உயிர், உடைமை என அனைத்திற்கும் எதிராகவும், இலங்கை அரசுக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.  பூலித்தேவன் பிறந்த திசையன்விளையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்தை தொடக்க உள்ளேன். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாங்கள் செய்யும் பிரசாரம் காங்கிரûஸ மட்டும் இல்லாமல், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சி நிற்கும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள அ.தி.மு.க, தே.மு.தி.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வோம்.  அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வைகோ எடுத்த முடிவு குறித்து நான் கருத்து கூற முடியாது. அவர் நல்ல அரசியல் அனுபவம் மிக்கவர், எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். தமிழர் நலனை குறிக்கோளாகக் கொண்ட கட்சிகள் தி.மு.க. - காங்கிரஸ் அணியில் இருக்கின்றன என்பதற்காக நாங்கள் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யமாட்டோம். அவர்கள் உள்ளே இருந்தும், நாங்கள் வெளியே இருந்தும் காங்கிரஸýக்கு நெருக்கடி ஏற்படுத்துவோம்.  இலவச திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றாது. இலவச திட்டங்களால் தமிழம் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. அப்படி இருக்கும்போது இப்போது மீண்டும் இலவச கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது ஏன்? என்றார் சீமான்.


Source : Dinamani

Saturday, 26 March 2011

மந்தமாகத் தொடங்கியுள்ள பிரச்சாரம்: தலைவர்கள் பேச்சுகளுக்கு பத்திரிகைகள் முன்னுரிமை

18 நாட்கள் நடைபெறவுள்ள பிரச்சாரத்தில் எதை முன்வைத்து விவாதங்களை முன்னெடுத்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வாக்குகளைச் சேகரிக்கப் போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு ஆர்வம் தரும் ஆய்வாக உள்ளது.
முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
தேர்தல் ஆணைய்ம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று ஜெயலலிதா அளித்துள்ள பேட்டி,  தினமணியில் விரிவாக வெளியாகியுள்ளது. தவிர, கருணாநிதி, விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோரது பிரச்சார உரைகளும், தினம்ணியில் பதிவாகியுள்ளன.
தினமலர் திருமாவளவன் தவிர, பிற முக்கிய த்லைவர்களது பேச்சுகளை இடம்பெறச் செய்துள்ளது. தொகுதி மாறியத் ஏன் என்ற தலைப்பில், ஜெயலலிதாவின் பேட்டியை தினகரன் வெளியிட்டுள்ளது. அவர் பிரசசார உரையை தினகரனில் காண இயலவில்லை.
தினத்தந்தி ஏறத்தாழ எல்லா தலைவர்களது பேச்சுகளையும், பேட்டிகளையும் பதிவு செய்துள்ளது. வைகோ, ஒரு திருமணவிழாவில் தனது அரசியல் பயணம் தொடரும் என்று பேசிய் பேச்சை தினத்தந்தி மட்டும் பதிவு செய்துள்ளது.
தி இந்து நாளிதழ், தலைவர்கள் மனு தாக்கல் செய்திகளை விரிவாக வெளியிட்டிருந்தாலும், ஜெயலலிதாவின் பிரச்சார பேச்சை மட்டுமே வெளியிட்டுள்ளது. பிற தலைவர்களது பேச்சுகளை தி இந்து வில் காண இயலவில்லை.
அடிமைத் தளையிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் தனது தொகுதியில் பேசிய்தாக இந்தப் பதிவில் கூறப் பட்டுள்ளது. அந்த செய்தி கீழே தரப் பட்டுள்ளது.


Elections to liberate people from ‘slavery'

The ensuing Assembly elections are not just about ushering in a change of government but also liberating the people of Tamil Nadu from “slavery,” said AIADMK general secretary Jayalalithaa here on Thursday.

In a blistering attack on hitting the campaign trail from Srirangam, her constituency, she said: “Over the last five years you have been facing various problems. Paramount among them is price rise. But, the DMK government, despite being part of the Union government, has not taken any steps to check price rise or solve any of your problems.”
The government had only contributed to the price rise. Chief Minister M. Karunanidhi supported the move to allow oil companies to fix the price of petrol and diesel. Over the last one year, the price of petrol was increased nine times by Rs.15 a litre.
Ms. Jayalalithaa, who started her campaign at Veeraswaram, criss-crossed thorough fares of the island town to address wayside meetings. At Raghavendra Arch, in front of the Rajagopuram of the Srirangam Ranganathaswamy Temple, she spoke from the roof top of her campaign vehicle, using a hydraulically lifted seat.
Making a comparison of the period during the pre-DMK government and the current price of various essential commodities and construction material, Ms. Jayalalithaa said the price of rice in the open market had gone up to Rs.42 a kg from Rs.15. The price of sugar went up to Rs.35 from Rs.13 a kg. Prices of thuvar dhal, tamarind and garlic had also risen.
The price of a truckload of sand had gone up to Rs.13,000 from Rs.2,500, while the price of a bag of cement had increased from Rs.150 to Rs.280. Brick was being sold at Rs.6 a piece. “You can build a house only in your dreams,” she told the residents, many of whom had turned out on the streets to catch a glimpse of her.
Under the DMK regime, Tamil Nadu faced a decline on all fronts. Industrial and agriculture production went down. The economy became sick and unemployment rose. Power cuts, rather than power generation, had increased. If voted to power, the AIADMK would put an end to power cuts. There was no protection for the lives and property of the people under the DMK government. “Corruption is rampant and pervades all government schemes. The 2G scam has compromised national security.” The Chief Minister, she charged, was not able to get the final verdict of the Cauvery Tribunal gazetted. Nor could he get the Supreme Court order in the Mullaperiyar dispute implemented.
Ms. Jayalalithaa promised permanent solution to problems faced by people residing around Ranganathaswamy Temple in selling their land. She also promised permanent protection against flooding in the town and improvements to infrastructure and basic amenities in the temple town.

