Showing posts with label விதிமீறல். Show all posts
Showing posts with label விதிமீறல். Show all posts

Saturday, 9 April 2011

எந்தத் தவறையும் ஒப்புக் கொள்ள மறுக்கும் தினமலர் விஜய்காந்த் மறுப்பையும் வெளியிடவில்லை




கோவை பொதுக்கூட்டத்தில் ஜெய்லலிதாவுடன் விஜய்காந்த் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த தினமலர் இது குறித்து ஒரு முதன்மைச் செய்தியை வெளியிட்டது. பிற நாளிதழ்கள் இது குறித்து எந்த்த விதப் பதிவைக் கூடச் செய்யயாத நிலையில் தினமலர் மட்டும் ஏன் இத்த்னை தூரம் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று இந்த வலைப்பதிவிலும் கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.
இப்பொழுது தான் ஏன் கோவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விஜய்காந்த் விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவலை தினமணி பதிவு செய்துள்ளது. அதிர்ச்சியும் வியப்பும் மேலிட பெரிய அளவில் செய்தி வெளியிட்ட தினமலரோ தனது செய்தி ஆதாரமற்றது எனத் தெரிந்த நிலையில், உண்மையான நிலையைத் தனது வாசகர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இது குறித்து செய்தியை வெளியிட முன்வரவில்லை.
அரைகுறையான புரிதலுடன் ஒரு செய்தியை வெளியிடுவது, செய்தியால் பாதிக்கப் பட்டவரக்ள் விளக்கமளித்த பின்பும், அந்த விளக்கத்தை வெளியிடாமல் இருப்பது, இதே தவற்றைத் தொடர்ந்து செய்வது என்பது இந்திய இதழியலில் தினமலர் தவிர பிற மொழி இதழ்கள் எதிலேனும் காணப் படுகின்றதா என்பதை ஆய்வாளர்கள் தான் விளக்க வேண்டும்.

கோவை பொதுக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? விஜயகாந்த் விளக்கம்
சிதம்பரம், ஏப். 7: தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் கோவை பொதுக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.  கோவையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவர் ஒரே மேடையில் ஜெயலலிதாவுடன் பிரசாரம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவருக்கு பதிலாக அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இந்நிலையில் வியாழக்கிழமை சிதம்பரத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த், இதற்கு பதிலளித்து பேசியதாவது:  நான் தொகுதிதோறும் மக்களை சந்திக்கச் செல்வதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளருக்கு 2 நாளுக்கு முன்பே தகவல் சொல்லி விட்டேன். இதை வெளியில் முன்கூட்டியே சொல்ல வேண்டாம். தேவையில்லாமல் ஏதாவது செய்திகளை வெளியிடுவார்கள் என்று சொல்லிவிட்டேன்.  கோவை கூட்டத்துக்கு நான் செல்லவில்லை என்றவுடன் புறக்கணிப்பு, புறக்கணிப்பு என கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகளில் "பிளாஷ் நியூஸ்' போட்டார்கள். லயாலோ கல்லூரி கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை தொலைக்காட்சியில் செய்தியாக போடவில்லையே ஏன்?. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அதே லயோலா கல்லூரி கருத்து கணிப்பை திருப்பி, திருப்பி பல முறை போட்டீர்களே?  கேபிள் நிறுவனம் அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்ததால் பயத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று அஞ்சி இதுபோன்று செய்திகளை வெளியிடுகிறார்கள்.  இப்போது அந்த குடும்ப தொலைக்காட்சிகளில், நான் உட்கார்ந்தால் குற்றம். நின்றால் குற்றம். சாய்ந்தால் குற்றம் என வெளியிடுகின்றனர்.  2009-10 தேர்தலில் தனித்து நான் போட்டியிட்ட போது ஒருவார்த்தை கூட என்னை பற்றி தவறாக செய்தி போடவில்லையே ஏன்? தற்போது தவறாக செய்தி போடுகிறார்கள் என்றால் இதற்கு உள்அர்த்தம் உள்ளதாக குற்றம்சாட்டினார் விஜயகாந்த்.
 Source Dinamani.com
 
முன்னதாக தினமலரில் வெளிவந்த பெட்டிச் செய்தியும் முதன்மைச் செய்தியும் 
திட்டமிட்டு புறக்கணிப்பு? கூட்டணி கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள், ஒரே மேடையில் தோன்றும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் துவங்கியது முதலே, இக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி தோழமைக் கட்சியினர் மத்தியில் எழுந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க., தலைமை, தங்களது கட்சிகளின் சார்பில், 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது முதலே, விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Source Dinamalar.com

Friday, 8 April 2011

கோவையில் ஜெயலலிதா கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளாததில் தினமலருக்கு மட்டும் அதீத வருத்தம் ஏன்?

கோவையில் புதன் கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் கலந்துகொள்ள வில்லை. அவர் வரவில்லை என்பதை பல பத்திரிகைகள் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், தினமலர் மட்டும் இந்த விஷயத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து முதற்பக்க முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. திட்டமிட்ட புறக்கணிப்பு என்று கட்டம் கட்டி ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட அரசியல் இயக்கங்கள் மீது மட்டும் அதீத அக்கறை காட்டுவதும், அதீத முக்கியத்துவம் கொடுத்து முதன்மைப் படுத்துவதும், பிற செய்திகளுக்கு உரிய முக்கியத்துவத்தை ம்றுப்பதற்குச் சமமாகும்.
தினமலர் ஐ ஜே கே தலைவர் பச்சமுத்துவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்துவருகின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் போதுமான சான்றுகள் கிடைத்து வருகின்ற்ன. இது அப்ப்ட்டமான நெறிமீறல் என்றே கருதப் படவேண்டும்.

