Showing posts with label தினத்தந்தி. Show all posts
Showing posts with label தினத்தந்தி. Show all posts

Sunday, 10 April 2011

ஒரு தரப்புச் செய்தியை வெளியிடுவது தமிழ் இதழியலின் பண்போ ?

தமிழக காவல்துறையின் உளவுத் துறையில் பணியாற்றி வரும் ஒரு உயர் அதிகாரி, த்மிழக முதல்வர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க உதவி வருவ்தால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிமுக செயலர் ஜெயலலிதா தர்மபுரி / கிருஷ்ண்கிரி கூட்டங்களில்  பேசுகையில் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தி தமிழ் இதழ் எதிலும் இடம்பெறவில்லை. தி இந்து நாளிதழ் மட்டும் இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது. என்றாலும், ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த பதில் மட்டும் தினத்தந்தியில் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பு கருத்துகளையும் வெளியிடாமல், ஒரு தரப்புச் செய்திகளை வெளியிடுவது தமிழ்ப் பத்திரிகைகளின் வழக்கமாகக் காணப் படுகின்றது.
அதே வேளை, ஜெயலலிதாவின் பேச்சினை வெளியிட்டுள்ள தி இந்து நாளிதழ், இதற்குக் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களை வெளியிடுகின்றதா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தேர்தல் சமயத்தில் ஏராளமான செய்திகள் வரும்போது இவ்வாறு இரு தரப்புகளையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று வாதிட இயலாது. பத்திரிகை தர்மம் என்பது நடுநிலையுடனும், பக்கஞ்சாராமலும், நியாயமாகவும் செய்தி வெளியிடும் தர்மத்தைத் தானே குறிப்பிடுகின்றது.

தினத்தந்தியில் இடம்பெற்றுள்ள, கருணாநிதியின் கடலூர் பிரச்சாரக் கூட்ட்டதில், ஜெயலலிதாவுக்கு அவர் அளித்துள்ள விளக்கம்:

".......ஒரு பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி இருக்கிறார். ஒற்றர்கள் அதிகாரியாக பணியாற்றுகின்ற ஒருவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், அந்த உறவினரை தினமும் கருணாநிதி தன்னுடைய அந்தரங்க அதிகாரியாக வைத்துக்கொண்டு இருக்கிறார். உடனடியாக அவரை அந்த இடத்திலே இருந்து அகற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுகிறார். எனக்கு அந்தரங்க அதிகாரி, ஏற்கனவே இருந்த மூத்த அதிகாரி மாற்றப்பட்டு அவர் இந்தியாவில் எங்கேயே ஒரு மூலையில் தள்ளப்பட்டு இருக்கிறார். அதற்கு அடுத்து இன்னொரு அதிகாரி. அவர் மாற்று அதிகாரியாக வேலை பார்க்க வந்தவர், அவர் கருணாநிதியிடம் இருக்க கூடாது, அவரும், அவருக்கு தூது செல்வார், தேர்தல் யுக்திகளை சொல்லி கொடுப்பார், ஆகவே அந்த அதிகாரியையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அம்மையார் உத்தரவிட்டு இருக்கிறார்.

என்ன நடக்குமோ எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த அதிகாரியும் மாற்றப்படலாம். மாற்றப்பட்டால் அதற்காக கவலைப்படமாட்டேன். ஏனென்றால் எந்த அதிகாரியும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தவன் நான்.

நான் சொல்லுகிறேன், ஆணையிடுகிறேன், நாளைக்கே அந்த அதிகாரி மாற்றப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் உத்தரவிடுகிறார் என்றால், எவ்வளவு தைரியம், எந்த அளவுக்கு அந்த அதிகாரிகளிடத்திலே இவருக்கு ஆதிக்கம் இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுகிறேன். எதற்கெடுத்தாலும் தேர்தல் ஆணையம் சம்மதிக்க வேண்டுமே.
Source : Daily thanthi.com

தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி 

Jayalalithaa demands transfer of police officer

Accuses  him of helping DMK to bribe voters

SEEKING ACTION: AIADMK general secretary Jayalalithaa addressing an election meeting at Karimangalam in Dharmapuri district on Saturday. Photo: N. Bashkaran
SEEKING ACTION: AIADMK general secretary Jayalalithaa addressing an election meeting at Karimangalam in Dharmapuri district on Saturday. Photo: N. Bashkaran


AIADMK general secretary Jayalalithaa has demanded that the Election Commission transfer C. Chandrasekar, Superintendent of Police, Special Branch (SSB), Chennai, accusing him of helping the ruling Dravida Munnetra Kazhagam to distribute money to voters.
She alleged that the official is the brother-in-law of School Education Minister Thangam Thennarasu and should be transferred so as to conduct the elections in a free and fair manner.
Addressing campaign meetings at Karimangalam and Odasalpatti in Dharmapuri district and Krishnagiri town on Saturday, Ms. Jayalalithaa said: “The Assembly elections offer an opportunity to root out the corrupt DMK government headed by Chief Minister Karunanidhi who, she alleged, had swindled crores in the name of welfare schemes to amass wealth for his family.
The DMK government failed to control rising inflation and deteriorating law and order. DMK leaders were conducting kangaroo courts (katta panchayat), and smuggling ration rice.
Power surplus
Ms. Jayalalithaa said that if the AIADMK alliance is voted to power, she would make the State surplus in power generation.
She assured the people of Dharmapuri a bridge across the Chinnar.
She also promised to bring water from the Panchapalli dam, set up a government engineering college and an arts college.
Speaking at Krishnagiri, Ms. Jayalalithaa said that if the AIADMK is elected, the government would establish a medical college, upgrade the district headquarters hospital, speed up Hogenakkal Drinking Water and Flurosis Mitigation Scheme and set up a sugar mill and cold storage facility in Krishnagiri district.

Saturday, 9 April 2011

வடிவேலு மீது செருப்பு வீசப்பட்டதற்கு தினமலரும் தினத்தந்தியும் அதீத முக்கியத்துவம்

 பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீது செருப்பு வீசப்படுவது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு முயற்சி என்றாலும், இந்தச் செய்திக்கு படத்துடன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. ஆங்கிலப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாகவே கருதப் படாததால், இது தொடர்பான செய்தி ஆங்கிலச் செய்தி இதழ்களில் காணப் படவில்லை. தமிழில், தினமலரும் தினத்தந்தியும் மட்டுமே இந்தச் செய்திக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.


தினத்தந்தியில் வெளிவந்த செய்தி
திருச்சி திருவானைக்காவலில்
வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீச்சு; தி.மு.க.வினர் சாலை மறியல்
தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது


திருச்சி, ஏப்.8-

திருச்சி திருவானைக்காவலில் வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது.

வடிவேலு பிரசாரம்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் திறந்த வேனில் நின்றபடி வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவரது பேச்சை கேட்க ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர்.

செருப்பு வீச்சு

இந்த நிலையில் வேட்பாளரை ஆதரித்து பேசி முடித்ததும் வடிவேலு திறந்த வேனில் நின்றபடி மக்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு செருப்பு வடிவேலுவை நோக்கி வீசப்பட்டது. இந்த செருப்பு பிரசார வேனின் மீது மேல் பகுதியில் வந்து விழுந்தது. அடுத்து வீசப்பட்ட மற்றொரு செருப்பு பிரசார வேன் மீது பட்டு கீழே விழுந்தது. இதையடுத்து வடிவேலு பிரசார வேனின் உள்பகுதிக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரசார வேன் அடுத்த இடத்திற்கு புறப்பட்டு சென்றது.

வடிவேலு பிரசார வேன் மீது செருப்புகள் விழுந்ததை கண்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கொந்தளித்து போனார்கள். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசார வாகன அணிவகுப்பில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது.

தே.மு.தி.க. அலுவலகம் சூறை

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அந்தபகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் கூட்டத்தில் இருந்து செருப்பு வீசியவரை போலீசார் பிடித்து சென்றனர். விசாரணையில் அவர் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. முன்னாள் நிர்வாகி மாசிலாமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாசிலாமணியை கைது செய்தனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. நிர்வாகி தான் செருப்பு வீசியது என தெரிந்ததும் திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதி தே.மு.தி.க. அலுவலகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் பிளக்ஸ் போர்டுகளை ரோட்டில் போட்டு கிழித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தே.மு.தி.க.வினரும், அ.தி.மு.க.வை சேர்ந்த குமார் எம்.பி. மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பிரச்சினை உருவாகாமல் இருக்க திருவானைக்காவல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.


-------

செருப்பு வீச்சு எதிரொலி: வடிவேலு பிரசாரத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் நடிகர் வடிவேலு தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த போது அவரது வேன் மீது செருப்பு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் வடிவேலு பிரசாரம் செய்த போது போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் வடிவேலு அடுத்த இடத்தில் பிரசாரம் செய்யும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கிராப்பட்டி, எ.புதூர் பகுதிகளில் போலீசார் கையில் கேமராவுடனும், துணை ராணுவ படையினரும், உயர்ந்த கட்டிடங்களின் மாடிகளிலும் போலீசார் நின்று கொண்டு கண்காணித்தனர். பிரசாரம் முடியும் வரை நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source : Dailythanthi.com

Tuesday, 29 March 2011

விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தினத்தந்தியிலும், தினகரனிலும் செய்தி இல்லை

எல்லா தரப்பு செய்திகளுக்கும் தினத்தந்தி இடமளிக்கின்றது என்பது போன்ற தோற்றம் நிலவுகின்றது. ஆனால், அப்படியான தோற்றம் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு செய்தியாக, விஜய் மக்கள் இயக்கம், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்தியைக் குறிப்பிடலாம். தினமணி இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவப் படி, முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் இச்செய்தியில் பெரிய குறும்புத்தனம் எதனையும் வெளிப்படுத்தாமலேயே செய்தி வெளியிட்டுள்ளது. தினகரனிலும், தினத்தந்தியிலும் இந்தச் செய்திக்கு இடம் தரப்படவில்லை.
ஆளும் கட்சிக்குப் பிடிக்காத செய்திகளைப் பெருமளவில் தவிர்ப்பது என்ற நிலைப்பாடு காரணமாக இருக்கலாம்.  ஆங்கிலப் பத்திரிகைகளில் தி இந்துவும், டெக்கான் கிரானிக்கிளும் இந்தச் செய்திக்கு உரிய முக்கியத்துவம் தந்து வெளியிட்டுள்ளன. நியூ இந்தியன் எக்ஸ்பிரசிலும்,  டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் இந்தச் செய்தியைக் காண இயலவில்லை. 