Thursday, 24 March 2011

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை 4 நாளிதழ்களும் 4 விதமாக வெளியிடக் காரணம் என்ன ?

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல அறிக்கையை 23 03 2011 அன்று அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் வெளியிட்டார். அது குறித்த செய்தி நமது ஆய்வுக்குரிய 4 தமிழ் நாளிதழ்களிலுமே வெளியாகியுள்ளன.தினகரனில் தவிர, மற்ற இதழ்களில் திருமாவளவன் தனது கட்சித் தலைவர்களுடன் தேர்தல் அறிக்கையை வெளியிடும் படமும் வெளியிடப் பட்டுள்ளன.
ஆனால், தேர்தல் அறிக்கையில் உள்ள உள்ளடக்கத்தை வெளியிடுவதில் தினமலர், தினகரன், தினத்தந்தி ஆகிய் இதழ்கள் மிக மோசமாகவே நடந்து கொண்டுள்ளன. தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில்
திருமாவளவனிடம் கேடகப் பட்ட கேள்வி பதில்களை விரிவாக வெளியிட்டு விட்டு, தேர்தல் அறிக்கையில் உள்ள செய்திகளை மேலோட்டமாக வெளியிட்டுள்ளன. தினமணியில் தேர்தல் அறிக்கை விரிவாக இடம்பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கையின் எந்தெந்தப் பகுதிகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன என்று தேட முற்பட்டோம். அதற்குள்,  தி இந்துவில் இந்தச் செய்தி குறித்த தலைப்பிலேயே விடை கிடைத்தது.
தமிழ்த் தேசியம் குறிதது வி சி க வின் தேர்தல் அறிக்கை அதிகம் பேசுவதாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியம் பேசுவது, தமிழ் நாளிதழ்களுக்குப் பிடிக்காத விஷயமாக இருக்க வேண்டும். அதனால்தான், தினமணி தவிர்த்த பிற நாளிதழ்கள் தேர்தல் அறிக்கையின் பெரும்பகுதியினை இருட்டடிப்பு செய்து விட்டன.

இந்தச் செய்தியை விரிவாக அலசுவதற்கு வசதியாக், ஒவ்வொரு நாளிதழும் இந்தச் செய்தியை எவ்வாறு
கையாண்டுள்ள  விதம் அந்தந்த நாளிதழின் இணைய தளத்தில் உள்ள படி,தரப்பட்டுள்ளன.

 
தினகரனில் வெளியான செய்தி  
திருமாவளவன் கோரிக்கை 
நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு 
வைகோ பாடம் புகட்ட வேண்டும் 
 
சென்னை : ‘நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ 
என்று வைகோவுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைவர் திருமாவளவன், 
சென்னையில் நேற்று வெளியிட்ட பிறகு கூறியதாவது: 
மாநில உரிமைகளுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக போராடும். 
மதுவிலக்கு கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வலியுறுத்துவோம். 
தாய் மொழி கல்வி, நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக கொண்டுவர 
பாடுபடுவோம். தலித் மக்களின் நலன், மகளிர் நலன், இஸ்லாமியர் நலன், 
மீனவர் நலன்களுக்காக சட்டப்பேரவையில் போராடுவோம். 
கச்சத்தீவை மீட்க போராடுவோம். கடந்த 6 ஆண்டுகளாக அரசியலில் 
உடன் இருந்த மதிமுகவை அரசியல் நாகரீகமே இல்லாமல், 
பிடரியை பிடித்து வெளியே தள்ளியிருக்கின்றனர். 
தேர்தலை புறக்கணிப்பதை தவிர்த்து விட்டு, தேர்தலில் வைகோ 
பங்கேற்க வேண்டும். வைகோவை சந்திப்பதற்கு கால அவகாசம் இல்லை. 
அதனால், பத்திரிகைகள் மூலமாக அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 
நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் தனித்து போட்டி?
‘‘புதுச்சேரியில் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். 
புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். 
உடன்பாடு ஏற்பட்டால் அதன்படி போட்டியிடுவோம். 
இல்லையென்றால் 12 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்’’ 
என்று திருமாவளவன் தெரிவித்தார்
Source : Dinakaran.com  


மாநிலங்களில் தன்னாட்சி, தனிக்கொடி : வி.சி., தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை : "மாநிலங்களுக்கு தன்னாட்சி மற்றும் தனிக்கொடி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தனியாக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். இதில், மத்திய அரசிடம் உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை, மாநில அரசின் வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். மத்திய வரி மற்றும் கூடுதல் வரிகளில் மாநிலங்களுக்கு, 75 சதவீதம் வழங்க வேண்டும்.
சுதந்திரம் மற்றும் குடியரசு நாளில், தேசியக் கொடியுடன் மாநில கொடியையும் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏற்ற வழி செய்ய வேண்டும். கனிம வளங்களின் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் ஏஜன்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.