Saturday, 2 April 2011

தொடரும் தினமலரின் அத்துமீறிய குறும்பும் பொறுப்பற்ற போக்கும்

ஏப்ரல் முதல் நாளன்று வெளியான தினமலரின் இணைப்பான தேர்தல் களம் 2011 சப்ளிமென்ட் இதழின் முதல் பக்கத்தில்,  சமரசம்! அதிமுக கூட்டணியில் மீண்டும் வைகோ. போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு என்ற தலைப்பிட்ட ஒரு பக்க செய்தி வெளியாகியிருந்தது. உண்மை என்ன ? என்ற குறிப்புடன் 7ஆம் பக்கத்தில் வெளியான குறிப்பில், ஏப்ரல் முதல் நாளன்று இவ்வாறு யாராவது உங்களை ஏமாற்றலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இக்கட்டான நிலையிலிருக்கும் மதிமுகவை மையமாக வைத்து இப்படி ஒரு விளையாட்டான செய்தி வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. என்றாலும், இது குறித்த குறிப்பு அதே இதழில் இடம் பெற்று விட்டதால் பிரச்னையில்லை.

ஆனால், இந்த செய்தியைப் படித்த வைகோ, உடன்டியாக இது குறித்த தனது கண்டனத்தை ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கை, மாலை மலர் இதழில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தினமலரில் இந்தச் செய்தி யைக் காண முடியவில்லை.
எந்த முதல் பக்க்த்தில் குறும்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்களோ அதே முதல் பக்கத்தில், இந்த மறுப்பை வெளிய்ட்டால்தானே தினமலரின் தவறை மன்னிக்க முடியும். ஆனால், மறுப்பு அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் குப்பையில் போட்டால், இது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடல்லவா? சுதந்திரம் என்பதைத் தவறாகப் பயன்படுத்துவதாகாதா?





source Dinamalar.com 



















தினம்லரில் இடம்பெறாத அறிக்கை  
தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மாலைமலரில் வெளிவந்துள்ள செய்தி 


ஜெயலலிதாவை நான் சந்தித்ததாக கூறுவதா? வைகோ கண்டனம்


சென்னை, ஏப்.1-
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.
 
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது.   அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
 
எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.
 
கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.
 
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தேர்தல் விதிமீறல்கள் இதுவரை இல்லாத அளவு அதிகம்: டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை

இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் தேர்தல் விதிமீறல்கள் பதிவு செய்யப் பட்டிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு கருணாநிதியோ, தமிழ் நாட்டில் அறிவிக்கப் படாத எமர்ஜென்சி நிலவுவதாக அறிவித்துள்ளார். இரு முரண்பட்ட த்கவல்கள் வெளியான சூழலில் தமிழ்ப் பத்திரிகைகள் அமைதி காப்பது நியாயமல்லா. எது சரி என்பதை பொது ம்க்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வுரைகளை வெளியிடுவதன் மூலமே, உண்மை நிலவரங்களைப் புரிந்து கொள்ள இயலும்.
ஆனால், தமிழ் இதழியல் சூழலில் இவ்வாறான ஆய்வுரைகளை எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.



Poll violations touch a new high in TN

CHENNAI: 46,892 and still counting. That is the number of poll-related violations registered by the Election Commission (EC) ever since it started strictly implementing the model code of conduct since early March in Tamil Nadu. The number of cases is perhaps the largest ever to have been registered by the EC in the run-up to an assembly election, say observers.
Apart from taking action on the cases registered, the EC has acted on 1,132 more instances of violation, taking the total tally to 50,024. "EC's teams that are looking into poll violations have directly taken action against the violators," said an official. 
Chennai, which leads the tally with 10,615 cases, is followed by neighbouring Kanchipuram (8,725 cases) and Cuddalore (7,203 cases). Virudhunagar has reported the least number of cases, 44, followed by Ariyalur (49).
Most of the cases registered relate to the Prevention of Damage and Defacement to Public Property Act. "Out of the 46,892 cases, 45,431 are instances of defacement of public property," he said. More than 200 cases were registered against those who tried to induce voters or distributed cash, liquor and other items. Other charges include misuse of vehicles, places of worship and organising unauthorised meetings.
Most cases of violations related to distribution of cash and liquor were reported from Tirunelveli (36), followed by Madurai (20). In Chennai 16 cases were booked in this category. There have been no such cases from Tiruvannamalai, Villupuram, Salem, Karur, Perambalur, Ariyalur and Tirupur districts.
Interestingly, the commission has taken action in 2,268 cases in Krishnagiri district, all related to misuse of vehicles. Perambalur comes next with only 66 such cases.
Chief minister M Karunanidhi's constituency Tiruvarur is the only district where cases have been filed for defacement of property, misuse of vehicle and places of worship, illegal meeting and inducing voters with cash and other gifts.
source : Times of india 

 

Tuesday, 22 March 2011

அழகிரியின் மீறல்: தமிழ் நாளிதழ்கள் (தினமணி தவிர) மீண்டும் மவுனம்

மு க அழகிரி, மீண்டும் ஒரு விதிமீறல் தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளால்  முயற்சிக்கப் பட்டும், வழக்கு எதுவும் பதியப் படாமல், விடப்பட்டுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மட்டும் செய்தி வெளியிட்டுள்ளது. இதே செய்தியின் கொஞ்சம் நாசூக்கான வடிவம் தினமணியில் வெளியாகியுள்ளது. மதுரை மண்டலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை இனங்காட்டுவதாக இந்தச் செய்தி அமைந்துள்ளது. ஆனால், தமிழ் நாளிதழ்கள் இந்தப் போக்குகளைப் பெருமளவில் மவுனம் காத்தும், அல்லது முழுமையாகப் பதிவு
செய்யாமலும் தேர்தல் செய்திகளை வெளியிட்டு வருகின்ற்ன.முதலில் தினமணி வெளியிட்டுள்ள செய்தியும், அதையடுத்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்தியும்  அடுததடுத்துத் தரப்பட்டுள்ளன:




மு.க.அழகிரியுடன் சென்ற தி.மு.க. வேட்பாளரின் கார் சோதனை
மேலூர், மார்ச் 20: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் சென்ற மேலூர் தி.மு.க. வேட்பாளர் காரை வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் காலமாகிவிட்டார். இவரது மனைவி ராணி. மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர். ஞாயிற்றுக்கிழமை பகலில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மேலூரில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை வேட்பாளர் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர். அங்கிருந்து கொட்டாம்பட்டிக்கு காரில் புறப்பட்டார் மு.க.அழகிரி. அவரது கார் முன்செல்ல, மேலூர் தொகுதி திமுக வேட்பாளர் ராணி உள்ளிட்டோர் தனித்தனி கார்களில் சென்றனர்.  அப்போது தி.மு.க. வேட்பாளர் காரில் பணம் கொண்டு செல்லப்படுவதாக, அப்பகுதியிலிருந்த சோதனைச் சாவடிக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருவாய்த் துறையினரும், போலீஸôரும் அந்தக் காரை வழிமறித்தனர். ஆனால், கார் நிற்காமல் சென்றுவிட்டது. பின்னர் கொட்டாம்பட்டி அருகே அந்தக் காரை மடக்கிய வருவாய்த் துறையினரும், போலீஸôரும் மேலூர் போலீஸ் நிலையத்துக்கு அதை கொண்டுவந்தனர். காரில் சோதனையிட்டபோது, அதில் சால்வைகள் மட்டும் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து காரை போலீஸôர் விடுவித்தனர்.  திமுக வேட்பாளரின் காரை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  தி.மு.க. வேட்பாளர் ஆதரவாளர்கள் சென்ற வாடகைக் காரில் 82 சால்வைகள் இருந்ததாகவும், அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் காரில் இருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸôர் கூறினர்.



Alagiri convoy ‘ignores’ tahsildar’s order


MADURAI: The AIADMK on Sunday alleged DMK South Zone Organising Secretary M K Alagiri to having carried money to bribe voters in Melur constituency. Alagiri came to Melur with his supporters in a convoy to hold discussions with Congress functionaries at the MP Office, to brighten up the chances of DMK candidate Rani, widow of former MLA KVV Rajamanickam, in the elections.Sources said money in two bags was transferred from a car without a registration number to the one belonging to Rani. Immediately, the AIADMK passed on the information to Melur tahsildar Kalimuthu. Before he could reach the spot, the candidate’s car reportedly left for Kottampatti. The tahsildar rushed to a check-post near Melur to stop the vehicles, but none of them, including that of Alagiri, halted to the signal from tahsildar. The Kottampatti inspector was informed, but the cars took a diversion avoiding Kottampatti check-post.Based on representations from the AIADMK, Expenditure Observer H Moharana ordered seizure of the car. However, a vehicle check revealed only a few towels and shawls. A case was registered for violation of poll code under section 171(E) and 511(i) of IPC, read with Section 123 of the Representation of the People Act. Surprisingly, even after tahsildar’s endorsement, Alagiri and Moorthy MLA were not booked. Instead, four unnamed persons were booked under the same sections for not cooperating with tahsildar during vehicle check.

 

Sunday, 20 March 2011

விதிமீறல்கள் குறித்து வாக்களர்களை எச்சரிக்கும் தமிழ் நாளிதழ்கள்

தேர்தல் விதிமீறல்கள் குறித்த ஆணையத்தின் எச்சரிக்கைகள், நடவடிக்கைகளைத் தமிழ் நாளிதழ்கள் தத்தமது போக்கிலே பதிவு செய்து கொண்டு வருகின்றன. இன்று 20 03 2011 ஞாயிறு அன்று வெளியான மூன்று தமிழ் நாளிதழ்களில் மூன்று வித செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஒன்றில் இடம் பெற்ற செய்தியை மற்றொரு நாளிதழில் காண இயலவில்லை.
1. தினகரனில் புதுச்சேரிப் பதிப்பில் 4ஆம் பக்கத்தில் இன்று இடம்பெற்றுள்ள ஒரு செய்தி :
தேர்தல் குற்றங்களுக்கு
எந்தெந்த பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்யலாம் ?
தேர்தல் ஆணையம் விள்க்கம்.

Source : Dinakaran.com
 
2. அரசியல்வாதியை பார்த்து
அதிகாரி நிற்க கூடாது
தேர்தல் கமிஷன் உத்தரவு
தினமலர் புதுச்சேரிப் பதிப்பு 2003 2011 ப். 5


அரசியல்வாதியை பார்த்துஅதிகாரி நிற்க கூடாது:தேர்தல் கமிஷன் உத்தரவு
திண்டுக்கல்: "அரசியல்வாதிகளிடம் எழுந்து நின்று வேட்பு மனு வாங்கக் கூடாது' என, அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரி, துணை தேர்தல் அதிகாரிகள் யாரிடமும் விருப்பு, வெறுப்பற்ற நிலையில் நடந்து கொள்ள வேண்டும். மனு தாக்கல் செய்யும் அனைவரும் ஒன்றே. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அவர்களை, "வேட்பாளராக' தான் பார்க்க வேண்டும். மனு செய்ய வருபவர் அரசியல் கட்சியின் மிக முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவரிடம் மரியாதை நிமித்தம் எனக் கூறி, தனிப்பட்ட முறையில் பேசக் கூடாது. எழுந்து நின்று வரவேற்க கூடாது. அமர்ந்த நிலையில் தான், அவரிடம் வேட்பு மனுவை பெற வேண்டும், என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source : Dinamalar.com


3. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக‌
14 உள்ளூர் கேபிள் டி வி
சேனல்களின் செயல்பாடு முடக்கம்
தர்மபுரி கலெக்டர் நடவடிக்கை


தர்மபுரி, மார்ச்.20-

தர்மபுரியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 14 உள்ளூர் கேபிள் டி.வி சேனல்களின் செயல்பாடுகளை முடக்கி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் விதிகள் மீறல்

கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை, சுங்கவரி மற்றும் ஆயத்துறை மூலமும் தக்க அனுமதி பெற்றிருப்பதுடன் முறையான சேவை வரியும் கட்ட வேண்டும். அதோடு மட்டுமின்றி ஒளிபரப்பும் திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு தக்க பட உரிமை பெற்றிருக்க வேண்டும்.