தினமலரில் வெளிவந்த செய்தி












தினமணி வெளியிட்ட செய்தி

அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு
திருச்சி, மார்ச் 27: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்றார் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன்.  இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:  விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். இந்த இயக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு விஜய் ரசிகர்கள் முனைப்போடு இறங்கி வேலை செய்ய உள்ளனர்.  நாட்டில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். தமிழ்நாட்டுக்கு இந்த மாற்றம் அவசியம் தேவை என்று உணர்ந்தோம்.  இதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற உணர்வையும், முனைப்பையும் தெரியப்படுத்தினேன்.  தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பாதிப்புக்காக, சுயநலத்தோடு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  நாட்டில் வன்முறை, விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. ஒரு காலத்தில் போஃபர்ஸ் ஊழலை மிகப்பெரிய ஊழல் என்பார்கள். இன்றைக்கு லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் வளர்ச்சிடைந்துள்ளது.  இந்தியாவின், தமிழகத்தின் நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிமுகவுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.  அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.  என்னுடைய இயக்கத்தில் வெளிவந்துள்ள "சட்டப்படி குற்றம்' படத்தில் நாட்டின் அவலங்களை, அசிங்கத்தை தோலுரித்துக் காட்டியுள்ளேன். இந்தப் படத்தை பார்க்கும் மக்களுக்கு மனம் மாற்றம் ஏற்படும்.  இந்தப் படம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக வரக்கூடாது என்பதற்காக பலரும் பெரும் முயற்சி எடுத்தார்கள். படத்தை அனுமதிக்கக் கூடாது என்று சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இருப்பினும், இந்தப் படத்தை திரையரங்குகளில் திரையிட்டுள்ளோம் என்றார் அவர்.
source : Dinamani.com


தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி 

Actor Vijay's Makkal Iyakkam to support AIADMK

Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam, a people's movement launched by actor Vijay, has decided to support the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) led front in the Assembly elections.
S.A. Chandrasekar, noted film director and father of actor Vijay, called on AIADMK General Secretary Jayalalithaa at Sangam Hotel here on Sunday noon and informed her about the decision.
Later Mr. Chandrasekar told presspersons that the Iyakkam favoured a political change in the State for its overall development and for the wellbeing of all sections of the society. The Iyakkam is of the firm view that political change is the need of the hour, taking into consideration the happenings in various fronts.
Enormity of violence, price hike and rampant corruption prevailing in the administration were the three reasons that forced the Iyakkam to seek a change of government. “We will highlight all these issues during the campaign,” he said.
The Iyakkam will extend its total support for ushering in such a political change, to enable the AIADMK to capture power and form the next Government under Jayalalithaa.
Responding to a query, Mr. Chandrasekar said the decision to support AIADMK in the elections was not a prelude to the Iyakkam turning into a political movement. “We are not a political outfit. We are not against anybody. We only want a political change in the State now in the interest of the whole society.”
Mr. Chandrasekar said he will soon commence his campaign.
When asked whether Vijay will also campaign for the AIADMK front, he replied that it was for the actor to decide.

Source : The Hindu website 

டெக்கன் கிரானிக்கிள் இந்தச் செய்திக்கு முதற்பக்க லீட் ஸ்டோரி முன்னுரிமையை அளித்து வெளியிட்டுள்ளது.

Vijay joins Jaya star ranks, tie-up to fly

 

Actor Vijay is not known as ‘Ilaya Thalapathy’ (young general) for nothing as he leads a motley group — of school-going boys to the college students — who go crazy at the very sight of the star.
His gravity-defying gyrations are copied and his punch dialogues are repeated with gusto by these youngsters who have been brought under a flag and an association called the Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam.
This young star is now descending into the world of politics with the backing of this young brigade. After maintaining a prolonged silence over giving support to the AIADMK, Vijay finally got his message across to AIADMK general secretary J. Jayalalithaa on Sunday.
His father, producer-director S.A. Chandra-sekar, who has orchestrated every move of his life, called on Ms Jayalalithaa to convey the decision of the Iyakkam to support her party in the April 13 poll. Mr Chandrasekar, closeted with Ms Jayalalithaa for about 20 minutes at Sang-am Hotel in Tiruchy, said the Iyakkam favoured poli-tical change in the state to ensure that it develops equitably.
Ms Jayalalithaa, meanwhile, has decided to embark on a whirlwind campaign. She will fly by helicopter from constituency to constituency to campaign for her party, hoping that Vijay will add to the star power that she and ally DMDK chief Vijayakanth bring to her alliance.

Source : Deccan chronicle website 

Sunday, 27 March 2011

குஷ்பூவுக்கு இடமுண்டு சீமானுக்கு இடமில்லை

குறிப்பிட்ட ஒரு நடிகரின் அரசியல் பார்வை மீது தனக்கு உடன்பாடில்லையென்றால், அந்த நடிகர் அல்லது சினிமா இயக்குநர் சொல்லும் கருத்து எதுவானாலும் அதைத் தமது செய்தித்தாளில் இடம்பெறச் செய்வதில்லை என்பது தமிழ் நாளிதழ்கள் வகுத்துக் கொண்டிருக்கும் நியதி. இதற்கு எந்த நாளிதழும் விதிவிலக்கல்ல.
நடிகை குஷ்பூ 2 தினங்களுக்கு முன்பு மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தினத்தந்தி, தினமலர், தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தினமலரில், குஷ்பூ ஜெய்லலிதா குறித்து தெரிவித்த சில விமர்சனங்கள் கத்தரிக்கப் பட்டுள்ளன.

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசைத் தோற்கடிப்பதே தனது லட்சியம் என்று நாம் தமிழர் கட்சித் த்லைவர் சீமான் தெரிவித்த கருத்துகள், தினமணி தவிர எந்த தமிழ் நாளிதழிலும் காணப் படவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், நடிகர் மன்சூரலிகான் போன்றவர்களது பிரச்சாரங்களைத் தமது நாளிதழ்களில் வெளியிடும் நாளிதழ்கள் சீமானின் கருத்துக்கு இடம் தரமறுக்கின்றன.

தினமலரில் வெளிவந்த செய்தி 










Source : Dinamalar.com 

தினத்தந்தியில் வெளிவந்த செய்தி

ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப்போவதில்லை
"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்''
மதுரையில் நடிகை குஷ்பு பிரசாரம்

மதுரை, மார்ச்26-

"கருணாநிதியின் கூட்டணிதான் வெற்றி பெறும்; ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை'' என்று, நடிகை குஷ்பு கூறினார்.

மதுரையில் பிரசாரம் தொடங்கினார்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் மதுரையில் நேற்று பிரசாரம் தொடங்கினார்.

நேற்று காலையில் அவர், மதுரை மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தளபதிக்கு ஆதரவாக, ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சோலையழகுபுரம், ஆண்டாள்புரம், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

மாலையில் கிழக்கு சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் பி.மூர்த்திக்கு ஆதரவாக, சொக்கலிங்கநகர், பை-பாஸ், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, மேலமாசிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம், நரிமேடு, பீபிகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சூர்யாநகர், புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது:-

நெற்றிக்கண்

மதுரையில் தான் நான் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். ஏனென்றால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்கள் நீங்கள். உங்களைப் போல தைரியமானவர்கள் யாரும் இல்லை. அதுவும் அமைச்சர் மு.க.அழகிரியின் தைரியத்திற்கு ஈடு இணையில்லை. இங்கு வந்து பேசுவதால் எனக்கும் தைரியம் அதிகமாக வந்துவிட்டது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வெற்றி பெறுவார்.

ஏனென்றால் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஆட்சியில் பயனடைந்துள்ளனர்.

கோடநாட்டில் ஓய்வு

ஜெயலலிதா ஆட்சியில் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்கவில்லை. இது உங்களுக்கே நன்றாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். கோடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லும் பாதையை அடைத்து விட்டார்.

ஆகையால் தொழிலாளர்கள் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவிட்டதால் அந்தபாதையை அவர் திறந்து விட்டுள்ளார்.

பள்ளியில் மாணவன் தேர்வு எழுதும் போது காப்பி அடித்தால் அந்த மாணவனை தண்டிப்பார்கள், அதேபோல் கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த ஜெயலலிதாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

ஜெயலலிதா வைத்துள்ளது கூட்டணி அல்ல சீட்டணிதான். கலைஞரின் கூட்டணி தான் வெற்றி பெறும். ஜெயலலிதாவின் `சீட்டணி' வெற்றி பெறப் போவதில்லை.

தூக்கி எறியப்பட்ட வைகோ

கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் கூட்டணி வைத்திருந்த ஒருவரை (வைகோ) தூக்கி எறிந்து விட்டார். அதேபோல தான் மக்களாகிய உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார்.

கலைஞர் அனைவருக்கும் வீடு வேண்டும் என்பதற்காக காங்கிரீட் வீடு கட்டித் தருகிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிளாட்பாரத்தில் தான் படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

குஷ்பு புசுபுசுவென இருக்கிறார் என்று நீங்கள் அனைவரும் நினைக்கின்றீர்கள், அதேபோல் உங்கள் குழந்தைகளும் புசுபுசுவென இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தை தருகிறார். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகவும் அறிவித்துள்ளார். எனவே கலைஞர் ஆட்சி மலர உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

Source : Daily Thanthi

 


தினமணியில் வெளிவந்த செய்தி
63 தொகுதிகளிலும் காங்கிரûஸ தோற்கடிப்போம்: சீமான்
சென்னை, மார்ச் 25: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.  இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நாங்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.  தமிழர் தேசிய இனத்தோடு உணர்வு, உயிர், உடைமை என அனைத்திற்கும் எதிராகவும், இலங்கை அரசுக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.  பூலித்தேவன் பிறந்த திசையன்விளையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரத்தை தொடக்க உள்ளேன். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாங்கள் செய்யும் பிரசாரம் காங்கிரûஸ மட்டும் இல்லாமல், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சி நிற்கும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள அ.தி.மு.க, தே.மு.தி.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வோம்.  அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வைகோ எடுத்த முடிவு குறித்து நான் கருத்து கூற முடியாது. அவர் நல்ல அரசியல் அனுபவம் மிக்கவர், எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். தமிழர் நலனை குறிக்கோளாகக் கொண்ட கட்சிகள் தி.மு.க. - காங்கிரஸ் அணியில் இருக்கின்றன என்பதற்காக நாங்கள் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யமாட்டோம். அவர்கள் உள்ளே இருந்தும், நாங்கள் வெளியே இருந்தும் காங்கிரஸýக்கு நெருக்கடி ஏற்படுத்துவோம்.  இலவச திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றாது. இலவச திட்டங்களால் தமிழம் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. அப்படி இருக்கும்போது இப்போது மீண்டும் இலவச கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது ஏன்? என்றார் சீமான்.


Source : Dinamani

அரசியல் விவாதங்களைப் பதிவு செய்வதில் தினதந்திக்கு முதலிடம், தினமணிக்கு இரண்டாமிடம்

பொதுத்தேர்தலின் போது தங்கு தடையில்லாத அரசியல் விவாதங்களுக்கு வழிவகையேறபடுத்தும் வகையில்,
தொழில்முறையாக செய்திகளை வெளியிடுவது எந்தெந்தப் பத்திரிகைகள் என்று ஆராய்ந்தோம். வேட்புமனுத் தாக்கல் முடிந்து, பிரச்சாரங்கள் தொடங்கி மூன்று நாட்களான நிலையில் இந்த ஆய்வு பொருத்தமானதாக இருக்கும்.

திமுக தலைவர் தனது சாத்னைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்டு, ஆறாவது முறையாகவும் முதல்வராக வாய்ப்பளிக்கக் கோரி பிரச்சாரம் செய்து வருகின்றார்.  அ இ அதிமுக தலைவி ஜெயலலிதா, திமுக அரசின் ப்லவேறு குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதுடன், தான் ஆட்சிக்கு வந்தால் என்னெவெல்லாம் செய்வேன் என்பதையும் பட்டியலிட்டு வருகின்றார்.