இப்போதுள்ள ஏஜன்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சென்னையை உருவாக்கிய தலித் மக்களை, அங்கிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றக் கூடாது. ஏழை மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை டாஸ்மாக் மதுபான கடைகள் பாதிக்கின்றன. பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
source : Dinamalar.com



____________
தினமணியில் வெளியான செய்தி
தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கு: விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

சென்னை, மார்ச் 23: தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்:  தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் தலித்துகள், மீனவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதுக்கடைகளையும் மூட பாடுபடுவோம்.  இந்தக் கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் மாற்று வேலைகளை வழங்கவும், மதுவிலக்குக் கொள்கையை இந்திய அளவில் நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துவோம்.  இலங்கையில் ஆயுதப் போராட்ட வடிவம் இடைக்காலமாக அழிக்கப்பட்டாலும், விடுதலைப் போராட்டத்துக்கான தேவைகளும், காரணங்களும் அழிக்க முடியாதவையாக உள்ளன.  அங்கு நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்கவும், தமிழீழத்தை மீட்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.  உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில் மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட 38 நாடுகளை உறுப்பு நாடுகளாகவும், 14 நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாகவும் ஐ.நா.சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்துவோம்.  அகதிகள்: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை கொத்தடிமைகளை விட வேதனைக்குரியதாக உள்ளது. இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறையும், அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும்.  இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.  விடுதலை செய்ய வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையைப் பெற்றுள்ள நளினி, தூக்குத் தண்டனையைப் பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.  கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட இன்னபிற வழக்குகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்.  கச்சத் தீவு மீட்பு: கடல் எல்லைப் பாதுகாப்பு எனும் பெயரில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் தொடர்கதையாகி வருகின்றன. தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம்.  மாநிலங்களுக்கு தன்னாட்சி: வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவும், மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு 75 சதவீதம் வழங்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.  மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, கோலார் ஆகிய தமிழர்கள் வாழும் பகுதிகள் கேரள, கர்நாடக மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பகுதிகளில் உள்ள மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இடங்களை தமிழக எல்லைக்குள் கொண்டுவர குரல் கொடுப்போம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன.

 


___________
தினத்தந்தி வெளியிட்ட திருமாவின் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றம்:
`அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம்'
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தொல்.திருமாவளவன் பேட்டி


சென்னை, மார்ச் 24-

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

தேர்தல் அறிக்கை

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின், தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

வாக்குறுதிகள்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்று 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.

நாங்கள் மக்களை சந்திக்கும்போது, சில வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளோம். அந்த வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.

அதில், இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

இனப்படுகொலை

இலங்கை தீவில் நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா. பேரவைக்கு அழுத்தம் கொடுக்க பாடுபடுவோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 லட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ 2 லட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கும் பணிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க போராடுவோம்.

கச்சத்தீவு மீட்பு

தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும், இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.

மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை - எளிய மக்களின் வாழ்வு வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, முழு மது விலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

நம்பிக்கை துரோகம்

இதுபோன்ற கொள்கைகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வோம். மீண்டும் நல்ல பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முதல்-அமைச்சர் கருணாநிதியை 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்துவோம்.

எதிரணி கூட்டணியில் 5 ஆண்டுகாலம் இருந்த ம.தி.மு.க.வை பிடரியை பிடித்து வெளியே தள்ளுவது போன்று வெளியேற்றியுள்ளனர். இது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் ஆகும். கூடா நட்பின் விளைவு இது. ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்பதை ம.தி.மு.க. கைவிட்டு, தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை

முதல்முறையாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவும் அளிக்கிறது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றுவதற்கு டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் பணம்தான் பெரும் உதவியாக இருக்கும். அப்படி இருக்கும்போது, மதுவிலக்கு வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது கூட்டணியில் முரண்பாடு ஏற்படுத்தாதா?.

பதில்:- தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், அவர்களின் எல்லா கொள்கையிலும் உடன்பாடு இருக்காது. அகில இந்திய அளவில் மது விலக்கு வேண்டும். இதை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

தேர்தலுக்கான உறவு

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க.வும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்கிறீர்கள். தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட கூறுகின்றீர்களா? அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றீர்களா?.

பதில்:- நம்பிக்கை துரோகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் போட்டியிட வேண்டும்.

கேள்வி:- ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தொடர்ந்து காங்கிரஸ் அரசை எதிர்த்து வருகிறீர்கள். ஆனால், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இருக்கும் அணியில் இடம்பெற்றுள்ளீர்கள். இது பிரசாரத்தின்போது பாதிப்பை ஏற்படுத்தாதா?.

பதில்:- இது தேர்தலுக்கான உறவு. ஈழத் தமிழர் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். நீர்த்து போக மாட்டோம்.

புதுச்சேரியில் தனித்து போட்டி

கேள்வி:- தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?.

பதில்:- முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதில், நாங்களும் கலந்துகொள்வோம். அதன்பின்னர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வோம். புதுச்சேரியில் 12 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். இந்த நிலையில், புதுச்சேரி முதல்-மந்திரி வைத்திலிங்கம் தொடர்பு கொண்டு, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரிடம் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வன்னியரசு, பாவலன், ஆர்வலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, தொல்.திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Source : Dailythanthi.com