தர்மபுரியில் உள்ள 14 உள்ளூர் கேபிள் டி.வி. நிறுவனங்கள் எந்தவிதமான முறையான ஆவணங்களும் இன்றி செயல்பட்டதுடன் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதை தேர்தல் ஆணையம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கண்டுபிடித்தது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து முறைகேடாக செயல்பட்ட 14 தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்களின் செயல்பாடு முடக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள பிற பகுதிகளிலும் அனுமதியின்றி இயங்கி வரும் கேபிள் டி.வி.க்களையும் முடக்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Daily Thanthi

அழகிரிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சூடு தமிழ்ப் பத்திரிகைகள் மவுனம் ?

 தேர்தல் நன்னடத்தை விதியை மீறியதாக மு க அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த தேர்தல் ஆணைய்ம், தற்போது அழகிரி விதியை மீறியதை உறுதி செய்து, அவர் அரசுப்பணியையும்,  தேர்தல் தொடர்பான சொந்த வேலையையும் ஒன்றாக்கியதைக் கண்டித்து, அழகிரி டில்லியில் இருந்து மதுரை சென்ற செலவை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று
உத்தரவிட்டுள்ளது.
முதல் முறையாக எம்பி ஆகத் தேர்ந்தெடுக்கப் பட்டதால், தனக்கு இது பற்றித் தெரியாது என்று அழகிரி தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த விளக்கத்தை ஏற்பதற்கில்லை என்று தேர்தல் ஆணைய்ம் தெரிவித்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக விரிவாக விளக்கப் பட்டுள்ளது. தெரியாது என்று சொல்லித் தப்பிக்க முடியாது. முதல் முறை என்பதால், "கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறோம்", எனற எச்சரிக்கையுடன், கட்டணத்தை மட்டும் கட்டுமாறு சொல்லிவிட்டது இந்தியத் தேர்தல் ஆணையம்.
இந்தச் செய்தி தமிழில் எந்த இதழிலும் வெளியாகவில்லை.
தி இந்துவிலும், டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் வெளியாகியுள்ளது.
புது டில்லியில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு செய்தி சேகரிக்கப் போதிய வசதிகள் இல்லை என்பதாலும் இந்தச் செய்தி விடுபட்டிருக்கலாம். அல்லது. அழகிரிக்கு இக்கட்டைத் தரும் இந்தச் செய்தியை வெளியிடுவானேன் என்று ஒதுங்கிக்  கொண்டிருக்கலாம். நாளை, நமது சிறப்பு நிருபர் என்ற பைலைனுடன், வெளியிடவும் செய்யலாம்.
இது குறித்து இந்த வலைப்பதிவில், மார்ச் 10 அன்று வெளியிடப் பட்ட குறிப்பும், அதைய்டுத்து, தி இந்துவிலும், டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் வெளியான செய்திகளும், அதற்கான சுட்டிகளும் தரப்பட்டுள்ளன.

செய்தியை வெளியிட்ட் பின் மவுனம் காக்கும் தமிழ் பத்திரிகைகள்

மு க அழகிரி தேர்தல் நன்னடத்தை விதியை மீறினார் என்று அநேகமாக எல்லா தமிழ் நாளிதழ்களுமே செய்தி வெளியிட்டன.  அந்தச் செய்தியின் படி, மு க அழகிரி மார்ச் 7ஆம் தேதிக்குள் விதியை மீறியதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் , பதில் வராவிட்டால், தேர்தல் ஆணைய்ம் தன்னிச்சையாக இது குறித்து முடிவெடுக்கும் என்றும்
தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், 7,8,9,10 என்று நாட்க்ள் கடந்து விட்டன. அழகிரி என்னதான் பதில் கொடுத்தார், ஆணையம் அதை ஏற்றுக் கொண்டதா என்பது குறித்து இதுவரை எந்த நாளிதழிலும் தகவல் தென்படவில்லையே ஏன்?

http://mediawatch2011.blogspot.com/2011/03/blog-post_5335.html



EC asks Alagiri to reimburse expenses to government
J. Balaji NEW DELHI: The Election Commission (EC) has directed Union Chemicals and Fertilizers Minister M.K. Alagiri to reimburse the expenditure incurred on any government facilities such as airfare from Delhi to Chennai and back, road transport, boarding and lodging facilities he availed himself during his visit to Chennai and Madurai early this month. It has cautioned him to be careful in future and not violate the model code of conduct.
The EC found his reply to the show cause notice sent to him earlier “not satisfactory” in as much that the letter of the (Chemical and Fertilizers Minister's Secretary) to the Commission on March 3 was a post-facto intimation and did not mention that the visit of Mr. Alagiri to Chennai was of such urgency that it could not be avoided in public interest.
‘We took lenient view'
But the EC considered the written submission made by Mr. Alagiri that as a first-time MP, he was not aware of all the nitty-gritty of the procedures and that such lapses would not happen in future. Hence it decided to take a lenient view in the matter.
The EC issued notice to the Minister for violating the code by visiting Madurai on March 4 and “indulging in political activities” after going to Chennai on an official visit to review the functioning of the CIPET on March 3.
Alagiri's reply
The Minister, in his reply, claimed that his department could not give prior intimation of his visit to Chennai because of the fact that March 2 was a holiday (Shivratri) and, therefore, a letter was issued on 3rd of March, 2011 stating that the visit was purely official and could not be avoided in public interest. His visit to Madurai was due to “unexpected personal political exigencies” and was not a pre-scheduled one. He said it was not brought to his notice by his office that the Model Code of Conduct had come into immediate effect.
Unacceptable: EC
For this, Commission said this could not be accepted as “this fact [of model code in force] was clearly mentioned in the press note issued by the EC on March 1 and which was also published and reported in the press and in the news broadcasts made by various TV channels.”
Source : The Hindu Online 


EC asks Alagiri to reimburse expenses incurred on TN visit

NEW DELHI: The Election Commission on Saturday directed Union chemicals and fertilisers minister M K Alagiri to reimburse the expenditure incurred on his recent visit to poll-bound Tamil Nadu in violation of the model code of conduct.