தேமுதிக நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த், திமுக அரசை விமர்சித்தும், பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக தலைவரை விமர்சித்தும் பிரச்சாரங்கள் செய்துவருகின்றனர். இவர்கள் தவிர, திருமாவளவன், மு க ஸ்டாலின், கம்யூஸ்டு கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் செய்துவருகின்ற்னர்.
நாம் தமிழர் இயக்கத் தலைவர், சீமான், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிப்பதே தனது நோக்கம் என்று  பிரச்சாரம் செய்து வருகின்றார். சினிமா நட்சத்திரங்களில் குஷ்பூ 2 தினங்களாக, திமுக கூட்டணியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்துவருகின்றார்.

இந்தத் தலைவர்களது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் பேட்டிகளையும் வெளியிடுவதில், நேர்மையாகவும், பக்கஞ்சாராமலும்  இயங்குவது எந்தெந்தப் பத்திரிகைகள் எனக் கண்டறிவது நமது ஆர்வம்.

தினத்தந்தி, எல்லா தரப்பு செய்திகளையும் உள்ளடக்கிட முய்லவ்து போன்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு செய்திவாரியாக ஆராயும் போது தான், ஒவ்வொரு பத்திரிகையின் அரசியலும் புரிந்து கொள்ள முடிவதாக உள்ளது.  தினமணி, பக்கங்களின் எண்ணிக்கை காரணமாகவோ, அல்லது பிற காரணத்தாலோ, தினத்தந்தி அளவு பன்முகத்தன்மைக்கு இடம் தரமுடிவதில்லை.
தினகரன், திமுக சார்பு நிலைப்பாட்டிலேயே, குறிப்பாக, திமுக தலைவரது  குடும்பம் சார்பான நிலைப்பாட்டிலேயே செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
தினமலர், அதுவே ஒரு அரசியல் இயக்கம்போல, மிகுந்த விருப்பு வெறுப்புகளுடன், செய்திகளைத் தெரிவு செய்வதிலும், முன்னுரிமைப் படுத்துவதிலும்,  மிகுந்த பக்கச் சார்புடனே இயங்கிவருகின்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் கதாநாயகி என்று வர்ணிக்க, கடந்த தேர்தலில் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையை கதாநாயகன் என்றும் வர்ணிக்க, தினமலர், திடீரென வில்லன் என்று தானாகவே ஒரு சொல்லை இந்தக் கதையாடலில் அடையாளப் படுத்த முயல்கின்றது.

27 03 2011 அன்று வெளியான் தினமலர் இதழின் முதல் ப்க்கமொன்றில், மின்வெட்டை வில்லன் என்று வர்ணித்து  விவசாயிகள் மின்வெட்டால் கோபமுடன் இருப்பதாகவும், தேர்தலில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் முதன்மைச் செய்தியை எழுதியுள்ளது.




\


















முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படும் என்று அதிமுக தலைவர் ஜெயல்லிதா அறிவித்த செய்தியும், அதையடுத்து, திமுக தலைவர் "ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா ஏன் அதைச் செய்ய வில்லை" என்று கேட்டு திமுக தலைவர் மு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையும் முழுமையாகப் படிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு
நாளிதழாகத்தான் புரட்ட வேண்டும்.
மு கருணாநிதியின் அறிக்கையை தினத்தந்தியும், தினகரனும் மட்டுமே விரிவாக வெளியிட்டிருந்தன.  பிற எந்த இதழும், இந்த அறிக்கையைமுழுமையாகப் புரிந்து கொள்ளும் படி வெளியிடவில்லை.
தினத்தந்தியும் தினமலரும் இந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன என்பது அந்தந்த நாளிதழ்களின் இணையதளத்தில் உள்ளவாறு கீழே தரப்பட்டுள்ளது. :
 
தினமலரில் வெளிவந்த செய்தி





















தினத்தந்தியில் வெளிவந்த செய்தி

ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை?  கருணாநிதி கேள்வி
சென்னை, மார்ச்.27-  ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை? என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம் வருமாறு:-

இடஒதுக்கீடு உயர்த்தி

கேள்வி:-அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

பதில்:-யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமியப் பெருமக்களை ஜெயலலிதாவினால் ஏமாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உடன்பாடு, ஒற்றுமை என்பது அண்ணாவும் காயிதேமில்லத்தும் இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற உடன்பாடு. ஏன், இந்தத் தேர்தலிலே கூட இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் முதலில் 3 இடங்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 63 இடங்கள் வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், தி.மு.க.விற்கு அத்தனை இடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களான ஈ.ஏ.அகமதுவும், காதர்மொய்தீனும் தி.மு.க. கேட்டுக் கொள்ளாத நிலையிலேயே, பா.ம.க. எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்ததைப் போலவே தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களில் ஓர் இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லீம்லீக் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தது. அதைக்கூட ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு 3 இடங்களை தி.மு.க. முதலில் அளித்துவிட்டு, அதிலே ஓர் இடத்தைப் பறித்துக் கொண்டதாக அவதூறு செய்தார்கள். ஆனால் நானே அண்ணா அறிவாலயத்திற்கு காதர் மொய்தீனையும், தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் தனியாக இயங்கி வந்த திருப்பூர் அல்தாப்பையும் அழைத்து இருவருடனும் பேசி, இரண்டு இயக்கங்களையும் ஒன்றாக இணைத்து வைத்ததோடு - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ஓர் இடத்தைச் சேர்த்து 3 இடங்களாகவே உயர்த்திக் கொடுத்தோம். இதையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினர் நன்றாகவே உணர்வார்கள்.

தேர்தலுக்காக சொல்பவர்கள்

தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே பத்தாண்டு காலம் இருந்தாரே, அப்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை? தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது தானே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. அதனையும் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கையை இந்திய ïனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் வைத்ததையொட்டி - தற்போது தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவிகிதம் அளித்தது தி.மு.க. ஆட்சிதான்.

இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்'' என்று எழுதப்பட்டு, படிக்கப்பட்டு அது ஏடுகளிலும் வெளி வந்துள்ளது. எனவே தேர்தலுக்காக - வாக்குக்காக சொல்வது யார், உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

ஜெயலலிதாவின் பேட்டி

இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஞாபகப்படுத்த வேண்டுமேயானால் - கரசேவை நேரத்தில் அதனை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ``பெரும்பான்மையினரும் அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை நமது முஸ்லீம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப்பிரதேச இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று பேசி அப்போதே ஏடுகளில் எல்லாம் அந்தப் பேச்சு வெளியிடப்பட்டது.

23-7-2004 தேதிய "தினத்தந்தி'' நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது. அந்தப் பேட்டி இதோ:-

கேள்வி:- இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?

ஜெயலலிதா:- இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!

இயலாத ஒன்று

கேள்வி:- சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயலலிதா:- முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.

ராமர் கோவில்

இதற்குப் பிறகு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் ``அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?'' என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்? "ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?'' என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.

இப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா? இன்னும் ஜெயலலிதாவிற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பினால் தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டன என்பதையும் விரிவாக எழுதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

Saturday, 26 March 2011

மந்தமாகத் தொடங்கியுள்ள பிரச்சாரம்: தலைவர்கள் பேச்சுகளுக்கு பத்திரிகைகள் முன்னுரிமை

18 நாட்கள் நடைபெறவுள்ள பிரச்சாரத்தில் எதை முன்வைத்து விவாதங்களை முன்னெடுத்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வாக்குகளைச் சேகரிக்கப் போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு ஆர்வம் தரும் ஆய்வாக உள்ளது.
முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
தேர்தல் ஆணைய்ம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று ஜெயலலிதா அளித்துள்ள பேட்டி,  தினமணியில் விரிவாக வெளியாகியுள்ளது. தவிர, கருணாநிதி, விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோரது பிரச்சார உரைகளும், தினம்ணியில் பதிவாகியுள்ளன.
தினமலர் திருமாவளவன் தவிர, பிற முக்கிய த்லைவர்களது பேச்சுகளை இடம்பெறச் செய்துள்ளது. தொகுதி மாறியத் ஏன் என்ற தலைப்பில், ஜெயலலிதாவின் பேட்டியை தினகரன் வெளியிட்டுள்ளது. அவர் பிரசசார உரையை தினகரனில் காண இயலவில்லை.
தினத்தந்தி ஏறத்தாழ எல்லா தலைவர்களது பேச்சுகளையும், பேட்டிகளையும் பதிவு செய்துள்ளது. வைகோ, ஒரு திருமணவிழாவில் தனது அரசியல் பயணம் தொடரும் என்று பேசிய் பேச்சை தினத்தந்தி மட்டும் பதிவு செய்துள்ளது.
தி இந்து நாளிதழ், தலைவர்கள் மனு தாக்கல் செய்திகளை விரிவாக வெளியிட்டிருந்தாலும், ஜெயலலிதாவின் பிரச்சார பேச்சை மட்டுமே வெளியிட்டுள்ளது. பிற தலைவர்களது பேச்சுகளை தி இந்து வில் காண இயலவில்லை.
அடிமைத் தளையிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் தனது தொகுதியில் பேசிய்தாக இந்தப் பதிவில் கூறப் பட்டுள்ளது. அந்த செய்தி கீழே தரப் பட்டுள்ளது.


Elections to liberate people from ‘slavery'

The ensuing Assembly elections are not just about ushering in a change of government but also liberating the people of Tamil Nadu from “slavery,” said AIADMK general secretary Jayalalithaa here on Thursday.

In a blistering attack on hitting the campaign trail from Srirangam, her constituency, she said: “Over the last five years you have been facing various problems. Paramount among them is price rise. But, the DMK government, despite being part of the Union government, has not taken any steps to check price rise or solve any of your problems.”
The government had only contributed to the price rise. Chief Minister M. Karunanidhi supported the move to allow oil companies to fix the price of petrol and diesel. Over the last one year, the price of petrol was increased nine times by Rs.15 a litre.
Ms. Jayalalithaa, who started her campaign at Veeraswaram, criss-crossed thorough fares of the island town to address wayside meetings. At Raghavendra Arch, in front of the Rajagopuram of the Srirangam Ranganathaswamy Temple, she spoke from the roof top of her campaign vehicle, using a hydraulically lifted seat.
Making a comparison of the period during the pre-DMK government and the current price of various essential commodities and construction material, Ms. Jayalalithaa said the price of rice in the open market had gone up to Rs.42 a kg from Rs.15. The price of sugar went up to Rs.35 from Rs.13 a kg. Prices of thuvar dhal, tamarind and garlic had also risen.
The price of a truckload of sand had gone up to Rs.13,000 from Rs.2,500, while the price of a bag of cement had increased from Rs.150 to Rs.280. Brick was being sold at Rs.6 a piece. “You can build a house only in your dreams,” she told the residents, many of whom had turned out on the streets to catch a glimpse of her.
Under the DMK regime, Tamil Nadu faced a decline on all fronts. Industrial and agriculture production went down. The economy became sick and unemployment rose. Power cuts, rather than power generation, had increased. If voted to power, the AIADMK would put an end to power cuts. There was no protection for the lives and property of the people under the DMK government. “Corruption is rampant and pervades all government schemes. The 2G scam has compromised national security.” The Chief Minister, she charged, was not able to get the final verdict of the Cauvery Tribunal gazetted. Nor could he get the Supreme Court order in the Mullaperiyar dispute implemented.
Ms. Jayalalithaa promised permanent solution to problems faced by people residing around Ranganathaswamy Temple in selling their land. She also promised permanent protection against flooding in the town and improvements to infrastructure and basic amenities in the temple town.