Strong ingredients of Tamil nationalism in VCK manifesto
Special Correspondent CHENNAI: Supporting the case for an independent ‘Tamil Eelam', seeking United Nations recognition for its formation, working for the rehabilitation of Tamil refugees and demanding retrieval of Tamil areas now with other States, the election manifesto of Viduthalai Chiruthaigal Katchi (VCK), released on Wednesday, is dominated by strong ingredients of Tamil nationalism.
Asked whether it would be possible to get back Tamil areas after the reorganisation of States, VCK president Thol Thirumavalavan said, “We have included the issue to further sharpen the debate on Tamil nationalism.” “The government should conduct a referendum in Tamil-speaking areas such as Devikulam, Peermedu, Munnar and Kolar Gold mines to ascertain the opinion of the people to include these areas with Tamil Nadu,” he said. The party also demanded total prohibition in the State, saying the retail liquor shops run by the State government had deprived the livelihood of Dalits, fishermen and other downtrodden while plunging the youth into drinking habit. “We need not have agreement with our alliance partner on all issues,” he said when asked how he could expect the DMK government to close down liquor shops which were generating revenue for its welfare schemes.
The VCK also wanted government control over agriculture lands to prevent fertile lands being taken over for real estate purposes. “The government should set up a land commission for the purpose because real estate business has killed the hope that agriculture can be revived in the State. If allowed to continue, it will lead to a situation of food scarcity,” VCK said.
Protection of native species of cows, goats and buffaloes, a special scheme for cultivation of palm trees, introduction of drip irrigation and a pension scheme for all farmers who have crossed 60 years are the issues found a place in the manifesto.
Besides demanding 33 per reservation for women, free education from kindergarten to higher education, the party wanted a separate ministry for women at the Centre and in Tamil Nadu.
Mr. Thirumavalavan also came down on AIADMK general secretary Jayalalithaa for “elbowing out” the MDMK from the alliance. “It is a betrayal of trust,” he said.
Asked whether he would ask Mr. Vaiko to join the DMK alliance, he said, “It is for the DMK leadership to decide.”

Source : The Hindu website 

தேர்தல் ஆணையம் குறித்து மு கருணாநிதியின் விமர்சித்தால் தினமணிக்கு ஏன் கோபம் வருகின்றது ?

ஜனநாயக ரீதியாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையத்தில், சர்வாதிகாரத் தன்மை தென்படும்போது, அரசியல் சாசன ரீதியாக அளிக்கப் பட்டுள்ள அதிகாரங்களையும் மீறி இயங்கும் போது, அது குறித்து ஒரு அரசியல் கட்சித் தலைவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் அது ஏன் தினமணிக்குக் கோபமூட்ட வேண்டும்.
தேர்தல ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு க்ருணாநிதி, ஒரு விரிவான
கண்டன அறிக்கை வெளியிட, அதை தமிழ் நாளிதழ்கள் எல்லாமே விரிவாக வெளியிட்டன.  அறிக்கையை முழுமையாக வாசிக்க, தினத்தந்தியில் வெளியான முதற்பக்க முதன்மைச் செய்தியைப் படிக்கலாம். இந்தச் செய்தியின் பிரதி, இந்தச அலசலின் கீழ் தரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையையே ஒரு மனுவாக ஏற்றுக் கொண்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற்ம், இது குறித்த விசாரணையையும் தொடங்கியுள்ளது. அரசியல் சாசன விதி மீறல் எதுவும் உள்ளதா என்பதைக் கண்டறிவதே இந்த விசாரணையின்  நோக்கம்.
இந்த அறிக்கை, அதையொட்டிய உயர் நீதிமன்ற விசாரணை ஆகியவ்ற்றுக்கிடையில், இன்று (24 03 2011- வியாழன்) வெளியான தினமணியின் இன்றைய இதழில், "முதல்வர் கோபப்படுவானேன்?" என்ற தலைப்புடன் ஒரு தலைய்ங்கம் எழுதப் பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளைக் கேள்வி கேட்காமல் ஏற்கவேண்டும் என்பது போன்ற தொனி இந்தத் தலையங்கத்தில் தென்படுகின்றது.  ஜனநாயக விழுமியங்கள் சிக்கலாகும் போது, எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையில், இது போன்ற விமர்சனங்கள் எழுப்பப் படுவது வியப்பையே த்ருகின்றது. 


தலைய்ங்கம் :
"முதல்வர் கோபப்படுவானேன்?"


தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.

 தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?

 தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும், பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி வருகிறது.

 வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும், தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம் இல்லாமல் இயலாது.

 இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத் தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன தவறு?

 இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும், விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.

 நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை.

 கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர், இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.

 தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை எதுவும் இல்லை.

 அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர் மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும் விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.

 தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.

 தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப் பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.

 இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப் போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக் கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?

 வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும், கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?

Source : Dinamani.com
________________

தினத்தந்தியில் வெளியான மு கருணாநிதியின் விரிவான அறிக்கை:


தேர்தல் கமிஷனின் கெடுபிடி உத்தரவுகள்
கருணாநிதி கண்டனம்

தமிழக அரசிடம் கேட்காமல், தன்னிச்சையாக அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசிடம் கேட்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர் என்று தேர்தல் கமிஷனுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்.23-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாத இடைவெளி

14-வது சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பணிகளில் தமிழகத்திலே உள்ள அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதும் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 13-ந் தேதியன்று தமிழ்நாட்டு மக்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களை ஆள வேண்டியவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தங்களது வாக்குகளை அளிக்கவிருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவுற்ற இரண்டொரு நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு முடிவாக ஏப்ரல் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், மே 13-ம் நாள்தான் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எதற்காக இந்த இடைவெளி? ஏன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமலே அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துகிறார்கள்? எல்லாம் தேர்தல் ஆணையத்தின் முடிவு. அவர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப்பதிவு செய்யும் நாளை சற்று தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது.