Cautioning the senior DMK leader to be "more careful" in future, the EC said in its order that the expenditure on airfare from New Delhi to Chennai and back, road transport, board and lodging availed by him during his visits to Chennai and Madurai be reimbursed to the government.

The EC said the minister himself admitted that he combined his official visit to Chennai with a personal visit to Madurai for political activities, which amounted to violation of the code.

"The commission has nevertheless taken into consideration the submission made by him that as a first-time MP, he was not aware of all the nitty-gritty of the procedure and that such lapses would not happen in future," it said and added that the commission decided to take a "lenient view" in the matter.

The commission said it was not satisfied with his reply that his visit to Madurai was due to "unexpected personal political exigencies" and was not pre-scheduled one, and also that his office did not bring to his notice that the model code had come into immediate effect.

The EC had issued a show cause notice to Alagiri for violating the model code by clubbing his official visit to Chennai but indulged in political activities in his home district Madurai.

Friday, 18 March 2011

விலைப் பட்டியல் வெளிய்ட்ட்டது தேர்தல் ஆணைய்ம் பிரசாரத்தில் 1000 வாலா பட்டாசு வெடித்தால் வேட்பாளரின் செலவு கணக்கில் ரூ 350 மல்லிகை மாலை ரூ 400; மட்டன் பிரியாணி 100

தேர்தல் விதிகளை மீறுவோர் குறித்து கவனமுடன் இயங்கிவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில், ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு ம்திப்பிட்டு செலவு கணக்கிடுவது என்று விளக்கப் பட்டுள்ளது. இது குறித்து பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் கணக்குச் செலவுகளை நெறிப்படுத்தி, தீவிரமாகக் கண்காணிப்பதுடன்,  தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என்று தேர்தல் ஆணைய்ம் கருதுகின்றது. அதனால் தான் இத்தனைக் கெடுபிடி. நாளிதழ்களும் இந்த வ்கைக் கெடுபிடிகளை விரிவாக மக்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன.



தினமணி வியாழன் 17 மார்ச் 2011 ப். 7
Source: Dinamani

Sunday, 6 March 2011

முதல்வர் கருணாநிதியின் பிரச்சார அறிக்கைகள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள்

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில திமுக தலைவரும் தமிழக் முதல்வருமான மு கருணாநிதி வெளியிடும் விரிவான பிரச்சார அறிக்கைகள், குறிப்பாக ஆளும் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கைகள், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறுபவையாக உள்ளன.  
இவை செய்தியாகுமா? இவற்றை விளம்பரமாக வெளியிடுவது தானே முறை ? அரசின் சாதனைகளை விரிவான அறிக்கையாகத் தரும்போது அவற்றை அப்படியே வெளியிடும்போது, அது செய்தியைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து விவாதங்கள் நடத்த்ப் பட வேண்டும்.
மாதிரிக்காக,  தினத்த்ந்தியிலும், தினகரனிலும் இன்று (06 03 2011) வெளியாகியுள்ள விரிவான பிரச்சார அறிக்கையினை கீழே தருகிறோம்:



அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுகூட தொடங்கப்படவில்லை
தி.மு.க. ஆட்சியில்தான் புதிதாக 12 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன
முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கை


சென்னை, மார்ச் 6-

தி.மு.க. ஆட்சியில்தான் புதிதாக 12 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுகூட தொடங்கப்படவில்லை என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வித்துறை பிரிப்பு

கல்வித் துறை ஒரே துறையாகவும், ஒரே அமைச்சரின் கீழும் செயலாற்றியதை மாற்றி, அதனை இரண்டு துறையாக அமைத்ததும் தி.மு.க. அரசுதான்; கல்விக்காக இரண்டு அமைச்சர்களை நியமித்ததும் தி.மு.க. அரசுதான். இது ஒன்றிலிருந்தே இந்தத் துறைக்காக தி.மு.க. அரசு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

2006-ம் ஆண்டுக்கு முன்னர் ஒரே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கல்வித்துறை என்பது 2006-ல் பள்ளிக் கல்வித்துறை எனவும், உயர்கல்வித்துறை எனவும் தனித்தனித் துறைகளாகப் பிரிக்கப்பட்டு; உயர்கல்விக் கெனத் தனி அமைச்சகமும் புதிதாக ஏற்படுத்தப்பட்டது.

பொது நுழைவுத் தேர்வு ரத்து

கிராமப்புற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையற்ற ஒரு சுமையாகவும், செலவு மிக்கதாகவும் இருந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 5-3-2007 அன்று பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது.

நுழைவுத் தேர்வு இருந்தபோது, 2006-ல் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையின் மூலம் சேர்ந்த கிராமப்புற மாணவர் எண்ணிக்கை 24,670 மட்டுமே. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டபின், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2007-ல் 34 ஆயிரத்து 69 எனவும், 2008-ல் 50 ஆயிரத்து 589 எனவும், 2009-ல் 54 ஆயிரத்து 73 எனவும், 2010-ல் 76 ஆயிரத்து 73 எனவும் அதிகரித்தது.

தமிழ் வழி கல்வி

2006-ல் நுழைவுத் தேர்வு இருந்தபோது, தமிழ்வழியில் பிளஸ்-2 பயின்ற 11 ஆயிரத்து 799 மாணவர்கள் மட்டுமே ஒற்றைச் சாளர முறையின் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர்; நுழைவுத்தேர்வு ரத்து செய்த பிறகு, இந்த மாணவர்கள் எண்ணிக்கை 2007-ல் 19 ஆயிரத்து 966 எனவும், 2008-ல் 34 ஆயிரத்து 39 எனவும், 2009-ல் 35 ஆயிரத்து 434 எனவும், 2010-ல் 54 ஆயிரத்து 460 எனவும் அதிகரித்து; தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் பயன்பெற்றனர்.