Thursday, 24 March 2011

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை 4 நாளிதழ்களும் 4 விதமாக வெளியிடக் காரணம் என்ன ?

விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல அறிக்கையை 23 03 2011 அன்று அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் வெளியிட்டார். அது குறித்த செய்தி நமது ஆய்வுக்குரிய 4 தமிழ் நாளிதழ்களிலுமே வெளியாகியுள்ளன.தினகரனில் தவிர, மற்ற இதழ்களில் திருமாவளவன் தனது கட்சித் தலைவர்களுடன் தேர்தல் அறிக்கையை வெளியிடும் படமும் வெளியிடப் பட்டுள்ளன.
ஆனால், தேர்தல் அறிக்கையில் உள்ள உள்ளடக்கத்தை வெளியிடுவதில் தினமலர், தினகரன், தினத்தந்தி ஆகிய் இதழ்கள் மிக மோசமாகவே நடந்து கொண்டுள்ளன. தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில்
திருமாவளவனிடம் கேடகப் பட்ட கேள்வி பதில்களை விரிவாக வெளியிட்டு விட்டு, தேர்தல் அறிக்கையில் உள்ள செய்திகளை மேலோட்டமாக வெளியிட்டுள்ளன. தினமணியில் தேர்தல் அறிக்கை விரிவாக இடம்பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கையின் எந்தெந்தப் பகுதிகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன என்று தேட முற்பட்டோம். அதற்குள்,  தி இந்துவில் இந்தச் செய்தி குறித்த தலைப்பிலேயே விடை கிடைத்தது.
தமிழ்த் தேசியம் குறிதது வி சி க வின் தேர்தல் அறிக்கை அதிகம் பேசுவதாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியம் பேசுவது, தமிழ் நாளிதழ்களுக்குப் பிடிக்காத விஷயமாக இருக்க வேண்டும். அதனால்தான், தினமணி தவிர்த்த பிற நாளிதழ்கள் தேர்தல் அறிக்கையின் பெரும்பகுதியினை இருட்டடிப்பு செய்து விட்டன.

இந்தச் செய்தியை விரிவாக அலசுவதற்கு வசதியாக், ஒவ்வொரு நாளிதழும் இந்தச் செய்தியை எவ்வாறு
கையாண்டுள்ள  விதம் அந்தந்த நாளிதழின் இணைய தளத்தில் உள்ள படி,தரப்பட்டுள்ளன.

 
தினகரனில் வெளியான செய்தி  
திருமாவளவன் கோரிக்கை 
நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு 
வைகோ பாடம் புகட்ட வேண்டும் 
 
சென்னை : ‘நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ 
என்று வைகோவுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைவர் திருமாவளவன், 
சென்னையில் நேற்று வெளியிட்ட பிறகு கூறியதாவது: 
மாநில உரிமைகளுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக போராடும். 
மதுவிலக்கு கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்த வலியுறுத்துவோம். 
தாய் மொழி கல்வி, நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக கொண்டுவர 
பாடுபடுவோம். தலித் மக்களின் நலன், மகளிர் நலன், இஸ்லாமியர் நலன், 
மீனவர் நலன்களுக்காக சட்டப்பேரவையில் போராடுவோம். 
கச்சத்தீவை மீட்க போராடுவோம். கடந்த 6 ஆண்டுகளாக அரசியலில் 
உடன் இருந்த மதிமுகவை அரசியல் நாகரீகமே இல்லாமல், 
பிடரியை பிடித்து வெளியே தள்ளியிருக்கின்றனர். 
தேர்தலை புறக்கணிப்பதை தவிர்த்து விட்டு, தேர்தலில் வைகோ 
பங்கேற்க வேண்டும். வைகோவை சந்திப்பதற்கு கால அவகாசம் இல்லை. 
அதனால், பத்திரிகைகள் மூலமாக அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 
நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் தனித்து போட்டி?
‘‘புதுச்சேரியில் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். 
புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். 
உடன்பாடு ஏற்பட்டால் அதன்படி போட்டியிடுவோம். 
இல்லையென்றால் 12 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்’’ 
என்று திருமாவளவன் தெரிவித்தார்
Source : Dinakaran.com  


மாநிலங்களில் தன்னாட்சி, தனிக்கொடி : வி.சி., தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை : "மாநிலங்களுக்கு தன்னாட்சி மற்றும் தனிக்கொடி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தனியாக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். இதில், மத்திய அரசிடம் உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தை, மாநில அரசின் வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். மத்திய வரி மற்றும் கூடுதல் வரிகளில் மாநிலங்களுக்கு, 75 சதவீதம் வழங்க வேண்டும்.
சுதந்திரம் மற்றும் குடியரசு நாளில், தேசியக் கொடியுடன் மாநில கொடியையும் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் ஏற்ற வழி செய்ய வேண்டும். கனிம வளங்களின் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் ஏஜன்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்.

இப்போதுள்ள ஏஜன்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சென்னையை உருவாக்கிய தலித் மக்களை, அங்கிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றக் கூடாது. ஏழை மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை டாஸ்மாக் மதுபான கடைகள் பாதிக்கின்றன. பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
source : Dinamalar.com



____________
தினமணியில் வெளியான செய்தி
தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கு: விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

சென்னை, மார்ச் 23: தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்:  தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் தலித்துகள், மீனவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதுக்கடைகளையும் மூட பாடுபடுவோம்.  இந்தக் கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் மாற்று வேலைகளை வழங்கவும், மதுவிலக்குக் கொள்கையை இந்திய அளவில் நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துவோம்.  இலங்கையில் ஆயுதப் போராட்ட வடிவம் இடைக்காலமாக அழிக்கப்பட்டாலும், விடுதலைப் போராட்டத்துக்கான தேவைகளும், காரணங்களும் அழிக்க முடியாதவையாக உள்ளன.  அங்கு நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்கவும், தமிழீழத்தை மீட்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.  உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில் மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட 38 நாடுகளை உறுப்பு நாடுகளாகவும், 14 நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாகவும் ஐ.நா.சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்துவோம்.  அகதிகள்: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை கொத்தடிமைகளை விட வேதனைக்குரியதாக உள்ளது. இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறையும், அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும்.  இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஐ.நா. சபை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.  விடுதலை செய்ய வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையைப் பெற்றுள்ள நளினி, தூக்குத் தண்டனையைப் பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.  கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட இன்னபிற வழக்குகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்.  கச்சத் தீவு மீட்பு: கடல் எல்லைப் பாதுகாப்பு எனும் பெயரில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் தொடர்கதையாகி வருகின்றன. தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம்.  மாநிலங்களுக்கு தன்னாட்சி: வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவும், மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு 75 சதவீதம் வழங்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.  மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, கோலார் ஆகிய தமிழர்கள் வாழும் பகுதிகள் கேரள, கர்நாடக மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பகுதிகளில் உள்ள மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இடங்களை தமிழக எல்லைக்குள் கொண்டுவர குரல் கொடுப்போம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன.

 


___________
தினத்தந்தி வெளியிட்ட திருமாவின் பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றம்:
`அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம்'
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தொல்.திருமாவளவன் பேட்டி


சென்னை, மார்ச் 24-

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

தேர்தல் அறிக்கை

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின், தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

வாக்குறுதிகள்

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்று 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.

நாங்கள் மக்களை சந்திக்கும்போது, சில வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளோம். அந்த வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.

அதில், இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

இனப்படுகொலை

இலங்கை தீவில் நீடிக்கும் இனச் சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா. பேரவைக்கு அழுத்தம் கொடுக்க பாடுபடுவோம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 லட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ 2 லட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு மீண்டும் வாழ்வு அளிக்கும் பணிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க போராடுவோம்.

கச்சத்தீவு மீட்பு

தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும், இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.

மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை - எளிய மக்களின் வாழ்வு வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, முழு மது விலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

நம்பிக்கை துரோகம்

இதுபோன்ற கொள்கைகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வோம். மீண்டும் நல்ல பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முதல்-அமைச்சர் கருணாநிதியை 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்துவோம்.

எதிரணி கூட்டணியில் 5 ஆண்டுகாலம் இருந்த ம.தி.மு.க.வை பிடரியை பிடித்து வெளியே தள்ளுவது போன்று வெளியேற்றியுள்ளனர். இது, அரசியல் நாகரீகம் இல்லாத நம்பிக்கை துரோகம் ஆகும். கூடா நட்பின் விளைவு இது. ஆனால், தேர்தல் புறக்கணிப்பு என்பதை ம.தி.மு.க. கைவிட்டு, தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை

முதல்முறையாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவும் அளிக்கிறது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றுவதற்கு டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் பணம்தான் பெரும் உதவியாக இருக்கும். அப்படி இருக்கும்போது, மதுவிலக்கு வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது கூட்டணியில் முரண்பாடு ஏற்படுத்தாதா?.

பதில்:- தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், அவர்களின் எல்லா கொள்கையிலும் உடன்பாடு இருக்காது. அகில இந்திய அளவில் மது விலக்கு வேண்டும். இதை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

தேர்தலுக்கான உறவு

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க.வும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சொல்கிறீர்கள். தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட கூறுகின்றீர்களா? அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றீர்களா?.

பதில்:- நம்பிக்கை துரோகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் போட்டியிட வேண்டும்.

கேள்வி:- ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தொடர்ந்து காங்கிரஸ் அரசை எதிர்த்து வருகிறீர்கள். ஆனால், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இருக்கும் அணியில் இடம்பெற்றுள்ளீர்கள். இது பிரசாரத்தின்போது பாதிப்பை ஏற்படுத்தாதா?.

பதில்:- இது தேர்தலுக்கான உறவு. ஈழத் தமிழர் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். நீர்த்து போக மாட்டோம்.

புதுச்சேரியில் தனித்து போட்டி

கேள்வி:- தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?.

பதில்:- முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதில், நாங்களும் கலந்துகொள்வோம். அதன்பின்னர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வோம். புதுச்சேரியில் 12 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். இந்த நிலையில், புதுச்சேரி முதல்-மந்திரி வைத்திலிங்கம் தொடர்பு கொண்டு, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரிடம் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் வன்னியரசு, பாவலன், ஆர்வலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, தொல்.திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Source : Dailythanthi.com



Strong ingredients of Tamil nationalism in VCK manifesto
Special Correspondent CHENNAI: Supporting the case for an independent ‘Tamil Eelam', seeking United Nations recognition for its formation, working for the rehabilitation of Tamil refugees and demanding retrieval of Tamil areas now with other States, the election manifesto of Viduthalai Chiruthaigal Katchi (VCK), released on Wednesday, is dominated by strong ingredients of Tamil nationalism.
Asked whether it would be possible to get back Tamil areas after the reorganisation of States, VCK president Thol Thirumavalavan said, “We have included the issue to further sharpen the debate on Tamil nationalism.” “The government should conduct a referendum in Tamil-speaking areas such as Devikulam, Peermedu, Munnar and Kolar Gold mines to ascertain the opinion of the people to include these areas with Tamil Nadu,” he said. The party also demanded total prohibition in the State, saying the retail liquor shops run by the State government had deprived the livelihood of Dalits, fishermen and other downtrodden while plunging the youth into drinking habit. “We need not have agreement with our alliance partner on all issues,” he said when asked how he could expect the DMK government to close down liquor shops which were generating revenue for its welfare schemes.
The VCK also wanted government control over agriculture lands to prevent fertile lands being taken over for real estate purposes. “The government should set up a land commission for the purpose because real estate business has killed the hope that agriculture can be revived in the State. If allowed to continue, it will lead to a situation of food scarcity,” VCK said.
Protection of native species of cows, goats and buffaloes, a special scheme for cultivation of palm trees, introduction of drip irrigation and a pension scheme for all farmers who have crossed 60 years are the issues found a place in the manifesto.
Besides demanding 33 per reservation for women, free education from kindergarten to higher education, the party wanted a separate ministry for women at the Centre and in Tamil Nadu.
Mr. Thirumavalavan also came down on AIADMK general secretary Jayalalithaa for “elbowing out” the MDMK from the alliance. “It is a betrayal of trust,” he said.
Asked whether he would ask Mr. Vaiko to join the DMK alliance, he said, “It is for the DMK leadership to decide.”