ஆடு, கொலுசுகளை கூட...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று சொல்லி மற்றும் ஒரு கொடுமையும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் யாரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. இதைப்பற்றி அன்றாடம் ஏடுகள் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி வெளிவருகின்றன. ஏன், மாலை இதழ் ஒன்றில் வந்த செய்தியிலே கூட- ``தேர்தல் கமிஷன் கெடுபிடி- வாகன சோதனையில் ``காமெடி'' காட்சிகள்- ஆடு, கொலுசுகளைக்கூட விடவில்லை'' என்று கொட்டை எழுத்துகளில் செய்திகள் வந்துள்ளன.

அந்த செய்தியில் ``தேர்தல் என்றாலே தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மாறிமாறி கார்களில் வந்து பிரசாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பிரசார சத்தம் காதைப் பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள், தனியார் சுவர்களில் சின்னங்கள் தேர்தல் வாசகங்கள் எழுத முன்கூட்டியே இடம்பிடித்து விடுவார்கள். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழுதுவது, வாசகம் எழுதுவது மும்முரமாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல ஊரெங்கும் களைகட்டிவிடும்.

ஆனால் இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் போட்டுள்ளது. சுவர்களில் வரையப்பட்டிருந்த சின்னம், தலைவர்களது படங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. சென்னை நகரில் ஒரு இடத்தில் கூட சின்னத்தைப் பார்க்க முடியவில்லை. சிலைகளைக்கூட விட்டுவைக்கவில்லை.

அண்ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். சிலைகளையும் தேர்தல் முடியும் வரை மூடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிலைகளை துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கண்ணில் படவில்லை. பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களும் எங்கும் காணப்படவில்லை. தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ஆரவாரம் தம்பட்டம் எதுவும் இன்றி களை இழந்த கோவில் விழா போல் காட்சி அளிக்கிறது.

பணம் பறிமுதல்

இதற்கெல்லாம் மேலாக வாகன சோதனை; வியாபாரிகளையும், பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கிப்போட்டு விட்டது. நகைக்கடைக்காரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் அன்றாடம் வசூல் ஆகும் வியாபார பணத்தை வங்கியில் கட்ட எடுத்துச் செல்வார்கள். இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்ல முடியவில்லை. வாகன சோதனையில் சிக்கினால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். இதுபோல் நிலம் வாங்க- விற்க எடுத்துச் செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை'' என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மாலை இதழிலேயே இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்றால் இவை அனைத்தும் உண்மை. தேர்தல் ஆணையத்தின் பெயரால் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைத் தான் அந்த இதழ் தெரிவித்துள்ளது.

வியாபாரிகள் போராட்டம்

தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 29-ந் தேதியன்று கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை கொடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்துள்ள அறிக்கையில் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் 22-ந் தேதிக்குள் அவர்களை அழைத்துப்பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்றும், இல்லாவிட்டால் 24-ந் தேதி வணிகர் சங்க பிரதிநிதிகள் ஒன்று கூடி சென்னையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும், அதன் பின்னரும் இந்த பிரச்சினை நீடித்தால் 29-ந் தேதி கடையடைப்பு நடத்துவார்கள் என்றும், அதற்கும் பலன் இல்லாவிட்டால் வணிகத்துறையினர் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதிலே இன்னும் வேடிக்கை! வாகன சோதனையில் ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாக கற்பனை செய்து கொண்டு ஆடுகளையும், கோழிகளையும் ஏன் பீடிகளையும் கூட பறிமுதல் செய்துள்ளார்கள். விற்பனைக்காக எடுத்துச்சென்ற கொலுசுகளையும், நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய கிடங்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

ஐகோர்ட்டில் வழக்கு

தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையே தாக்கல் செய்துள்ளார்.

அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களைச் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர், இதுபோல பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை, திருமணத்துக்கு நகை வாங்கி வந்தாலும் அதையும் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார்கள். விசாரணை தொடருகிறது.

அதிகாரிகள் மாற்றம்

தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டினை இந்த அளவோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு போலீஸ் டி.ஜி.பி. முதல் மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பல பேரை தேர்தல் கமிஷன் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேர்மையாக பணிபுரிந்து கொண்டிருந்த பல அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதிலே உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூட விசாரிக்காமல்- தமிழக அரசிடம் கேட்காமல்கூட தன்னிச்சையாக மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதிகாரிகள் அளவிலே மட்டுமல்ல, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலே சாதாரணமாக பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளைக்கூட மாறுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

`தினத்தந்தி' செய்தி

இன்று காலையில் வெளிவந்த "தினத்தந்தி'' நாளிதழிலே கூட, ``தற்காலிக அலுவலகங்கள், பிரசார வாகனங்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கும், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்தின் கூடுதல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ``தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தினமும் புதிது புதிதாக வெளியிட்டு வரும் உத்தரவுகளினால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை எப்படி தொடங்குவது, செலவு கணக்கை எப்படி காட்டுவது என்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில் காணப்படுகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கூடுதல் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று எழுதி தேர்தல் ஆணையத்தின் கூடுதல் கெடுபிடிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவிற்கு அதிக கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்? தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம்சாட்டவில்லை. நாளேடுகள் பல அதைப்பற்றி அன்றாடம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

கங்கையே சூதகமானால்

அதைப்பற்றி தேர்தல் ஆணையம் ஏதாவது கவலைப்படுகிறதா? ``மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் - கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?'' என்று தேவர் திருமகன் அடிக்கடி கூறிய பழமொழிதான் நினைவிற்கு வருகிறது!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Source : Dailythanthi.com