2010-2011-ம் கல்வியாண்டு முதல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு; அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் 12 ஆயிரத்து 784 பட்டமேற்படிப்பு மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

2007-ம் ஆண்டு வரையில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் செலுத்தி வந்த 2,500 ரூபாய் கல்விக்கட்டணம் 2008-2009-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு; 2010-2011-ம் ஆண்டு வரையில் 63 ஆயிரத்து 192 மாணவ மாணவியர் பயனடைந்தனர்.

கல்வி கட்டணம் விலக்கு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களிக்கப் பட்டுள்ளது.

அரசுக் கல்லூரி மாணவர்களின் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுத்திட அகல்கற்றையுடன் கூடிய இணையதள வசதிகள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் அரசுக் கல்லூரிகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 2 கோடியே 98 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்ச் செலவில் 27 அரசுக் கல்லூரிகளுக்கு 681 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னோடி திட்டம்

சென்னை மாநிலக் கல்லூரியின் மாலை நேரப் பகுதிப் பிரிவில் 2007-2008 கல்வியாண்டு முதல் இந்தியாவிலேயே ஒரு முன்னோடித் திட்டமாக செவித்திறன் குறைந்தோர்க்கு தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பி.காம். (பொது), பி.சி.ஏ. (கணினி பயன்பாடு) ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன.

அரசு பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுயநிதி பாடப்பிரிவுகள் அனைத்தும் பொதுவகை பாடப்பிரிவுகளாக மாற்றப்பட்டு, கல்விக் கட்டணம் குறைந்து, ஏழை மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிவகுக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் குறைப்பு

2006-ம் ஆண்டு வரையில் அரசு பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர் செலுத்தி வந்த கல்விக் கட்டணம் 12,550 ரூபாய் 2006-2007-ம் ஆண்டு முதல் 7,550 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை இந்தியாவிலேயே முதன்முறையாக 2010-2011-ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு; அரசுக்கு 168 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் சேர்ந்து பயிலும் 67,405 மாணவ மாணவியரும்; இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயிலும் 10,750 மாணவ மாணவியரும் பயனடைந்தனர்.

பொறியியல் கல்லூரிகளில் மேலும் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில்வதற்கு உதவும் வகையில் 2008-2009-ம் ஆண்டு முதல், பொறியியற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கானக் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் குறைத்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.

சலுகை கட்டணம்

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகம் 2007-2008-ம் ஆண்டு முதல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; 2010-2011-ம் ஆண்டு வரை 33,250 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

2006-ம் ஆண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில்தான் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன.

இலவச பயண அட்டை

ஆனால், 2007-2008-ம் ஆண்டு முதல் தி.மு.க. அரசினால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பயணப் பேருந்து அட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; 2009-2010-ம் ஆண்டு வரையில், 4,35,356 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

2006-ம் ஆண்டு வரை ஒரு கல்லூரியில் சேர்க்கைபெற ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. 2007-2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கல்லூரியையும் தனி அலகாகக் கொண்டு ஒரு மாணவன் தான் விரும்பும் பாடப்பிரிவுகளைக் குறிப்பிட்டு ஒரேயொரு விண்ணப்பம் அளித்தால் போதுமானது என ஆணையிடப்பட்டு; அதன்படி, மாணவர்களின் தகுதி அடிப்படையில் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவு கலந்தாய்வு முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெற்றோரும் மாணவரும் பெரும் பயன் எய்தி வருகின்றனர்.

ஒற்றைச்சாளர முÛ
2007-2008-ம் ஆண்டு முதல் அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டு; கலந்தாய்வு மூலம் மாணவ மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். 2006-2007-ம் ஆண்டு முதல் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாற்று முறை நடைமுறைப்படுத்தப்பட்டு; ஆண்டுதோறும் ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.

2009-2010-ம் ஆண்டு முதல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் மாற்றுமுறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; ஆண்டுதோறும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து பயனடைகின்றனர்.

அரசு ஒதுக்கீடு

2006-க்கு முன்னர் சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளில் 30 விழுக்காடு இடங்களும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இருந்தன. சுயநிதி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினருடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக 2006-2007-ம் ஆண்டு முதல் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்கள் எனவும், சிறுபான்மையல்லாத கல்லூரிகளில் 65 விழுக்காடு இடங்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டு; ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுகின்றனர்.

அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு நிதியுதவியுடன் நடைபெறும் பல்கலைக் கழக உறுப்புப் பொறியியல் கல்லூரிகளில் 2005-2006-ம் கல்வியாண்டில் 4,917 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, தி.மு.க. அரசு தொடங்கிய பொறியியல் கல்லூரிகளால் 2010-2011-ம் கல்வியாண்டில் 12,142 ஆக அதிகரித்தது.

செம்மொழி மாநாடு

2010-ம் ஆண்டு ஜ×ன் மாதத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த தருணத்தில், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தாய்மொழியில் கற்க - தமிழ்மொழி மூலமாகக் கற்க வகைசெய்து இந்த அரசு ஆணையிட்டு; இந்த ஆண்டில் இப்பாடப் பிரிவுகளில் 2010-2011-ல் நிர்ணயிக்கப்பட்ட 1,400 இடங்களில் 1,378 மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.

2009-2010-ம் கல்வியாண்டுவரை, பொறியியல் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு; விடைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, 2010-2011-ம் ஆண்டு முதல், ஆங்கிலம் அல்லது தமிழில் வினாத் தாள்கள் வழங்கவும், விடைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் முறையை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் 12-ம் வகுப்பினை தமிழ்வழியில் படித்து, பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு நல்ல பயனை அளிப்பதாக அமைந்துள்ளது.