Source : The Hindu website 

தேர்தல் ஆணையம் குறித்து மு கருணாநிதியின் விமர்சித்தால் தினமணிக்கு ஏன் கோபம் வருகின்றது ?

ஜனநாயக ரீதியாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையத்தில், சர்வாதிகாரத் தன்மை தென்படும்போது, அரசியல் சாசன ரீதியாக அளிக்கப் பட்டுள்ள அதிகாரங்களையும் மீறி இயங்கும் போது, அது குறித்து ஒரு அரசியல் கட்சித் தலைவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் அது ஏன் தினமணிக்குக் கோபமூட்ட வேண்டும்.
தேர்தல ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு க்ருணாநிதி, ஒரு விரிவான
கண்டன அறிக்கை வெளியிட, அதை தமிழ் நாளிதழ்கள் எல்லாமே விரிவாக வெளியிட்டன.  அறிக்கையை முழுமையாக வாசிக்க, தினத்தந்தியில் வெளியான முதற்பக்க முதன்மைச் செய்தியைப் படிக்கலாம். இந்தச் செய்தியின் பிரதி, இந்தச அலசலின் கீழ் தரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையையே ஒரு மனுவாக ஏற்றுக் கொண்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற்ம், இது குறித்த விசாரணையையும் தொடங்கியுள்ளது. அரசியல் சாசன விதி மீறல் எதுவும் உள்ளதா என்பதைக் கண்டறிவதே இந்த விசாரணையின்  நோக்கம்.
இந்த அறிக்கை, அதையொட்டிய உயர் நீதிமன்ற விசாரணை ஆகியவ்ற்றுக்கிடையில், இன்று (24 03 2011- வியாழன்) வெளியான தினமணியின் இன்றைய இதழில், "முதல்வர் கோபப்படுவானேன்?" என்ற தலைப்புடன் ஒரு தலைய்ங்கம் எழுதப் பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளைக் கேள்வி கேட்காமல் ஏற்கவேண்டும் என்பது போன்ற தொனி இந்தத் தலையங்கத்தில் தென்படுகின்றது.  ஜனநாயக விழுமியங்கள் சிக்கலாகும் போது, எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையில், இது போன்ற விமர்சனங்கள் எழுப்பப் படுவது வியப்பையே த்ருகின்றது. 


தலைய்ங்கம் :
"முதல்வர் கோபப்படுவானேன்?"


தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.

 தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?

 தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும், பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி வருகிறது.

 வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும், தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம் இல்லாமல் இயலாது.

 இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத் தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன தவறு?

 இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும், விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.

 நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை.

 கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர், இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.

 தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை எதுவும் இல்லை.

 அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர் மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும் விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.

 தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.

 தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப் பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.

 இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப் போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக் கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?

 வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும், கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?

Source : Dinamani.com
________________

தினத்தந்தியில் வெளியான மு கருணாநிதியின் விரிவான அறிக்கை:


தேர்தல் கமிஷனின் கெடுபிடி உத்தரவுகள்
கருணாநிதி கண்டனம்

தமிழக அரசிடம் கேட்காமல், தன்னிச்சையாக அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசிடம் கேட்காமல் தன்னிச்சையாக அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர் என்று தேர்தல் கமிஷனுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்.23-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாத இடைவெளி

14-வது சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பணிகளில் தமிழகத்திலே உள்ள அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதும் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 13-ந் தேதியன்று தமிழ்நாட்டு மக்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களை ஆள வேண்டியவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தங்களது வாக்குகளை அளிக்கவிருக்கிறார்கள்.

இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவுற்ற இரண்டொரு நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு முடிவாக ஏப்ரல் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், மே 13-ம் நாள்தான் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எதற்காக இந்த இடைவெளி? ஏன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமலே அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துகிறார்கள்? எல்லாம் தேர்தல் ஆணையத்தின் முடிவு. அவர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப்பதிவு செய்யும் நாளை சற்று தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது.

ஆடு, கொலுசுகளை கூட...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று சொல்லி மற்றும் ஒரு கொடுமையும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் யாரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. இதைப்பற்றி அன்றாடம் ஏடுகள் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி வெளிவருகின்றன. ஏன், மாலை இதழ் ஒன்றில் வந்த செய்தியிலே கூட- ``தேர்தல் கமிஷன் கெடுபிடி- வாகன சோதனையில் ``காமெடி'' காட்சிகள்- ஆடு, கொலுசுகளைக்கூட விடவில்லை'' என்று கொட்டை எழுத்துகளில் செய்திகள் வந்துள்ளன.

அந்த செய்தியில் ``தேர்தல் என்றாலே தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மாறிமாறி கார்களில் வந்து பிரசாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பிரசார சத்தம் காதைப் பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள், தனியார் சுவர்களில் சின்னங்கள் தேர்தல் வாசகங்கள் எழுத முன்கூட்டியே இடம்பிடித்து விடுவார்கள். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழுதுவது, வாசகம் எழுதுவது மும்முரமாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல ஊரெங்கும் களைகட்டிவிடும்.

ஆனால் இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் போட்டுள்ளது. சுவர்களில் வரையப்பட்டிருந்த சின்னம், தலைவர்களது படங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. சென்னை நகரில் ஒரு இடத்தில் கூட சின்னத்தைப் பார்க்க முடியவில்லை. சிலைகளைக்கூட விட்டுவைக்கவில்லை.

அண்ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். சிலைகளையும் தேர்தல் முடியும் வரை மூடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிலைகளை துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கண்ணில் படவில்லை. பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களும் எங்கும் காணப்படவில்லை. தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ஆரவாரம் தம்பட்டம் எதுவும் இன்றி களை இழந்த கோவில் விழா போல் காட்சி அளிக்கிறது.

பணம் பறிமுதல்

இதற்கெல்லாம் மேலாக வாகன சோதனை; வியாபாரிகளையும், பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கிப்போட்டு விட்டது. நகைக்கடைக்காரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் அன்றாடம் வசூல் ஆகும் வியாபார பணத்தை வங்கியில் கட்ட எடுத்துச் செல்வார்கள். இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்ல முடியவில்லை. வாகன சோதனையில் சிக்கினால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். இதுபோல் நிலம் வாங்க- விற்க எடுத்துச் செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை'' என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மாலை இதழிலேயே இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்றால் இவை அனைத்தும் உண்மை. தேர்தல் ஆணையத்தின் பெயரால் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைத் தான் அந்த இதழ் தெரிவித்துள்ளது.

வியாபாரிகள் போராட்டம்

தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 29-ந் தேதியன்று கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை கொடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்துள்ள அறிக்கையில் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் 22-ந் தேதிக்குள் அவர்களை அழைத்துப்பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்றும், இல்லாவிட்டால் 24-ந் தேதி வணிகர் சங்க பிரதிநிதிகள் ஒன்று கூடி சென்னையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும், அதன் பின்னரும் இந்த பிரச்சினை நீடித்தால் 29-ந் தேதி கடையடைப்பு நடத்துவார்கள் என்றும், அதற்கும் பலன் இல்லாவிட்டால் வணிகத்துறையினர் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதிலே இன்னும் வேடிக்கை! வாகன சோதனையில் ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாக கற்பனை செய்து கொண்டு ஆடுகளையும், கோழிகளையும் ஏன் பீடிகளையும் கூட பறிமுதல் செய்துள்ளார்கள். விற்பனைக்காக எடுத்துச்சென்ற கொலுசுகளையும், நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய கிடங்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

ஐகோர்ட்டில் வழக்கு

தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையே தாக்கல் செய்துள்ளார்.

அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களைச் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர், இதுபோல பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை, திருமணத்துக்கு நகை வாங்கி வந்தாலும் அதையும் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார்கள். விசாரணை தொடருகிறது.

அதிகாரிகள் மாற்றம்

தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டினை இந்த அளவோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு போலீஸ் டி.ஜி.பி. முதல் மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பல பேரை தேர்தல் கமிஷன் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேர்மையாக பணிபுரிந்து கொண்டிருந்த பல அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதிலே உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூட விசாரிக்காமல்- தமிழக அரசிடம் கேட்காமல்கூட தன்னிச்சையாக மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதிகாரிகள் அளவிலே மட்டுமல்ல, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலே சாதாரணமாக பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளைக்கூட மாறுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

`தினத்தந்தி' செய்தி

இன்று காலையில் வெளிவந்த "தினத்தந்தி'' நாளிதழிலே கூட, ``தற்காலிக அலுவலகங்கள், பிரசார வாகனங்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கும், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்தின் கூடுதல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ``தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தினமும் புதிது புதிதாக வெளியிட்டு வரும் உத்தரவுகளினால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை எப்படி தொடங்குவது, செலவு கணக்கை எப்படி காட்டுவது என்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில் காணப்படுகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கூடுதல் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று எழுதி தேர்தல் ஆணையத்தின் கூடுதல் கெடுபிடிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவிற்கு அதிக கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்? தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம்சாட்டவில்லை. நாளேடுகள் பல அதைப்பற்றி அன்றாடம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

கங்கையே சூதகமானால்

அதைப்பற்றி தேர்தல் ஆணையம் ஏதாவது கவலைப்படுகிறதா? ``மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் - கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?'' என்று தேவர் திருமகன் அடிக்கடி கூறிய பழமொழிதான் நினைவிற்கு வருகிறது!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Source : Dailythanthi.com

Tuesday, 22 March 2011

ஜெயலலிதா பிரச்சாரத் திட்டம்:தினத்தந்தியில் முழுமையாக வெளியீடு

அதிமுக பொதுச் செயலரின் 18 நாட்கள் பிரச்சார சுற்றுப் ப்யணம் குறித்த அறிக்கை முழுமையாக தினத் தந்தியில் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை தினமலர், தினகரன், தினமணியில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் நிரம்பிய அறிக்கைகளை எடிட் செய்தும் சுருக்கமாகவும் வெளியிடுவதை விடவும், விரிவாக வெளியிடுவதுதானே சரி ?எங்கள் ஆசிரியர்கள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.