Sunday, 20 March 2011

விதிமீறல்கள் குறித்து வாக்களர்களை எச்சரிக்கும் தமிழ் நாளிதழ்கள்

தேர்தல் விதிமீறல்கள் குறித்த ஆணையத்தின் எச்சரிக்கைகள், நடவடிக்கைகளைத் தமிழ் நாளிதழ்கள் தத்தமது போக்கிலே பதிவு செய்து கொண்டு வருகின்றன. இன்று 20 03 2011 ஞாயிறு அன்று வெளியான மூன்று தமிழ் நாளிதழ்களில் மூன்று வித செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஒன்றில் இடம் பெற்ற செய்தியை மற்றொரு நாளிதழில் காண இயலவில்லை.
1. தினகரனில் புதுச்சேரிப் பதிப்பில் 4ஆம் பக்கத்தில் இன்று இடம்பெற்றுள்ள ஒரு செய்தி :
தேர்தல் குற்றங்களுக்கு
எந்தெந்த பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்யலாம் ?
தேர்தல் ஆணையம் விள்க்கம்.

Source : Dinakaran.com
 
2. அரசியல்வாதியை பார்த்து
அதிகாரி நிற்க கூடாது
தேர்தல் கமிஷன் உத்தரவு
தினமலர் புதுச்சேரிப் பதிப்பு 2003 2011 ப். 5


அரசியல்வாதியை பார்த்துஅதிகாரி நிற்க கூடாது:தேர்தல் கமிஷன் உத்தரவு
திண்டுக்கல்: "அரசியல்வாதிகளிடம் எழுந்து நின்று வேட்பு மனு வாங்கக் கூடாது' என, அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரி, துணை தேர்தல் அதிகாரிகள் யாரிடமும் விருப்பு, வெறுப்பற்ற நிலையில் நடந்து கொள்ள வேண்டும். மனு தாக்கல் செய்யும் அனைவரும் ஒன்றே. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அவர்களை, "வேட்பாளராக' தான் பார்க்க வேண்டும். மனு செய்ய வருபவர் அரசியல் கட்சியின் மிக முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவரிடம் மரியாதை நிமித்தம் எனக் கூறி, தனிப்பட்ட முறையில் பேசக் கூடாது. எழுந்து நின்று வரவேற்க கூடாது. அமர்ந்த நிலையில் தான், அவரிடம் வேட்பு மனுவை பெற வேண்டும், என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source : Dinamalar.com


3. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக‌
14 உள்ளூர் கேபிள் டி வி
சேனல்களின் செயல்பாடு முடக்கம்
தர்மபுரி கலெக்டர் நடவடிக்கை


தர்மபுரி, மார்ச்.20-

தர்மபுரியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 14 உள்ளூர் கேபிள் டி.வி சேனல்களின் செயல்பாடுகளை முடக்கி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் விதிகள் மீறல்

கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை, சுங்கவரி மற்றும் ஆயத்துறை மூலமும் தக்க அனுமதி பெற்றிருப்பதுடன் முறையான சேவை வரியும் கட்ட வேண்டும். அதோடு மட்டுமின்றி ஒளிபரப்பும் திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு தக்க பட உரிமை பெற்றிருக்க வேண்டும்.

தர்மபுரியில் உள்ள 14 உள்ளூர் கேபிள் டி.வி. நிறுவனங்கள் எந்தவிதமான முறையான ஆவணங்களும் இன்றி செயல்பட்டதுடன் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதை தேர்தல் ஆணையம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கண்டுபிடித்தது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து முறைகேடாக செயல்பட்ட 14 தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்களின் செயல்பாடு முடக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள பிற பகுதிகளிலும் அனுமதியின்றி இயங்கி வரும் கேபிள் டி.வி.க்களையும் முடக்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Daily Thanthi

Sunday, 13 March 2011

காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏன் ? தமிழ்ப் பத்திரிகைகளில் விவரம் தேடினாலும் கிடைக்கவில்லை

காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை. தேக்க நிலை தொடர்கின்றது என்று சொன்ன கதையையே தமிழ்ப்  பத்திரிகைகள் சொல்லி வருகின்றன. இந்த விஷய்ம் பற்றி தினகரன் எந்தச் செய்தியும் வெளியிடுவதில்லை.
 

தினமலரில் 13 03 2011 ஞாயிறு அன்று வெளிவந்த இது தொடர்பான செய்தியைக் கவனிப்போம் :

காங்.,கிற்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் நீடிக்கிறது முட்டுக்கட்டை
சென்னை : காங்கிரஸ் கேட்கும் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., குழுவினர் சம்மதித்து விட்டாலும், சில தொகுதிகளை ஒதுக்க மறுப்பதால், காங்கிரசுக்கான தொகுதிகளை முடிவு செய்வதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. காங்கிரசில் உள்ள பல கோஷ்டி தலைவர்களும், கோட்டா சிஸ்டத்தில், தங்களுக்கு பிடித்தமான தொகுதிகளை பெற்றுத் தர வேண்டும் என, ஐவர் குழுவிடம் நிபந்தனை விதிப்பதும், பிரச்னை முடிவுக்கு வராமல் இழுத்தடிப்பதற்கு காரணம்.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த முறை போட்டியிட்ட, 48 தொகுதிகளையும் அப்படியே ஒதுக்க தி.மு.க., முன் வந்துள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், 38 பேரில், ஆறு பேர் மட்டும், தொகுதி மறு சீரமைப்பு அடிப்படையில் வேறு தொகுதிகளுக்கு மாறும் நிலைமை உருவாகியுள்ளது.

அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தொகுதிகளைப் பெறுவதில் ஐவர் குழுவினர் தீவிரம் காட்டுகின்றனர். அத்துடன், இம்முறை கூடுதலாக பெற்றுள்ள, 15 தொகுதிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும் காங்., குழுவினர் விரும்புகின்றனர். அந்த அடிப்படையிலும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

புதிதாக கிடைத்துள்ள 15 தொகுதிகளில், 10 தொகுதிகள், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் உத்தரவின்படி, இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதற்காக, 10 தொகுதிகளில் ஏழு தொகுதிகளை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தேர்வு செய்து கொடுத்துள்ளார்.

இதுதவிர மீதமுள்ள தொகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளை தங்கள் கோஷ்டிக்கு ஒதுக்க வேண்டும் என, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், பிரபு உள்ளிட்ட கோஷ்டித் தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு தேவையான தொகுதிகளை கண்டிப்பாக பெற்றுத் தர வேண்டும் என, நிபந்தனை விதித்து, அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடப்பதாலும், முடிவு காணப்படவில்லை.

தொகுதிகளை அடையாளம் காணுவதை இறுதி செய்வதற்காக நேற்று காலை, 8.40 மணி முதல், 11.15 மணி வரை, சத்தியமூர்த்திபவனில் ஐவர் குழுவினர், தி.மு.க.,வின் அழைப்புக்காக காத்திருந்தனர். அறிவாலயத்திலிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அதிருப்தி அடைந்த வாசன், சிதம்பரம் இருவரும் தனது காரில் ஏறி வீட்டிற்கு பறந்தனர். உடனே அவரது ஆதரவாளர்களும் அவர்களின் கார்களின் பின்னால் அணிவகுத்து சென்றனர்.

மாலையில் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.,வினர் அழைப்பர் என்ற நம்பிக்கையுடன் ஜெயக்குமார் மட்டும் சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். மற்ற நான்கு தலைவர்களும் வரவில்லை. அதனால், காத்திருந்து பார்த்து விட்டு, ஜெயக்குமாரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். எப்போது அழைப்பு வரும் ஐவர்குழு காத்திருப்பதால், தொகுதி அடையாளம் காணும் முடிவில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=204721





தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தி இது :

தொகுதிகள் அடையாளம் காண்பது தொடர்பான
தி.மு.க-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தாமதம் - இன்று நடைபெறும் என்று எதிர்பார்ப்பு



சென்னை, மார்ச்.13-

தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பான தி.மு.க-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெறவில்லை. இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களும், பா.ம.க.விற்கு 30 இடங்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக்கழகத்திற்கு 7 இடங்களும், இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 121 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விடுதலைச்சிறுத்தைகள், பா.ம.க., இந்திய ïனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை அடையாளம் கண்டு தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளது.

பேச்சு நடத்த வரவில்லை

தற்போது காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளிலேயே இழுபறி நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக பேச்சு நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் தி.மு.க. குழுவினருடன் பேச்சு நடத்துவதற்கு வருவோம் என்று கே.வி. தங்கபாலு கூறியிருந்தார். ஆனால் நேற்று இரவு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் பேச்சு நடத்த வரவில்லை.

குறிப்பிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது திங்கட்கிழமைக்குள் தொகுதி பங்கீட்டு பிரச்சினை சுமுகமாக முடிந்து விடும் என்று தி.மு.க. முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்.

புன்னகையுடன் வந்த கருணாநிதி

இந்த நிலையில் நேற்று அறிவாலயம் வந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, நேர்காணலுக்கு வந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணலை முதல்-அமைச்சர் கருணாநிதி நடத்தினார்.

மாலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=633039&disdate=3/13/2011






தினமணி வெளியிட்டுள்ள செய்தி இது :
தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்: திமுக- காங்கிரஸ் பேச்சில் முட்டுக்கட்டை நீடிப்பு


சென்னை, மார்ச் 12: யாருக்கு எந்தத் தொகுதி என்பதை முடிவு செய்வதில் திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

தொகுதிகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் சனிக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு வரவில்லை.

சில குறிப்பிட்ட தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதமாக இருப்பதால் திமுக கூட்டணி நடவடிக்கைகளில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல் அதிமுக கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் இரு அணிகளிலும் சமரசம் ஏற்படாததால் தேர்தல் பணிகளைத் தொடங்குவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து இரு கட்சிகளிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தொகுதி ஒதுக்குவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கான 63 தொகுதிகள் எவை என்று அடையாளம் காண்பது தொடர்பாக வியாழக்கிழமையில் இருந்து பேச்சு நடந்து வருகிறது. மூன்று நாள்கள் முடிந்தவிட்ட நிலையிலும் இதுவரை உடன்பாடு காணப்படவில்லை.

இளைஞர் காங்கிரஸýக்காக வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை கொண்ட பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தொகுதிகளில் 15 தொகுதிகளையாவது கேட்டுப் பெறவேண்டும் என்பது காங்கிரஸ் மேலிடத்து உத்தரவு என்று கூறப்படுகிறது.

இதில் பல தொகுதிகள் இப்போது திமுக மற்றும் பாமக வசம் உள்ள தொகுதிகள் என்று தெரிகிறது.

தொகுதி மறுவரையறையால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 48 தொகுதிகளில் 5 தொகுதிகளை இழந்துவிட்டது. இதனால் அந்தத் தொகுதிகளின் அருகில் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் அந்தத் தொகுதிகள் திமுகவுக்கு செல்வாக்கு உள்ள அல்லது இப்போது திமுக வசம் உள்ள தொகுதிகளாகும். இதுதான் முட்டுக்கட்டை நீடிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.