செம்மொழி பாடத்திட்டம்

இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளில் தமிழை ஒரு பாடப் பிரிவாகப் படிக்காமலேயே இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டங்களைப்பெற முடியும் என இதுவரை இருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2008-2009-ம் ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாக எடுத்து அதில் தேர்ச்சி பெறவேண்டும் என ஆணையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

"தமிழகத்தின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில், தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெறுவதற்கு ஆவன செய்யப்படும்'' எனக் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கேற்ப; செம்மொழிப் பாடத் திட்டம் பல்கலைக் கழகங்களின் வரம்புக்குட்பட்ட கல்லூரிகளில் 2010-2011 (இரண்டாம் பருவம்) முதல் பி.காம். பி.சி.ஏ, பாடப்பிரிவுகள் நீங்கலாக அனைத்துப் பாடப் பிரிவுகளிலும்; 2011-2012 முதல் பி.காம். பாடப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

புதிதாக பொறியியல் கல்லூரிகள்

நாடு சுதந்திரம் அடைவதற்குமுன் அரசு சார்பில் 2 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன; 2005-2006-ம் ஆண்டுவரை 6 பொறியியற் கல்லூரிகள்தான் செயல்பட்டன. 2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றுகூட தொடங்கப்பட வில்லை.

ஆனால், 2006-ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின், ஐந்தாண்டுகளில் திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், அரியலூர், ஆரணி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்டு தற்போது 18 அரசு பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

சட்ட திருத்தம்

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாக முந்தைய அரசால் மாற்றப்பட்டன. இத்திட்டத்தில் எதிர்பார்த்த பயன்களை அடைய முடியவில்லை. இதனால் நிலவிவந்த குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்யும் முகத்தான் அரசு கல்லூரிகளுக்கு முன்னர் இருந்த தகுதியினை மீளவும் அளிப்பதென இந்த அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில், அனைத்து உறுப்புக் கல்லூரிகளும் இனிமேல் மீண்டும் முழு அளவிலான அரசு கல்லூரிகளாக செயல்படுவதற்காக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்கள் திருத்தப்பட்டன.

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


முன்னதாக விவசாயிகளுக்கு திமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி முதல்வர் மு கருணாநிதி வெளியிட்டு, தினகரனில் முழுமையாக வெளியிடப் பட்ட அறிக்கையினை இங்கே அப்படியே தருகின்றோம்:

 விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள்

சென்னை : விவசாயிகளுக்காக திமுக அரசு செய்துள்ள திட்டங்களையும்
சலுகைகளையும் முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழ்ச்  செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தெரிவித்தபடி ஏற்காட்டில் 75 ஏக்கரில்  குறிஞ்சிப் பூங்கா, திண்டுக்கல் சிறுமலைப் பகுதியில் 25 ஏக்கரில் முல்லைப்  பூங்கா, தஞ்சை சாக்கோட்டையில் 21.47 ஏக்கரில் மருதம் பூங்கா, நாகை திருக்கடையூரில் 14.61 ஏக்கரில் நெய்தல் பூங்கா, ராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு கிராமத்தில் 25 ஏக்கரில் பாலைப் பூங்கா என ஐந்திணை மரபணுப்   பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரூ. 37 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டு  பணி நடைபெறுகிறது.

சென்னை கதிட்ரல்  சாலையில் ரூ.8 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாதவரத்தில் 28.16 ஏக்கர் பரப்பில் ரூ.5  கோடியே 93 லட்சம் செலவில் அலங்காரத் தோட்டம் மற்றும் செயல்விளக்கப் பூங்கா,
 குற்றாலத்தில் 36.78 ஏக்கர் பரப்பில் ரூ.5.92 கோடியில் சுற்றுச்சூழல்
பூங்கா, ஏற்காட்டில் 47.25 ஏக்கரில் 11.26 கோடி செலவில் தாவரவியல் பூங்கா  ஆகியவை அமைக்கப்படுகின்றன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, அண்ணா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை <br>ஸீ 1.59 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன.

5 ஆண்டுகளில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், அறுவடை இயந்திரங்கள் முதலிய வேளாண் இயந்திரங்கள் வாங்க 36813 விவசாயிகளுக்கு ஸீ86 கோடியே 71 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp; குறைந்த வாடகையில் விடுவதற்காக 25 கதிர் அறுவடை இயந்திரம், 50 டிராக்டர்கள் ரூ.6 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளன. தானிய விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் இழப்பினைக் குறைக்க ரூ.4.80 கோடி
செலவில் 200 உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முந்திரிக்கென
பண்ருட்டியில் ரூ.16.54 கோடி மதிப்பீட்டில் வேளாண் ஏற்றுமதி மண்டலம்
ஏற்படுத்தப் பட்டு, 1.53 கோடிக்கு முந்திரி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
 