 அடுத்த 18 நாட்களில் ஜெயலலிதா எங்கே இருக்கின்றார் என்பதைத் தேட இது போன்ற அறிவிப்புகள் பெருமளவில் உதவும்.


அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
ஜெயலலிதா 24-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம்
திருச்சியில் தொடங்குகிறார்


சென்னை, மார்ச்.22-

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 24-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 24-3-2011 முதல் 11-4-2011 வரை அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து 18 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

திருச்சி

24.3.2011 (வியாழக்கிழமை): திருச்சி பகுதி- மாம்பழச் சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பகுளத் தெரு கார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, காந்தி ரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின் ரோடு, திருவானைக்கோவில் சன்னதி வீதி, நடுக்கொண்டையன்பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை, பாலக்கரை.

25.3.2011 (வெள்ளிக்கிழமை): திருச்சி பகுதி- கம்மரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்பூர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர்.

கந்தர்வகோட்டை

26.3.2011 (சனிக்கிழமை): திருச்சி பகுதி - கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், மணிகண்டம் ïனியன் ஆபிஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மாவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜி நகர் மில் கேட், தீரன் நகர், கருமண்டபம்.

27.3.2011 (ஞாயிற்றுக்கிழமை): கந்தர்வகோட்டை பகுதி: கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர், திருவையாறு, தஞ்சாவூர்.

28.3.2011 (திங்கட்கிழமை): தஞ்சாவூர் பகுதி - திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி.

தூத்துக்குடி

29.3.2011 (செவ்வாய்க்கிழமை): விழுப்புரம் பகுதி - விழுப்புரம், திருவண்ணாமலை.

30.3.2011 (புதன்கிழமை): வேலூர் பகுதி - வேலூர், காஞ்சீபுரம்.

1.4.2011 (வெள்ளிக்கிழமை): கன்னியாகுமரி பகுதி - கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி.

2.4.2011 (சனிக்கிழமை): தூத்துக்குடி பகுதி - தூத்துக்குடி, சிவகாசி, மதுரை.

3.4.2011 (ஞாயிற்றுக்கிழமை): கம்பம் பகுதி - கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சிலமலை, போடிநாயக்கனூர், நத்தம், மதுரை.

4.4.2011 (திங்கட்கிழமை): பரமக்குடி பகுதி- முதுகுளத்தூர், தூவல், பரமக்குடி, காரைக்குடி, மதுரை.

திருப்பூர்

5.4.2011 (செவ்வாய்க்கிழமை): உதகமண்டலம் பகுதி - உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், இடையார்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, பீளமேடு, செட்டி வீதி, உக்கடம் பைபாஸ், சிங்காநல்லூர், நீலாம்பூர், காளப்பட்டி.

6.4.2011 (புதன்கிழமை): திருப்பூர் பகுதி - திருப்பூர் (பாண்டியன் நகர்), செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, பொலவகாளிபாளையம், கோபிசெட்டிப்பாளையம்.

7.4.2011 (வியாழக்கிழமை): கோபிசெட்டிப்பாளையம் பகுதி - கரூர், பரமத்தி, தென்னிலை, வெள்ளக்கோவில், முத்தூர், விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, காசிபாளையம், ஈரோடு.

8.4.2011 (வெள்ளிக்கிழமை): நாமக்கல் பகுதி - நாமக்கல், ஆண்டலூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், போஸ் மைதானம்.

கிருஷ்ணகிரி

9.4.2011 (சனிக்கிழமை): கிருஷ்ணகிரி பகுதி - காரிமங்கலம், பைïர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஓசூர்.

10.4.2011 (ஞாயிற்றுக்கிழமை): சென்னை பகுதி - மயிலாப்பூர், டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கார் பாலம், கச்சேரி ரோடு, மாங்கொல்லை, மலர் மருத்துவமனை, திருவான்மிïர் சிக்னல், பெருங்குடி, விஜய நகரம், கோவிலம்பாக்கம்-கீழ்க்கட்டளை ஜங்ஷன், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், ஆற்காடு சாலை, துரைசாமி சாலை, சிங்கார வேலர் திடல், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அமைந்தகரை மார்க்கெட், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சிந்தாதிரிப்பேட்டை, டாக்டர் நடேசன் ரோடு, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை.

சென்னை

11.4.2011 (திங்கட்கிழமை): சென்னை பகுதி - அம்பத்தூர், பாடி மேம்பாலம், கொன்னூர் நெடுஞ்சாலை, என்.எம்.கே. தெரு, அயன்புரம் மார்க்கெட், வெங்கடேசபுரம் காலனி, பெரம்பூர் மேம்பாலம், பெரவலூர் சதுக்கம், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம், மேல்பட்டி பொன்னப்ப தெரு, மூர்த்திங்கர் தெரு, அசோக் பில்லர், முல்லை நகர் மேம்பாலம், திரு.வி.க. லிங்க் ரோடு, வைத்யநாதன் பாலம், வ.உ.சி. நகர் மார்க்கெட் லைன், டோல்கேட், எல்லையம்மன் கோயில் தெரு, கடற்கரை சாலை, எஸ்.என். செட்டித் தெரு, ராயபுரம் என்-1 காவல் நிலையம், சிமென்ட்ரி ரோடு, தங்கசாலை மணிக்கூண்டு, பேசின்பாலம், அம்பிகா ஓட்டல், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, வெங்கட்டம்மா சமாதி தெரு, பிளவர்ஸ் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 அதிமுக வேட்பாளர் பட்டியலைப் போலவே தேமுதிக வேட்பாளர் பட்டியலும், தினத்தந்தியில் துல்லியமாகவும், தினமலரிலும், தினமணியிலும் சுருக்கமாகவும் தரப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது
தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் அறிவிப்பு
வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டி


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டனர். விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சென்னை, மார்ச்.22-

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

20 மணி நேரம் பேச்சுவார்த்தை

தே.மு.தி.க. போட்டியிடும் 41 தொகுதிகள் எவை, எவை என்பதை அடையாளம் காண்பதற்காக இரு தரப்பினரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு சில தொகுதிகளில் இரு கட்சிகளுமே தீவிர ஆர்வம் காட்டியதால் இழுபறி நிலை ஏற்பட்டு விடிய, விடிய பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போனது.

2 நாட்களாக சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் பேசிய பிறகு நேற்று முன்

தினம் இரவில் உடன்பாடு ஏற்பட்டது.


ஜெயலலிதா அறிவித்தார்


இதையடுத்து அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க.வின் 160 தொகுதிகளுக்கான திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் பட்டியலையும் அறிவித்தார்.


இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டன. அவை வருமாறு:-


1. விருத்தாசலம், 2. திருக்கோவிலூர், 3. ரிஷிவந்தியம், 4. திருச்செங்கோடு, 5. ஆரணி, 6. செங்கம் (தனி), 7. பட்டுக்கோட்டை, 8. கும்மிடிப்பூண்டி, 9. திருத்தணி, 10. சோளிங்கர்.


11. தர்மபுரி, 12. கங்கவல்லி (தனி), 13. மதுரை மத்தி, 14. கூடலூர் (தனி), 15. திருவாடானை, 16. திட்டக்குடி (தனி), 17. குன்னம், 18. மயிலாடுதுறை, 19. திருவெறும்பூர், 20. சேலம் (வடக்கு).


21. ராதாபுரம், 22. சூலூர், 23. விருகம்பாக்கம், 24. ஓசூர், 25. லால்குடி, 26. பேராவூரணி, 27. செங்கல்பட்டு, 28. எழும்பூர் (தனி), 29. செஞ்சி, 30. ஈரோடு (கிழக்கு).


31. கம்பம், 32. சேந்தமங்கலம், 33. திருப்பரங்குன்றம், 34. விருதுநகர், 35. ஆத்தூர், 36. பண்ருட்டி, 37. அணைக்கட்டு, 38. பத்மநாபபுரம், 39. வேப்பனஹள்ளி, 40. மேட்டூர், 41. ஆலந்தூர்


மேற்கண்ட 41 சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஆனது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.


மேற்கண்டவாறு அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.


ஒப்பந்தத்தில் விஜயகாந்த் கையெழுத்து


இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே பொது தேர்தல் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு இந்த 41 தொகுதிகளும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.


ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தும் கையெழுத்திட்டிருந்தனர்.


41 வேட்பாளர்கள்


தொகுதிகள் முடிவானதை தொடர்ந்து விஜயகாந்த் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 3 கட்டங்களாக வெளியிட்டார்.


கடந்த தேர்தலில் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை அவர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலந்தூரிலும், நடிகர் அருண்பாண்டியன் பேராவூரணியிலும் போட்டியிடுகிறார்கள்.


பட்டியல் விவரம்


விஜயகாந்த் அறிவித்த முதல் பட்டியலில் 11 பேரும், 2-வது பட்டியலில் 24 பேரும், 3-வது பட்டியலில் 6 பேரும் இடம் பெற்று இருந்தனர். பட்டியல்

விவரம் வருமாறு:-



1. விருதுநகர்- க.பாண்டியராஜன் (தேர்தல் பணி செயலாளர்)

2. மதுரை மத்தி- ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க. மாநில பொருளாளர்)

3. ஈரோடு கிழக்கு- வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்)

4. கம்பம்- பி.முருகேசன் (துணை செயலாளர்)

5. பட்டுக்கோட்டை- என்.செந்தில் குமார் (மாநில இளைஞர் அணி துணை செயலாளர்)

6. ராதாபுரம்- மைக்கேல் எஸ்.ராயப்பன் (உயர் மட்டக்குழு உறுப்பினர்)

6. சேலம் வடக்கு- ஆர்.மோகன்ராஜ் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்)

7. திருக்கோவிலூர்- எல்.வெங்கடேசன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்)

9. ஆத்தூர்- எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)

10. கூடலூர் (தனி)- எஸ்.செல்வராஜ் (நீலகிரி மாவட்ட செயலாளர்)

11. சேந்தமங்கலம்- சாந்தி ராஜமாணிக்கம் (நாமக்கல் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்)

12. ரிஷிவந்தியம்-விஜயகாந்த் (நிறுவன தலைவர்).