குறிப்பாக அமைச்சர் நேருவின் தொகுதியான திருச்சி, அமைச்சர் பெரிய கருப்பன் தொகுதியான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், அமைச்சர் பரிதி இளம்வழுதி தொகுதியான எழும்பூர், அமைச்சர் கே.பி.பி. சாமி தொகுதியான திருவொற்றியூர், வேளச்சேரி, திட்டக்குடி, திருத்தணி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெறுவதில் காங்கிரஸ் மிகவும் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் அண்ணா அறிவாலயத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐவர் குழுவினர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு அறிவாலயம் செல்லாமல் கலைந்து சென்றுவிட்டனர்.

காங்கிரஸ் ஐவர் குழுவினர் அறிவாலயம் வராதது திமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக் கட்சியினர் சனிக்கிழமை மாலை அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. 99.9 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது என்று கூறினார். எந்தெந்த தொகுதிகள் உங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேட்டபோது, அதை கூட்டணித் தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

உயர்நிலைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் முடிவான பிறகு முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதிமுக அணியில்: அதிமுக தரப்பில் இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

மார்க்சிஸ்ட் 18 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளும், ம.தி.மு.க. 21-க்கு குறையாத தொகுதிகளும் எதிர்பார்ப்பதாக அந்தந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக அணியில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதி 182 தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக 144 தொகுதிகளை எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீதி 38 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் இந்த மூன்று கட்சிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் வரும் 19-ம் தேதி வரை பொறுத்திருப்பதாகவும் அதுவரை அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுகவின் போக்கால் மதிமுக மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=389593&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த செய்தி இது  (13 03 2011)

 DMK-Congress talks hit roadblock on seat-sharing

T Muruganandham
Express News Service

CHENNAI: The DMK-Congress talks on identification of constituencies hit a roadblock on Saturday with Congress insisting on certain seats.

The five-member team of the Congress failed to turn up at DMK headquarters on Saturday for the fifth round of talks as promised by TNCC president KV Thangkabalu on Friday evening. And no one in the DMK spoke about the reason for this failure to turn up.

A senior Congress leader, however, told Express that the list of seats identified for the party after talks with the DMK had been sent to New Delhi for approval. “Next time we go to Anna Arivalayam, it will be to sign the agreement, and not for anything else, as 99 per cent of issues are settled.

“We asked the DMK to change only a couple of the seats that they offered to us. Apart from that everything has been finalised”, the leader who spoke on condition of anonymity said.

The leader further said as AICC general secretary Ghulam Nabi Azad was busy with the Assam election meeting, approval could not be obtained on Saturday itself. The Congress constituencies list would be announced on Sunday or Monday.

Meanwhile, the DMK has advanced interviews of aspirants by one day — from March 14 to March 13. The DMK may announce its list  within a couple of days.


http://expressbuzz.com/states/tamilnadu/dmk-congress-talks-hit-roadblock-on-seat-sharing/255841.html

Rahul list the hitch?
G Babu Jayakumar  (Express News Service)

CHENNAI: With the talks hitting a cul de sac the question being asked is, what exactly is the glitch? No one wants to name the constituencies in question, but Congress functionaries say a list given by Rahul Gandhi led the committee to dig in its heels. The DMK, however, doesn’t want to part with some of the seats on Rahul’s list as they are DMK strongholds, held by senior DMK men.

But these are also seats the Congress lost in the delimitation, and it does not want to go far from its support base. Ostensibly, Velachery and Thitakarai are the problem but no one believes that.

The real reason seems to be that the Congress and the DMK feel nervous outside their strongholds as neither sees the other as a dependable ally.


http://expressbuzz.com/states/tamilnadu/rahul-list-the-hitch/255840.html

தி இந்து நாளிதழில் இது தொடர்பான பேச்சுவார்த்தையே நடைபெறாததால் எந்த செய்தியும் வெளியிடப் படவில்லை.

மேற்கண்ட செய்திகளை வாசித்த பின்பு ஒரு விஷயம் புலப் படும்.:

 The real reason seems to be that the Congress and the DMK feel nervous outside their strongholds as neither sees the other as a dependable ally  என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பெட்டிச் செய்தியின் கடைசி வரியில் குறிப்பிட்டிருப்பது போல, திமுகவும் காங்கிரசும் தங்கள் தங்கள் வலுவான தொகுதிகளிலேயே நின்று ஜெயிக்க விரும்புகின்றன. ஒருகட்சி மற்றொரு கட்சியை நம்பி இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. எனவே, யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்று பிரித்துக் கொள்வதில் இழுபறி நீடிக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்ப் பத்திரிகை வாசகர்களுக்கு, ஆய்வுரைகளின் அடிப்படையிலோ,  கொஞ்சம் துணிவுடன் சில அப்பட்டமான உண்மை முடிவுகளையோ  தைரியமாக அறிக்கையிடும் பத்திரிகையாளர்களோ, பத்திரிகைகளோ நாளிதழ் வட்டாரத்தில் எளிதில் காண் முடிவதில்லை. அவர்கள் கழுகு, டீக்கடை பெஞ்சு, பீட்டர் மாமா, கடுகு, தராசு என்று ஏதேனும் ஒரு கிசுகிசு பகுதியின் தகவல்களுக்குள் ஒளிந்து கிடக்கும் தகவல்களுக்கிடையில் உள்ள உண்மைகளைத் தேடித்தேடி படித்துக் கிரக்கம் கொள்ள வேண்டிய நிலையே காணப் படுகின்றது.