திருநெல்வேலி, காவல் கிணற்றில் ஸீ1.63 கோடி செலவில் மலர் ஏல
மையம்; அமைக்கப்பட்டுள்ளது. 2009;2010ல் நாளொன்றுக்கு 85756
மதிப்புள்ள 1500 கிலோ மலர்கள் 124 விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கலூரில் வெங்காயத்திற்கு, கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கு, பாலக்கோட்டில் தக்காளி, தேனி ஓடைப்பட்டியில் திராட்சைக்கென குளிர்பதன வசதியுடன் வணிக&nbsp; வளாகம் தலா ஒரு கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 4 கோடி செலவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை
மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டைக்கு அருகில் பொன்னவராயன்கோட்டை, உக்கடை கிராமத்தில் தென்னை வணிக வளாகம்
அமைக்கப்பட்டு வருகிறது.  சென்னை நாவலூர், மதுரை முக்கம்பட்டி,
பெருந்துறையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர விளைபொருளுக்கு நவீன உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி பகுதியில் சேகரிப்பு மைய வசதிகளுடன் கூடிய விற்பனை முனையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சேலம் மேச்சேரியில் தக்காளி
குளிர்பதனக் கிட்டங்கி, திருப்பூர் பெதப்பம்பட்டியில் தேங்காய் வணிக வளாகம்  ஆகியவற்றுடன் 1.50 கோடி செலவில் 10 இடங்களில் ஊரக வணிக மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி, நாமக்கல் மோகனூர், தூத்துக்குடி திருவைகுண்டம், தேனி சின்னமனூர் ஆகிய இடங்களில் தலா 50 லட்சம்   ரூபாய் செலவில் வாழை பழுக்க வைக்கும் நான்கு கூடங்கள், கோவை காரமடையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மலைக் காய்கறிகளுக்கென விற்பனை வளாகம், மதுரையில்
36 லட்சம் ரூபாய் செலவில் நெல் வணிக வளாகத்தில் கூடுதல் கடைகள்
ஆகியவற்றுடன் ரூ.7.81 கோடி செலவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் காய்கறி வணிக வளாகம் ரூ.85 கோடி ரூபாய் செலவில் அமைக்க 30 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
 சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.132.63 கோடி முதலீட்டில் 31 வேளாண் வணிக நிறுவனங்களுக்கு தொழில் தொடங்குவதற்காக 12.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2008;2009ம் ஆண்டு 2025 குழுக்களுக்கு, குழுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் தொழில் தொடங்க 2.19 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 10116 குழுக்களை சார்ந்த 1.50 லட்சம் பண்ணை மகளிர் பயன்பெற்றனர். மேலும் 223 பண்ணை மகளிர் குழுக்களுக்கு 25% மானியத்தில் பண்ணைக் கருவிகள் ஒரு கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது. ;தனியார்த்
 துறையில் 9 புதிய சர்க்கரை வளாகங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதில் 8 சர்க்கரை ஆலைகள், உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. ;வயலிலிருந்து  ஆலை வரையான தூரத்திற்கு வாகனக் கட்டணத்தை ஆலைகளே ஏற்கின்றன. ஆலைகளில்,
இணைமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தமிழகம் முன்னோடி யாகவுள்ளது. 19 ஆலைகளில் 404.19 மெகாவாட் திறனுடைய இணைமின் உற்பத்தி நிலையங்களும், 3 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் சிறிய இணை மின் நிலையங்களும் உள்ளன. ரூ.1125.63 கோடி செலவில் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் 183 மெகாவாட் திறன்
கொண்ட இணைமின் உற்பத்தி நிலையங்கள் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் அமைக்கப்படுகின்றன. <br><br>ஓராண்டிற்கு 960 லட்சம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யக்கூடிய 9 உற்பத்தி நிலையங்கள் நிறுவப் பட்டுள்ளது. எரிசாராய உற்பத்தி பற்றாக்குறையினால் 5%; எத்தனால் கலந்த
பெட்ரோல் வழங்க இயலாத நிலை உள்ளது. புதிய நிலையங்கள், உற்பத்தியைத் தொடங்கும்போது 5% எத்தனால் கலந்த பெட்ரோல் மாநிலத்தில் முழு அளவில் கிடைக்கும்.&nbsp; எரிசாராயம் மற்றும் எத்தனால் ஆலைகள், செய்யாறு மற்றும் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் தலா 36 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படுகின்றன. சேலம் மற்றும் அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் 30 கிலோ லிட்டர் எரிசாராய உற்பத்தித் திட்டம் ஆகஸ்ட் 2008ல் தொடங்கப்பட்டது. மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
 15.10.2010ல் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த அரவைப் பருவம் முதல்
செயல்படும். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு 2009;2010 சர்க்கரைப் பருவத்திற்கு சிறந்த தொழில்நுட்பச் செயல் திறனுக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியசிவா ஆலை, கரும்பு மேம்பாட்டிற்காக சேலம்; ஆலை, நிதி மேலாண்மைக்காக செய்யாறு ஆலைக்கு முதல் பரிசு வழங்கியுள்ளது. விவசாயிகள் நிறைந்த நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட மாணவர்கள் பயன்பெற, நாகை கீவளூரில் வேளாண்மைக் கல்லுரியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
ஐந்தாண்டுகளில் 56 புதிய பயிர் ரகங்கள், 20 பண்ணைக் கருவிகள், 20
மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, வேளாண்மை உற்பத்தி பெருகியுள்ளது.;இதைப்போலவே, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வேளாண்மை அலுவலர்களுக்கும் அடுக்கடுக்கான பல உதவிகளை செய்துள்ளது. 1972ல் திமுக ஆட்சியில்தான் வேளாண் மை அலுவலர்களுக்கு கெஜட்டட் தகுதி வழங்கப்பட்டது. 1989ல் கால்நடை உதவி மருத்துவர், உதவிப் பொறியாளர்களுக்கு இணையாக வேளாண்மை அலுவலர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த 131 உதவி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியமளித்து உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டது.;2007ல் துறை மறுசீரமைப்பில் 509 வேளாண்மை அலுவலர்கள் பணி இடங்களை உதவி வேளாண்மை இயக்குனர்களாகவும் 512 உதவி விதை அலுவலர் பணி இடங்களை துணை வேளாண்மை அலுவலர்களாகவும், 514 உதவி வேளாண்மை அலுவலர் பணி இடங்களை உதவி விதை அலுவலர்களாகவும், அதே போல 399 உதவி மண்வளப்
பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை இளநிலைப் பொறியாளர்களாகவும், பொறியியல் பட்டம் பெற்ற 54 உதவி மண்வளப் பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை உதவிப் பொறியாளர்களாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ;பணி நியமனத் தடைச்
சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 2632 பணி இடங்களுக்கு நேரடி நியமனமும், வேளாண் துறையில் 3544 அலுவலர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் <br>கருணாநிதி கூறியுள்ளார். 

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=30826&id1=4