13. ஆலந்தூர்-பண்ருட்டி எஸ்.ராமசந்திரன்(அவைத்தலைவர்)

14. செங்கம் (தனி) -டி.சுரேஷ் குமார்(துணை செயலாளர்)

15. எழும்பூர்(தனி)-கு.நல்லதம்பி (மாநில இளைஞரணி துணைசெயலாளர்)

16. பண்ருட்டி - பி.சிவக் கொளுந்து(கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்)

17. சூலூர் - கே.தினகரன் (கோவை தெற்கு மாவட்ட செயலாளர்)

8. குன்னம் - துரை காமராஜ்(பெரம்பலூர் மாவட்ட செயலாளர்)

19. மேட்டூர் - எஸ்.ஆர்.பார்த்திபன்(சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்)

20.தருமபுரி-ஏ.பாஸ்கர்(தர்மபுரி மாவட்ட இளைஞரணி செயலாளர்)

21. ஆரணி - ஆர்.மோகன் என்ற மோகனம்

22. பேராவூரணி-சி.அருண் பாண்டியன்(நடிகர்)

23. சோளிங்கர் -பி.ஆர்.மனோகர்(அரக்கோணம் நகர செயலாளர்)

24. திருவாடனை-முஜிபுர் ரகுமான்(மாநில செயற்குழு உறுப்பினர்)

25. லால்குடி-செந்தூர்ரேஸ்வரன்(மாநில மாணவரணி செயலாளர்)

26. திருப்பரங்குன்றம் - ஏ.கே.டி.ராஜா(மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்)

27. அணைக்கட்டு - வி.பி. வேலு(வேலூர் மத்திய மாவட்ட செயலாளர்)

28. திருவெறும்பூர்-எஸ்.செந்தில்குமார்.(திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்)

29. கெங்கவல்லி- ஆர். சுபா (சேலம் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலாளர்)

30. ஓசூர்-ஜான்சன்(கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)

31. செஞ்சி-சிவா என்ற சிவலிங்கம்(விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்)

32. மயிலாடுதுறை-பால அருட்செல்வம்(நாகை வடக்கு மாவட்ட செயலாளர்)

33. செங்கல்பட்டு-டி.முருகேசன்(காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்)

34. வேப்பனஹள்ளி-எஸ்.எம்.முருகேசன்(மாநில பொதுக்குழு உறுப்பினர்)

35. விருத்தாசலம்-முத்துகுமார்(விருத்தாசலம் ஒன்றிய செயலாளர்)

36.விருகம்பாக்கம்-ப.பார்த்தசாரதி (தலைமை நிலைய செயலாளர்)

37.கும்மிடிப்பூண்டி-சி.எச்.சேகர் (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

38.பத்மநாபபுரம்-எஸ்.ஆஸ்டின் (துணை செயலாளர்)

39.திருத்தணி-மு.அருண் சுப்பிரமணியம் (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்)

40.திருச்செங்கோடு-பி.சம்பத்குமார் (நாமக்கல் மாவட்ட செயலாளர்)

41.திட்டக்குடி (தனி)-தமிழ்அழகன் (நல்லூர் ஒன்றிய செயலாளர்)

ஒத்துழைப்பு

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும் கழக மற்றும் அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு தந்து பொது மக்களின் ஆதரவை பெற்று அவர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

வேட்பாளர் பட்டியலைத் துல்லியமாக வெளியிடுவதில் தினத்தந்தியும் தினமணியும் நன்று; தினமலரும் தினகரனும் நன்றன்று

ஒரு தகவல் எவ்வளவு துல்லியமாகவும்,  நடுநிலையுடனும், பக்கச் சார்பற்றும் வெளியிடப் படுகின்றதோ, அவ்வளவு முனைப்புடன் அந்தத் தகவல் உண்மையாக அமையும் என்பது இதழியல் விதி.
பொதுத் தேர்தல் நடைபெறும்போது,  முக்கிய அரசியல் கட்சிகள் வெளியிடும் வேட்பாளர்களின் பட்டியலை
எவ்வளவு துல்லியமாக வெளியிடப் படுகின்றது என்று ஆராய்ந்தோம்.
வேட்பாளரின் பெயர், போட்டியிடும் தொகுதி என்ற இரண்டு தகவலையும் தவிர, வேறு என்ன தொடர்புடைய தகவல்கலைத் தரமுடியும் என்றும் தேடினோம்.
தினத் தந்தி, அதிமுக வின் பட்டியலை வெளியிடுகையில், ஒவ்வொரு வேட்பாளரின் கட்சி சார்ந்த பொறுப்பை வெளியிட்டுள்ளது. தினமணியும் அவ்வாறே செய்துள்ளது.
தினமலரில், வேட்பாளரின் பெயரும், தொகுதியின் பெயரும் மட்டுமே தரப்பட்டுள்ளன.
தினகரனில், அதிமுகவின் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய தொகுதிகளுக்கான 30 வேட்பாளர்களின் பெயர்கள்  மட்டுமே இடம் பெற்றுள்ளன.
 




R–ZL NyPNÛT ÚRŸR¨eLÖ]
160 ÙRÖh‡LºeLÖ] A.‡.˜.L. ÚYyTÖ[ŸL· “‡V TyzV¥
Ù^VX¦RÖ A½«�“

ÚRŸR¨eh 160 ÙRÖh‡LºeLÖ] A.‡.˜.L. ÚYyTÖ[ŸL· “‡V TyzVÛX ÚS¼¿ Ù^VX¦RÖ A½«†RÖŸ.
160 ÚYyTÖ[ŸL·
ÙNÁÛ], UÖŸo.22-
R–ZL NyPNÛT
TyzV¥


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு உள்பட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் முன்பே அ.தி.மு.க. தரபிலிருந்து கடந்த 16-ந் தேதி 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின. பின்னர் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் முடிவு காணப்பட்டது. இந்த பிரச்சினையில் ம.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. அ.தி.மு.க. தரப்பில் புதிய வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று புதிய வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம்-ஜெயலலிதா
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, 13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப்  பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. திருத்தி அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்ற தொகுதிகளில் நிறுத்தப்படுகிறார்கள்.
1. ஸ்ரீரங்கம்:- ஜெ.ஜெயலலிதா (கழகப் பொதுச் செயலாளர்)
 

2. பொன்னேரி (தனி):- பொன்.ராஜா (திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
3. திருவள்ளூர்:- பி.வி.ரமணா, (திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
4. பூவிருந்தவல்லி (தனி):- இரா.மணிமாறன், (காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
5. ஆவடி:- எஸ்.அப்துல் ரஹீம் (ஆவடி நகர செயலாளர்)
6. அம்பத்தூர்:- எஸ்.வேதாச்சலம் (அம்பத்தூர் நகர செயலாளர்)
7. மாதவரம்:- வி.மூர்த்தி (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்)
8. திருவொற்றிïர்:- கே.குப்பன் (திருவொற்றிïர் நகர செயலாளர்)
 


சென்னை மாவட்டம்
9. ராதாகிருஷ்ணன் நகர்:- பி.வெற்றிவேல் (வடசென்னை மாவட்ட பொருளாளர்)
10. கொளத்தூர்:- சைதை சா.துரைசாமி (தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர்)
11. வில்லிவாக்கம்:- ஜே.சி.டி.பிரபாகர், (சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர்)
12. திரு.வி.க.நகர் (தனி):- வ.லக�டன் (வடசென்னை மாவட்ட அவைத் தலைவர்)
13. ராயபுரம்:- டி.ஜெயக்குமார் (வடசென்னை மாவட்ட செயலாளர்)
14. துறைமுகம்:- பழ.கருப்பையா (கொள்கை பரப்பு இணைச் செயலாளர்)
15. ஆயிரம்விளக்கு:- பா.வளர்மதி, (கழக அமைப்புச் செயலாளர்)
16. அண்ணாநகர்:- எஸ்.கோகுல இந்திரா, (மகளிர் அணிச் செயலாளர்)
17. சைதாப்பேட்டை:- ஜி.செந்தமிழன், (தென்சென்னை மாவட்ட செயலாளர்)
18. தியாகராயநகர்:- வி.பி.கலைராஜன், (இளைஞர் பாசறை செயலாளர்)
19. மைலாப்பூர்:- ஆர்.ராஜலட்சுமி, (இளைஞர் பாசறை இணைச் செயலாளர்)
20. வேளச்சேரி:- எம்.கே.அசோக், (வேளச்சேரி பகுதி செயலாளர்)
 

காஞ்சீபுரம் மாவட்டம்
21. சோழிங்கநல்லூர்:- கே.பி.கந்தன் (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர்)
22. ஸ்ரீபெரும்புதூர் (தனி):- மொளச்சூர் இரா.பெருமாள், (ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெ பேரவை செயலாளர்)
23. பல்லாவரம்:- ப.தன்சிங், (பல்லாவரம் நகர செயலாளர்)
24. தாம்பரம்:- டி.கே.எம்.சின்னையா, (தாம்பரம் நகர செயலாளர்)
25. திருப்போரூர்:- த டரை கே.மனோகரன் (திருப்போரூர் ஒன்றிய செயலாளர்)
26. செய்ïர் (தனி):- வி.எஸ்.ராஜி, (லத்தூர் ஒன்றிய செயலாளர்)
27. மதுராந்தகம் (தனி):- எஸ்.கணிதா சம்பத், (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்)
28. உத்திரமேரூர்:- வாலாஜாபாத் பா.கணேசன் (வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்)
29. காஞ்சீபுரம்:- வி.சோமசுந்தரம், (காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்)

வேலூர் மாவட்டம்
30. அரக்கோணம் (தனி):- சு.ரவி, (வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்)
31. காட்பாடி:- எஸ்.ஆர்.கே.அப்பு (எ) ராதாகிருஷ்ணன், (வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்)
32. ராணிப்பேட்டை:- அ.முஹம்மத்ஜான், (வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்)
33. ஆற்காடு:- ஆர்.சீனிவாசன் (ஆற்காடு நகர செயலாளர்)
34. வேலூர்:- டாக்டர் வி.எஸ்.விஜய், (வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)
35. வாணியம்பாடி:- கோவி.சம்பத்குமார் (ஆலங்காயம் ஒன்றிய செயலாளர்)
36. ஜோலார்பேட்டை:- கே.சி.வீரமணி, (வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்)
37. திருப்பத்தூர்:- கே.ஜி.ரமேஷ் (கந்திலி ஒன்றிய செயலாளர்)
 

தர்மபுரி-கிருஷ்ணகிரி
38. ஊத்தங்கரை (தனி):- மனோரஞ்சிதம் நாகராஜ் (கிருஷ்ணகிரி மாவட்ட இணை செயலாளர்)
39. பர்கூர்:- கே.இ.கிருஷ்ணமூர்த்தி (கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர்)
40. கிருஷ்ணகிரி:- கே.பி.முனுசாமி, (கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்)
41. பாலக்கோடு:- கே.பி.அன்பழகன், (தருமபுரி மாவட்ட செயலாளர்)
42. பாப்பிரெட்டிப்பட்டி:- பி.பழனியப்பன், (தருமபுரி மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)
 

திருவண்ணாமலை
43. திருவண்ணாமலை:- எஸ்.ராமச்சந்திரன் (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவர்)
44. கீழ்பென்னாத்தூர்:- ஏ.கே.அரங்கநாதன் (துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர்)
45. கலசபாக்கம்:- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்)
46. போளூர்:- எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன், (போளூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர்)
47. செய்யார்:- முக்கூர் என்.சுப்பிரமணியன், (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்)
48. வந்தவாசி (தனி):- செய்யாமூர் வே.குணசீலன் (அனக்காவூர் ஒன்றிய செயலாளர்)
49. மைலம்:- கே.பி.நாகராஜன், (மைலம் ஒன்றிய செயலாளர்)
50. திண்டிவனம் (தனி):- டாக்டர் த.அரிதாஸ், (விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர்)
51. வானூர் (தனி):- ஐ.ஜானகிராமன், (விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)
52. விழுப்புரம்:- சி.வி.சண்முகம், (விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்)
53. உளுந்தூர்பேட்டை:- இரா.குமரகுரு (விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்)
54. சங்கராபுரம்:- ப.மோகன், (விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)
55. கள்ளக்குறிச்சி (தனி):- பா.அழகுவேல் பாபு, (விழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்)

சேலம்-நாமக்கல்
56. ஆத்தூர் (தனி):- எஸ்.மாதேஸ்வரன், (சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்)
57. ஏற்காடு (பழங்குடி):- செ.பெருமாள் (தொகுதி செயலாளர்)
58. ஓமலூர்:- பல்பாக்கி சி.கிருஷ்ணன் (சேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)
59. எடப்பாடி:- எடப்பாடி கே.பழனிசாமி, (சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்)
60. சங்ககிரி:- விஜயலட்சுமி பழனிச்சாமி
61. சேலம் (மேற்கு):- ஜி.வெங்கடாஜலம், (சேலம் மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)
62. சேலம் (தெற்கு):- எம்.கே.செல்வராஜ், (சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்)
63. வீரபாண்டி:- எஸ்.கே.செல்வம் (சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்)
64. ராசிபுரம் (தனி):- ப.தனபால், (நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்)
65. நாமக்கல்:- கே.பி.பி.பாஸ்கர், (நாமக்கல் நகர செயலாளர்)
66. குமாரபாளையம்:- பி.தங்கமணி, (நாமக்கல் மாவட்ட செயலாளர்)

ஈரோடு-திருப்பூர்
67. ஈரோடு (மேற்கு):- கே.வி.ராமலிங்கம், (ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்)
68. மொடக்குறிச்சி:- ஆர்.என்.கிட்டுசாமி (ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்)
69. தாராபுரம் (தனி):- கே.பொன்னுசாமி, (ஈரோடு மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)
70. காங்கேயம்:- என்.எஸ்.என்.நடராஜ், (காங்கேயம் ஒன்றிய செயலாளர்)
71. பெருந்துறை:- தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், (ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர்)
72. பவானி:- பி.ஜி.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்)
73. அந்திïர்:- எஸ்.எஸ்.ரமணீதரன், (தொகுதி கழக செயலாளர்)
74. கோபிசெட்டிப்பாளையம்:- கே.ஏ.செங்கோட்டையன் (தலைமை நிலைய செயலாளர்)
75. உதகமண்டலம்:- புத்தி சந்திரன், (குந்தா ஒன்றிய செயலாளர்)

கோவை மாவட்டம்
76. மேட்டுப்பாளையம்:- ஓ.கே.சின்னராஜ் (கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்)
77. அவினாசி (தனி):- ஏ.ஏ.கருப்புசாமி (அவினாசி ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர்)
78. திருப்பூர் (வடக்கு):- எம்.எஸ்.எம்.ஆனந்தன் (திருப்பூர் நகர செயலாளர்)
79. பல்லடம்:- பல்லடம் கே.பி.பரமசிவம் (பல்லடம் ஒன்றிய செயலாளர்)
80. கவுண்டம்பாளையம்:- வி.சி.ஆறுக்குட்டி (சர்க்கார்சாமக்குளம் ஒன்றிய செயலாளர்)
81. கோயம்புத்தூர் (வடக்கு):- தா.மலரவன் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர்)
82. தொண்டாமுத்தூர்:- எஸ்.பி.வேலுமணி, (கோவை புறநகர் மாவட்ட செயலாளர்)
83. கோயம்புத்தூர் (தெற்கு):- சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி, (கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)
84. சிங்காநல்லூர்:- ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க செயலாளர்)
85. கிணத்துக்கடவு:- செ.தாமோதரன் (பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர்)
86. பொள்ளாச்சி:- எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, (கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர்)
87. உடுமலைப்பேட்டை:- பொள்ளாச்சி ஏ.ஜெயராமன் (தேர்தல் பிரிவு செயலாளர்)
88. மடத்துக்குளம்:- சி.சண்முகவேலு, (திருப்பூர் மாவட்ட செயலாளர்)

திண்டுக்கல்-கரூர்
89. பழனி:- கே.எஸ்.என்.வேணுகோபாலு, (திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்)
90. ஒட்டன்சத்திரம்:- பி.பாலசுப்பிரமணி (தொகுதி செயலாளர்)
91. நத்தம்:- இரா.விசுவநாதன், (திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர்)
92. வேடசந்தூர்:- ச.பழனிச்சாமி, (தொகுதி செயலாளர்)
93. அரவக்குறிச்சி:- வி.செந்தில்நாதன், (கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்)
94. கரூர்:- வி.செந்தில்பாலாஜி, (கரூர் மாவட்ட செயலாளர்)
95. கிருஷ்ணராயபுரம் (தனி):- எஸ்.காமராஜ், (கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)
 

திருச்சி-பெரம்பலூர்
96. குளித்தலை:- பாப்பாசுந்தரம் (கரூர் மாவட்ட அவைத் தலைவர்)
97. மணப்பாறை:- ஆர்.சந்திரசேகர் (மருங்காபுரி ஒன்றிய செயலாளர்)
98. திருச்சி (மேற்கு):- என்.மரியம்பிச்சை, (திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)
99. திருச்சி கிழக்கு:- ஆர்.மனோகரன், (திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்)
100. மணச்சநல்லூர்:- பூனாட்சி (திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)
101. முசிறி:- என்.ஆர்.சிவபதி, (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலாளர்)
102. துறைïர் (தனி):- இந்திராகாந்தி, (திருச்சி புறநகர் மாவட்ட இணை செயலாளர்)
103. பெரம்பலூர் (தனி):- இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், (பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
104. அரியலூர்:- துரை.மணிவேல் (பெரம்பலூர் மாவட்ட இணை செயலாளர்)
105. ஜெயங்கொண்டம்:- பா.இளவழகன், (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்)
106. நெய்வேலி:- எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், (தொகுதி செயலாளர்)

கடலூர்-நாகை
107. கடலூர்:- எம்.சி.சம்பத், (கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்)
108. குறிஞ்சிப்பாடி:- சொரத்தூர் இரா.ராஜேந்திரன், (எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்)
109. புவனகிரி:- செல்வி ராமஜெயம் (கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்)
110. காட்டுமன்னார்கோயில் (தனி):- என்.முருகுமாறன், (கடலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர்)
111. சீர்காழி (தனி):- ம.சக்தி, (நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணி செயலாளர்)
112. பூம்புகார்:- எஸ்.பவுன்ராஜ் (செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர்)
113. நாகப்பட்டினம்:- கே.ஏ.ஜெயபால், (நாகப்பட்டினம் மாவட்ட பொருளாளர்)
114. வேதாரண்யம்:- என்.வி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)
115. மன்னார்குடி:- சிவா.ராஜமாணிக்கம், (மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்)
116. திருவாரூர்:- குடவாசல் எம்.ராசேந்திரன் (திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர்)
117. நன்னிலம்:- ஆர்.காமராஜ், (திருவாரூர் மாவட்ட செயலாளர்)
118. திருவிடைமருதூர்(தனி):- டி.பாண்டியராஜன் (திருநறைïர் ஊராட்சி செயலாளர்)

தஞ்சை-கும்பகோணம்
119. கும்பகோணம்:- இராம.ராமநாதன், (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
120. பாபநாசம்:- இரா.துரைக்கண்ணு, (பாபநாசம் ஒன்றிய செயலாளர்)
121. திருவையாறு:- எம்.ரெத்தினசாமி (பூதலூர் ஒன்றிய செயலாளர்)
122. தஞ்சாவூர்:- எம்.ரெங்கசாமி, (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர்)
123. ஒரத்தநாடு:- ஆர்.வைத்திலிங்கம், (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர்)
124. கந்தர்வகோட்டை (தனி):- ந.சுப்ரமணியன், (குளத்தூர் ஊராட்சி செயலாளர்)
125. விராலிமலை:- டாக்டர் சி.விஜயபாஸ்கர், (மருத்துவ அணி துணைச் செயலாளர்)
126. திருமயம்:- பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர்)
127. ஆலங்குடி:- கு.ப.கிருஷ்ணன்
 

சிவகங்கை-மதுரை
128. அறந்தாங்கி:- மு.ராஜநாயகம் (சிறுமருதூர் கிளை செயலாளர்)
129. காரைக்குடி:- சோழன் சித.பழனிச்சாமி (சிவகங்கை மாவட்ட செயலாளர்)
130. திருப்பத்தூர்:- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
131. மானாமதுரை (தனி):- ம.குணசேகரன், (மானாமதுரை ஒன்றிய செயலாளர்)
132. மேலூர்:- ஆர்.சாமி (பொதுக்குழு உறுப்பினர்)
133. மதுரை கிழக்கு:- கே.தமிழரசன் (மதுரை புறநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)
134. சோழவந்தான் (தனி):- எம்.வி.கருப்பையா, (அலங்காநல்லூர் ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர்)
135. மதுரை வடக்கு:- ஏ.கே.போஸ், (மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)
136. மதுரை மேற்கு:- செல்லூர் கே.ராஜு, (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்)
137. திருமங்கலம்:- ம.முத்துராமலிங்கம் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)

தேனி-விருதுநகர்
138. ஆண்டிபட்டி:- தங்க தமிழ்செல்வன், (தேனி மாவட்ட செயலாளர்)
139. போடிநாயக்கனூர்:- ஓ.பன்னீர்செல்வம் (கழகப் பொருளாளர்)
140. ராஜபாளையம்:- கே.கோபால்சாமி, (விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்)
141. சாத்தூர்:- ஆர்.பி.உதயகுமார், (மாணவர் அணி செயலாளர்)
142. சிவகாசி:- கே.டி.ராஜேந்திர பாலாஜி (விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்)
143. அருப்புக்கோட்டை:- வைகைச்செல்வன், (இலக்கிய அணி செயலாளர்)
144. பரமக்குடி (தனி):- டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ், (ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர்)
145. முதுகுளத்தூர்:- மு.முருகன் (முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர்)

நெல்லை-தூத்துக்குடி
146. விளாத்திகுளம்:- ஜி.வி.மார்க்கண்டேயன், (தொகுதி செயலாளர்)
147. தூத்துக்குடி:- ஏ.பால், (தூத்துக்குடி மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்)
148. திருச்செந்தூர்:- பி.ஆர்.மனோகரன், (இளைஞர் பாசறை துணை செயலாளர்)
149. ஸ்ரீவைகுண்டம்:- எஸ்.பி.சண்முகநாதன் (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்)
150. கோவில்பட்டி:- கடம்பூர் செ.ராஜ× (தூத்துக்குடி மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்)
151. சங்கரன்கோவில் (தனி):- சொ.கருப்பசாமி (அமைப்புச் செயலாளர்)
152. வாசுதேவநல்லூர் (தனி):- டாக்டர் எஸ்.துரையப்பா, (திருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)
153. கடையநல்லூர்:- பி.செந்தூர்பாண்டியன் (திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர்)
154. ஆலங்குளம்:- பி.ஜி.ராஜேந்திரன், (திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)
155. திருநெல்வேலி:- நயினார் நாகேந்திரன், (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
156. அம்பாசமுத்திரம்:- இசக்கி சுப்பையா, (திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்)

குமரி மாவட்டம்
157. கன்னியாகுமரி:- கே.டி.பச்சைமால் (கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்)
158. நாகர்கோவில்:- நாஞ்சில் ஏ.முருகேசன் (கன்னியாகுமரி மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)
159. குளச்சல்:- பி.லாரன்ஸ் (கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரிவு இணை செயலாளர்)
160. கிள்ளிïர்:- ஆர்.ஜார்ஜ், (கிள்ளிïர் ஒன்றிய செயலாளர்)

இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Source : Daily Thanthi